Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-11

"சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை சுந்தரனார் வசிஷ்ட மகா ஷியாருக்கு புல்லவே காணக் குற ஜாதியப்பா புகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளை வெல்லவே அனுலோமன் என்னலாகும் வேதாந்த கோரக்கர் சித்து தாமும் நல்லதொரு பிரகாசமான சித்து " - போகர் 7000 - கோரக்கர் வசிட்டரின் மகன் என்று போகர் தனது போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார். சட்டை முனி, கொங்கணவர் போன்றோரின் நெருங்கிய நண்பாராக இருந்ததாய் தனது நூலான கல்ப போதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற ஊரில் இவர் தவம் செய்ததாகவும் அதனால் அந்த ஊருக்கு கோர்க்காடு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு எளிமையாகாவும் பொருள் புரிந்து கொள்ள இலகுவாகாவும் உள்ளது குறிப்பிட தக்கது. ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. இவர் பேரூரில் சித்தியடைந்ததாக சொல்லப் படுகிறது.
அண்டசராசரங்களும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு காகபுஜண்டரின் எண்ணற்ற சீடர்களுள் ஒருவர் கோரக்கர். இந்த சித்தர் கொல்லிமலையின் அதிபதியாவார் (கொல்லிமலையானது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது). பதினெண்சித்தர்களில் மிகப்பெருமை பெற்றவர் இவர். பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்ட மிக உயர்ந்த உயிர்மருந்துகளைத் தயாரித்த சித்தர் இவர் மட்டுமே. அட்டமாசித்திகளையும் பூரணமாகப் பெற்றவர் இவர். "கஞ்சா" என்னும் மூலிகையை அடிப்படை குருமூலிகையாகக் கொண்டு மிக உயர்ந்த மருந்துகளைத் தயாரித்து வைத்தியம், வாதம், யோகம், மற்றும் ஞானம் போன்றவழிகளை உலகிற்குப் பூரணமாக உணர்த்தியவர் கோரக்கரே! எனவே தான் கஞ்சாவிற்கு கோரக்கர் மூலி என்கிற தனிப்பெயரொன்றுண்டு. பல சித்தர்கள் தேவரகசியங்களை வெளிப்படையாக ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்ததை அறிந்த பதினெண்சித்தர்களின் தலைவராக விளங்கக்கூடிய அகத்தியர், அனைத்து சித்தர்களையும் ஒன்றுகூடி அவர்கள் எழுதிய அனைத்து ஓலைச்சுவடிகளையும் கைப்பற்றி ஒரு பேழைக்குள் வைத்துப்பூட்டி ஒரு பெரும் பாறையில் வைத்து மூடிவிடும்படி கோரக்கருக்கு கட்டளையிட்டார். அவ்வாறே, அகத்தியரின் வார்த்தையை மதித்த கோரக்கர் பெரும்பாறையொன்றினுள் அனைத்து ஓலைச்சுவடிகளையும் அடைத்து மறைத்து வைத்துவிட்டு அதன் சாவியை மட்டும் (திறவு கோல்) தானே வைத்துக் கொண்டார். எனவே தான் தற்காலத்தில் சொற்ப அளவில் சித்தர் நூல்கள் உலாவிக் கொண்டு வருகின்றன. பிரம்ம சுவடிகளைக் காண விரும்பும் சித்தர்களுக்கு வசதியாக அவர்களுக்கு மட்டும் "சூட்சுமத்திறவுகோல்" மந்திரத்தை கோரக்கர் உபதேசித்தார். எனவே, இன்றளவும் குருமுகாந்திரமாக தீட்சை பெற்று சித்தரானவர்கள் கோரக்கரை வழிபட்டால்தான் சுருதியின் உண்மை நிலையை உணரமுடியும் என்கிற நிலை சித்தர்களின் சாபத்தால் விளங்கிவருகின்றது. கோரக்கர் குண்டம்: கொல்லிமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கோரக்கர் பல்லாயிரம் உயிர்மருந்துகளையும், சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன் தான் ஞானத்தாலுணர்ந்த தேவரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு வகைப்பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் "கோரக்கர் குண்டம்" என்னும் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார். கோரக்கரின் நூல்கள்: கோரக்கர் பலநூல்களை எழுதியுள்ளார், அவரது நூல்கள் பல வைத்தியம், வாதம், யோகம் மற்றும் ஞானம் என்னும் நான்கு பாடப்பிரிவுகளை அடிப்படியாகக் கொண்டதாகும். மானிடரால் கண்டுபிடிக்கப்பட்டு அச்சேரிய அவரது நூல்கள் பின்வரும் நான்கு நூல்கள் மட்டுமே. 1. கோரக்கர் சந்திரரேகை. 2. கோரக்கர் ரவிமேகலை. 3. கோரக்கர் முத்தாரம். 4. கோரக்கர் மலைவாகடம். கோரக்கரின் கர்மசித்தி மூலமந்திரம் " ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீகோரக்க தேவாய சர்வசித்தர் அனுகிரகாய தேவாய நமஹ " கோரக்கரின் ஞானசித்தி மூலமந்திரம் " ஞானபிரம்ம ரூபமயம் ஆனந்தசித்தி கர்மமயம் அமிர்தசஞ்சீவி ஔடதமயம் கோரக்கம் உபாஸ்மகே!"

கோரக்கர் சித்தர்.

                             சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்  கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள். ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார். மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள். மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.
                                அவளோ உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதேஎன்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள். சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார். பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண். மச்சேந்திரர் சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய் என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று கோரக்காஎன்று கூப்பிட்டார். அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால் கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார். ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார். வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும் என்றாள். உன் குரு வடை கேட்டதால் போயிற்று இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார். இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார். கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்ப பெறுமாறு செய்தார். ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார். இவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார். மச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள் நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம் என்று அழைத்தார். இவர்களுக்கு வழிசெலவிற்கு வேண்டும் என்று பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு கல்லை வைத்தார். மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார். அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதேஎன்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார். பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம் நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு அவர் இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்ல தக்கது ஒன்றுமில்லை என்றார். கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார். வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன் என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் கிண்என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார். அல்லமர் கோரக்கரை நோக்கி சரி, உன் திறமையை நிருபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டுஎன்று கூறினார். கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர். இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் கோரக்கர் வைப்புஎன்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர். இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன. கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள். யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.கோரக்கர் மூலிகை’ (கஞ்சா), ‘பிரம்மபத்திரம்’ (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, “இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார். கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள். இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள்.கோரக்கர் இயற்றிய நூல்களாக இப்பொழுது கிடைப்பவை:1. கோரக்கர் சந்திர ரேகை2. கோரக்கர் நமநாசத் திறவுகோல்3. கோரக்கர் ரக்ஷமேகலை4. கோரக்கர் முத்தாரம்5. கோரக்கர் மலைவாக்கம்6. கோரக்கர் கற்பம்7. கோரக்கர் முத்தி நெறி8. கோரக்கர் அட்டகர்மம்9. கோரக்கர் சூத்திரம்10. கோரக்கர் வசார சூத்திரம்11. கோரக்கர் மூலிகை12. கோரக்கர் தண்டகம்13. கோரக்கர் கற்ப சூத்திரம்14. கோரக்கர் பிரம்ம ஞானம்இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.கோரக்கர் சித்தர் தியானச் செய்யுள்சந்திர விழியும் மந்திர மொழியும்கொண்ட சிவபக்தரேசாம்பலில் தோன்றிய தவமணியேவிடை தெரியா பாதையில்வீறாப்பாய் நடைபோடும் எம்மைகைப்பிடித்து கரை சேர்ப்பாய்கோரக்க சித்த பெருமானே.கோரக்கர் சித்தரின் பூசை முறை தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையை மஞ்சளிட்டு மெழுகி கோலமிட்டு, மஞ்சள், குங்குமம், மலர்களால் அலங்கரித்த குத்துவிளக்கை வைத்து தாமரைத் தண்டு அல்லது வாழைத்தண்டு திரி போட்டு ஐந்தெண்ணை ஊற்றி ஐந்து முக விளக்கேற்ற வேண்டும். பலகையின் மேல் சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து படத்திற்கு பல வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லி, தாமரைப்பூ, சம்பங்கி அழகிய மலர்களால் பின்வருமாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்து வணங்க வேண்டும்.
 பதினாறு போற்றிகள்
1. முருகக் கடவுளின் பிரியரே போற்றி!
2. வாக்கில் சுத்தமுடையவரே போற்றி!
3. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
4. கஷ்டங்களை போக்குபவரே போற்றி!
5. அடுப்புச் சாம்பலில் தோன்றியவரே போற்றி!
6. ஆசைகளற்ற அருளே போற்றி!
7. மாயைகளை களைபவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. மாசற்ற மனமே போற்றி!
10. புகழும், அருளும் நிறைந்தவரே போற்றி!
11. ஞான வழி காட்டுபவரே போற்றி!
12. ஞானஸ்கந்தரே போற்றி!
13. ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி!
14. காவி வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
15. உலக மக்களில் நண்பரே போற்றி!
16. உறுதியான மனதிடம் உள்ள கோரக்க சித்தரே போற்றி! போற்றி! என கூறி வணங்க வேண்டும்.
      பிறகு மூலமந்திராமான ஓம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த ஸ்வாமியே போற்றி!என்று 108 முறை சொல்லி வழிபடவேண்டும். நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பொறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுச் சக்கரை கலவை வைத்து வழிபடவேண்டும். மனமுருக வேண்டி நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும்.
கோரக்கர் சித்தர் பூசை பலன்கள்
1. ஜாதகத்திலுள்ள சனி தோஷங்கள் வலகி நன்மை உண்டாகும்.
2. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சனைகள் தீரும்.
3. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும்.
4. எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
5. படிப்பில் உள்ள மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.
6. நன்மக்கட் பேறு கிடைக்கும்.
7. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
8. பிரம்மஹத்தி தோசம் நீங்கும்.
9. வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.
பூசைக்கு ஏற்ற நாள் கார்த்திகை நட்சத்திர நாள், நல்ல பலன் தரும்.

தேரையர்.

தேரையர்     அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்த வைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சை முறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது.     இவர் பதினாறு நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் வைத்திய காவியம், இரசவர்க்கம், கருக்கிடை, வைத்திய சிந்தாமணி, மருத்துவ பாரதம் என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். மேலும் பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி நூல், நெய்க்குறி நூல், தயில வர்க்க சர்க்கம், சிகிச்சை ஆயிரம், யமக வெண்பா, நாடிக் கொத்து, நோயின் சாரம் முதலிய நூல்களும் பல உள.தேரையர், சித்தர்களின் கூட்டத்தில் மிகவும் தனித்துத் தெரியும் ஒருவராவார். இவர் அளவுக்கு சோதனைகளைச் சந்தித்த ஒரு சித்த புருஷரைப் பார்ப்பது அரிது. சோதனைகளே இவரை சாதனையாளராக ஆக்கின. மனித வாழ்வில் போட்டி, பொறாமை, மன எரிச்சல், ஆகியவை சராசரி மனிதர்களின் குணங்கள். ஆனால் தேரையர் வரலாற்றைப் பார்க்கும் போது, சித்த புருஷர்களால்கூட போட்டி, பொறாமை போன்றவற்றை வெல்ல முடியாது போலும் என்று நாம் எண்ண வேண்டியுள்ளது. வாழ்க்கை தேரையர் என்பது, காரணப் பெயர். உண்மையில் இவரது இயற்பெயர், ராமதேவன் என்கிறது, அபிதான சிந்தாமணி. ராமதேவனின் ஞானகுருவின் பெயர் தர்மசௌமினி. அவர் ஒரு சித்தரல்லர், முனிவர்! சித்தர் வேறு, முனிவர் வேறா? என்று கேட்கலாம். ஆம்! முனிவர்கள் வேதவழி நடப்பவர்கள். மந்திர உபதேசம் பெற்று யாகம் வளர்த்து வரம் பெற உழைப்பவர்கள். தர்மநெறிதான் இவர்கள் நெறி_ஆயினும் பெயர் புகழ் விளங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். ஆனால், சித்தர்கள் இவர்களில் பெரிதும் மாறுபட்டவர்கள். வேதங்களை இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை. இவர்களுக்கு உள்ளம்தான் கோயில்_ உடம்புதான் ஆலயம். உடம்பை வளர்த்து அதன் வழி உயிரையும் வளர்ப்பவர்கள். வரங்களுக்காக தவம் இயற்றுவது இவர்கள் செயலல்ல. தன்னையறிந்தாலே போதும், தானாக தெய்வமறியும் நிலை வந்துவிடும் என்பது இவர்கள் சித்தாந்தம். குறுகிய காலத்திலேயே, ராமதேவன் ஒரு சித்தயோகி  என்பதையறிந்து, தன்னிடம் இருந்தால் காலம்தான் வீணாகும் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார். காரணம், தர்மசௌமினியிடம் ராமதேவன் கேட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை. ‘‘குருதேவா..... ஆதிசக்தியிடம் வரம்வேண்டி தவம் செய்கிறீர்கள். இடையில் சூரியதேவனுக்கு ஒரு தனி வணக்கமுறை, பரிவார தேவதைகளுக்கு ஒரு தனி வணக்கமுறை; பின் இறுதியாக மூல இறைசக்தியிடம் வேண்டல் என்று, உங்கள் தவ நெறியில் பல கிளைகள். நமக்கெல்லாம் மேலான ஒரு சக்தி ஆதிசக்தி என்றால், அதைப் படைத்தது யார்? ஒன்று இருக்கிறது என்றால், அதை ஒருவர் படைத்திருக்க வேண்டுமல்லவா? தானாக ஒன்று எப்படி உருவாக முடியும்?’’ என்று பலவிதமாக ராமதேவன் கேட்ட கேள்விகள், தர்மசௌமினியை திணறடித்துவிட்டன. ‘‘ராமதேவா.... உனக்கான பதிலை அகத்திய முனிவரால்தான் தரமுடியும். அவர் ஒருவர்தான் முனிவருக்கு முனிவர்_சித்தருக்கு சித்தர்’’ என்று தர்மசௌமினி, ராமதேவனுக்கு வழிகாட்ட, ராமதேவனும் அகத்தியரின் பாதங்களில் போய் விழுந்து மாணாக்கராய் ஏற்றுக்கொள்ளச் சொன்னார். ஆனால், அகத்தியர் அவ்வளவு சுலபத்தில் சம்மதிக்கவில்லை. தர்மசௌமினி காரணம் இல்லாது ராமதேவனை தன்னிடம் அனுப்பவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட அகத்தியர், ராமதேவனை சற்று எட்டவே நிறுத்தி, அவரை சோதிக்க ஆரம்பித்தார். உண்மையில் சித்தஞானம் பெற விரும்பும் ஒருவன் அலட்சியம், அவமானம் முதலியவற்றைச் சந்தித்து அதில் தேறி, பொறுமையுடன் திகழ்ந்தாலே அவனால் அநேக நுட்பங்களை விளங்கிக்கொள்ள முடியும். சராசரி புத்தி உள்ளவர்கள் அலட்சியப்படுத்தப்படும்போதே பதிலுக்கு அலட்சியம் காட்டி ஓடிவிடுவார்கள். உண்மையான ஞானிகள் எவ்வளவு தடைவந்தாலும், அலட்சியப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து குருபக்தியோடு பொறுமையாக இருப்பர். ராமதேவனிடமும் கொஞ்சம், ‘நான்இருந்ததாலேயே அகத்தியர், அவரை சற்று தூரத்திலேயே நிறுத்தினார். இருப்பினும், ராமதேவன், அகத்தியரின் வைத்திய ஞானம் முழுவதையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தெளிந்து விட்டார். சொல்லப் போனால், அவர் குருவை வெல்லும் ஒரு சிஷ்யன் என்கிற அளவிற்குத் தேறிவிட்டார். இப்படித் தேறியதாலேயே காலமும் இவரை தேரையர் ஆக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளித்தது. காசிவர்மன் என்று ஓர் அரசன். கடுமையான தலைவலியால் நிம்மதியை இழந்து விட்டான். அரண்மனை வைத்தியர்களால் அரசனின் தலைவலியில் அணுவளவைக்கூட குறைக்க முடியவில்லை. இறுதியாக, விஷயம் அகத்தியர் காதுகளுக்குப் போனது. தனது சிஷ்யர்களுடன் அவரும் காசிவர்மனைச் சந்தித்தார். உச்சந்தலையில், அதாவது கபாலத்தில் குடைச்சல் உள்ளது என்று காசிவர்மன் கூறியதை வைத்து, அவனது வியாதி தலைவலியில்லை என்பதை தீர்மானித்துவிட்டார். கபாலத்தில் குடைச்சல் என்றால் கபாலத்தைத் திறந்து பார்த்தால்தான் கண்டறிய முடியும். அனேகமாக கபாலத்தில் வெப்பவாயு,சமயங்களில் மேலேறி பின் அங்கிருந்து வெளியேற வழியின்றி அங்கேயே அடைந்து கிடக்கும். இதுகூட வலியாக வெளிப்படும். அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று அனுமானித்த அகத்தியர், காசிவர்மனின் கபாலத்தை ஒருவகை மெழுகைப் பயன்படுத்தி வலியே இல்லாமல் பிளந்துவிட்டார். உள்ளே பார்த்தவருக்கு, பலத்த ஆச்சரியம். காசிவர்மன் சுவாசிக்கும்போது காற்றோடு காற்றாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு தேரைக்குஞ்சு, மூளைவரை சென்று அங்கே அப்படியே பாறைத்தேரைபோல தங்கிவிட்டது. அதனுடைய அசைவுதான் காசிவர்மன் தலையில் வலியாக உணரப்பட்டிருக்கிறது. தேரையை வெளியே எடுத்து கபாலத்தை மூடினால் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் தேரையோ, திறந்த கபாலம் வழியாக வெளிச்சம் பட்டதால் இறுகப் பிடித்துக் கொண்டது. அதைக் குத்தி வெளியே எடுக்கமுனைந்தால், மூளைத்திசுக்கள் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க என்ன வழி என்று தெரியாமல் அகத்தியர் தவித்தபோது, ஒரு சிறு பாத்திரத்தில் நீருடன் கபாலம் அருகில் வந்து நின்ற ராமதேவன், அந்த நீரில் அசைவை உருவாக்க... சிறிது நேரத்தில் தேரை மூளையை விட்டுவிட்டு அப்படியே தண்ணீர்ப் பாத்திரத்துக்கு தானாகத் தாவியது. அகத்தியரும் வேகமாக கபாலத்தை மூடி மெழுகிட்டார். சீடன் ராமதேவனின் இந்த சமயோசிதச் செயல், அகத்தியரை மகிழச் செய்தது. அதே சமயம், தேரையை வெளியேற்றுவதில் அகத்தியரிடம் பாராட்டுப் பெற்றதால், ராமதேவனும் தேரையர் ஆனார், அதன்பின் அகத்தியர் தன் ஆயுர்வேத வைத்யமுறை அவ்வளவிற்கும் அணுக்க சீடராக தேரையரைத்தான் கருதினார். இன்னொரு சம்பவம், தேரையரை வைத்ய சிரோன்மணியாகவே ஆக்கிவிட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவனுக்கு முதுகில் கூன் விழுந்துவிட்டது. அதை நீக்கும் வழிவகை தெரியாமல் வைத்ய உலகமே தவித்தது. தேரையர், அகத்தியர் ஆஸ்ரமத்தில் தற்செயலாக அதற்கான மருந்தைக் கண்டறிந்தார். மூலிகைச்சாறினை சட்டியில் ஊற்றிக் காய்ச்சிய போது அதன் ஆவி சட்டிக்கு நேர் மேல் உள்ள ஒரு வளைந்த மூங்கிலின் வளைமுனையில் பட்டிட, அந்த வளைந்த முனை பட்டென்று வளைவை விட்டு நேர்பட்டது. சப்தம்கேட்டு நிமிர்ந்து பார்த்த தேரையர், அதைப்பார்த்து ஆனந்தத்தில் எகிறிக் குதித்தார். மூங்கிலும் மனிதனும் பல விதங்களில் ஒன்றானவர்கள். இரண்டுக்குமே சுவாசம் பொது. இரண்டுமே சத்தம் எழுப்பும். இரண்டுமே உயர்ந்தெழுந்து வளர்ந்து, பின் சாய்ந்து முதுமை அடைபவை. மனிதனோடு மரணத்தின்போது மயானம்வரை வருவது மூங்கிலும்தான்... மூங்கில் மற்ற மரங்களைப் போல என்றும் பசுமையாக இருக்கக்கூடியதும் அல்ல. தனித்தும் இது வளராது. கூட்டமாகவே வளர்வது. இப்படி மனித வாழ்வுக்கும் மூங்கிலுக்கும் அனேக சம்பந்தங்கள். இந்நிலையில் மூலிகைச் சாறின் ஆவி, வளைமூங்கிலையே நிமிர்த்துகிறது என்றால், இந்தச் சாறு எதைத்தான் நிமிர்த்தாது? தேரையரும், காய்ச்சிய சாறினை பாண்டிய மன்னனுக்குப் பூசிட, அவனது  கூனும் நிமிர்ந்தது. இதனால் அரசன், தேரையரை அகத்தியருக்குச் சமமாக பாவித்தான். இது, அகத்தியரின் மற்ற சிஷ்யர்களுக்குள் பொறாமையை மூட்டியது. அவர்களும் அகத்தியரிடம் கோள் மூட்டினர். அகத்தியரும் தேரையரை அழைத்து, ‘‘இனி உனக்கு என் தயவு தேவையில்லை’’ என்று கூறி, தனித்துச் செயல்படச்சொல்லி அனுப்பிவிட்டார். ஆலமர நிழலில் சிறிய தாவரங்களால் வளரமுடியாது. அதேபோல், தேரையர் தன் அருகில் இருந்தால் வளர முடியாது என்று அகத்தியரும் நினைத்தார். அவர் எண்ணியது மிகச்சரி. தேரையர் தனித்துச் சென்று பல அரிய மருந்துகளைக் கண்டறிந்தார். தன் முனைப்பை நூலாகவும் எழுதினார். பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள் அவற்றுள் சில. வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் என்றெல்லாம் அவர் எழுதிய நூல்களே, இன்றைய ஆயுர்வேத வைத்தியத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன. ஒருமுறை, வயிற்றுவலி வந்த ஒருவருக்கு அகத்தியர் கொடுத்த மருந்தாலும் குணமாகவில்லை. ஆனால் அதே மருந்தை தேரையர் கொடுத்திட, அவருக்கு குணமாயிற்று. அகத்தியரே, ‘இது எப்படிஎன்று கேட்டு குழம்பி நிற்க, ‘அந்த மருந்தை வாயில் உள்ள எச்சில் மற்றும் பற்களில் உள்ள பாஷாணங்கள் படாமல் வயிற்றில் செலுத்தியதால் வயிற்றுவலி குணமாயிற்றுஎன்றார் தேரையர். அவரது இந்த நுட்பம் அகத்தியரை பெரிதும் பரவசப்படுத்திற்று. தேரையரின் புகழ், உலகம் முழுவதும் பரவிட திருவுளம் கொண்டார். அதற்கு ஏற்ப ஒரு காலமும் உருவானது. தேரையர், அகத்தியரைப் பிரிந்து நெடுந்தூரம் சென்று தாடியும் மீசையும் வளர்த்து முற்றாக உருமாறிவிட்ட காலம் அது. அகத்தியருக்கு திடீரென்று கண்பார்வை மங்கியது. அது எதனால் என்பது, திரிகாலஞானியான அகத்தியருக்கும் தெரிந்தது. பூமியில் மனிதப் பிறப்பெடுத்துவிட்டவர்களை பூமியின் வினைப்பாடுகள், கணக்குத் தீர்த்துக் கொள்ளாமல் விடுவதேயில்லை. அகத்தியரையும் ஒரு கர்மக்கணக்குதான் கண்ணொளியைக் குறைத்து தடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவரது தர்மக்கணக்கு, சீடன் தேரையர் வடிவில் அவரை ஆட்கொண்டது. அகத்தியர் பரிபூரண கண்ணொளி பெற ஒரு மூலிகை தேவை. அதை எவர் பறித்தாலும் அங்கே விஷப்புகை கிளம்பி, பறித்தவர் பார்வை பறிபோய்விடும். தேரையர், தன் குருநாதரான அகத்தியருக்காக தன் கண்ணை இழந்தாவது முயல்வாரா... இல்லை வேறு மார்க்கத்தில் செல்வாரா என்று அனைவரும் கவனித்தபோது, தேரையரும் அம்பிகையைச் சரண்புகுந்தார். அதுநாள்வரை இறைவேட்கையை சிறிதாகவும், மருத்துவச் சூரியனாவதை பெரிதாகவும் கொண்டிருந்த தேரையர், குருநாதருக்காக இறை வேட்கையைப் பெரிதாகக் கருதி அம்பிகையைச் சரண்புகுந்து தனக்கு உதவிடும்படி கண்ணீர் மல்கக் கேட்டார். அம்பிகையும் தேரையரிடம் அகத்தியருக்கான மூலிகையைத் தந்து ஆசிர்வதித்துச் சென்றாள். அதன்பின் அகத்தியரின் பார்வையும் முழுமையாகத் திரும்பியது. சீடன் தேரையரை கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினார். ‘‘அம்பிகை அருளை நீ பெறவேண்டும் என்பதற்காகவே எனக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது’’ என்று கூறிய அகத்தியர், ‘‘நீ சித்தனுக்கு சித்தன். முனிவனுக்கு முனிவன்’’ என்று வாழ்த்தினார். மொத்தத்தில், தேரையர் வாழ்வு நுட்பம், விடாமுயற்சி, பணிவு, இறையச்சம் ஆகிய அனைத்துக்குமே ஒரு சான்று போல அமைந்துவிட்டது. சில வரலாற்று பிறழ்வு காரணத்தால் அகத்தியரின் சீடர் என்பதை சிலர் போகரின் சீடரே தேரையர் என்பர்.

தேரையர் சித்தர்.

தேரையர் சித்தர் குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்      இவரை கருமசௌமியர் என்பவரின் சீடர் என்றும் அகத்தியரின் சீடர் என்றும் கூறுவர். இவர் முற்பிறவியில் இராமதேவர், மறுபிறப்பில் தேரையர் ஆவார்.      அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர்.       அதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப் பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.      பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார். சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.      சீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை அடுப்பைப் பார்த்துக்கொள்என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார்.      கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் இராமதேவன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.      அகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார்.      குறிப்பறிந்து செயல்பட்ட இராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.      காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்கமுடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தன்னை குணப்படுத்துமாறு கதறினான். அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். மன்னனின் தலைவலிக்கான காரணம் புரிந்தது. மன்னா! நீ தூங்கும்போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. அந்த தேரை மூளைக்குப் போய் தங்கிவிட்டது. அந்த தேரைதான் உன் தலைவலிக்குக் காரணம்என்றார். மன்னன் திடுக்கிட்டான். அகத்தியர் மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன் என்று தைரியம் கூறினார்.      சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது. இதைக் கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பைக் கண்ட இராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தான்.      தேரை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தினுள் குதித்தது.   உடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் கபாலத்தை மூடினார். சீடரைக் கட்டித்தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும் பாராட்டினார்.      இராமதேவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார்.   அவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அவரின் உறுதுணையால் தேரையர் தொல்காப்பியம்என்ற இலக்கண நூலை இயற்றி தொல்காப்பியர்என்ற பெயரும் பெற்றார்.      ஒருமுறை சித்தர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அவர் தனது நோயைத் தீர்த்துக்கொள்ள அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியரும் அவருக்கு மருந்தை தந்து பத்தியத்தையும் கூறி அனுப்பினார்.   ஆனால் நோய் குணமாகவில்லை. அகத்தியர் தகவல் அறிந்து உடனே தேரையரை அழைத்து அவர் நோயைக் குணப்படுத்துமாறு அனுப்பினார். சித்தரைப் பரிசோதித்த தேரையர், ஒரு கொடுக்காய்க் குச்சியை எடுத்து நோயாளியின் வாயை திறந்து குச்சியை அதனுள் நுழைத்து அதன் ஓட்டை வழியாக மருந்தை செலுத்தினார். வயிற்று வலி உடனே தீர்ந்தது. தேரையர் அகத்தியரிடம் சென்று செய்தியைக் கூறினார்.      தாம் கொடுத்த மருந்து பலம் இழந்ததற்கு காரணம் நோயாளியின் பல்லில் உள்ள விஷத்தன்மைதான் என்பதை உணர்ந்து தேரையர் குச்சி மூலம் மருந்தை செலுத்தியுள்ளார் என்பதை அகத்தியர் உணர்ந்துகொண்டார்.      தேரையரின் திறமையை வெளிப்படுத்த நினைத்த அகத்தியர் அவரை அருகில் அழைத்து தேரையா! நீ உனக்கு விருப்பமான இடத்திற்கு போய் நல்லவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி செய் என்றார்.  தேரையரும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்யும் முனி, ரிஷிகளின் பிணிகளைப் போக்கினார். உலக நன்மையின் பொருட்டு... பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறிநூல், நோய்க்குறி நூல், தைல வர்க்க சுருக்கம், வைத்திய மகா வெண்பா, மணி வெண்பா, மருந்துப் பாதம் 1. தேரையர் யமக வெண்பா 2. தேரையர் தரு 3. தேரையர் வெண்பா 4. தேரையர் காப்பியம் 5. தேரையர் அந்தாதி 6. தேரையர் கரிசல் 7. தேரையர் ம்காகரிசல் 8. தேரையர் கற்பம் 9. தேரையர் நிகண்டு 10. தேரையர் நீர்க்குறி நெய்க்குறி நூல்கள் 11. தேரையர் சேகரப்பா 12. தேரையர் நாடகம் 13. தேரையர் சிகாமணி வெண்பா 14. தேரையர் மிகாவண்ணம் 15. தேரையர் எதுகைப்பா 16. தேரையர் நாண்மால 17. தேரையர் தைலவர்க்கச் சுருக்க 18. தேரையர் தினக்கிராமலங்காரம் 19. தேரையர் சிகிச்சைக்கிரமம் 20. தேரையர் நோய் மருந்தளவை 21. தேரையர் பிரதானகுணமூலி தரு 22. தேரையர் மருத்துவபாரதம் 23. தேரையர் வைத்திய பள்ளு 24. தேரையர் 500 25. தேரையர் வைத்தியகாவியம் 26. தேரையர் 1500 "வந்ததோர் தேரையர் தான் மகாசித்தர் நூலில் வல்லோர் அந்த நல் அகத்தியருக்கு அருமையாய் வந்த பிள்ளை குந்தக மில்லா பிரம்ம குலத்தினில் வந்துதித்தார் விந்தையாய் காய சித்தி மிகச் செய்து முடித்தார் பாரே" - கருவூரார் வாத காவியம் - இவரின் இயற் பெயர் இராமத்தேவன் என்றும், மருத்துவ ஆராய்ச்சிகளில் சிறந்த தேர்ச்சியுடைவர் என்பதால் தேரையர் என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் ஆகத்தியரின் சீடர் என்றும் இவரே பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் என்கிற சுவாரசியமான தகவலும் சொல்லப்படுகிறது. மணி வெண்பா மருந்துப் பாதம் ஞான போதம் பதார்த்த குண சிந்தாமணி நீர்க்குறிநூல் மாணிக்க கற்பம் நோய்க்குறி நூல் தைல வர்க்க சுருக்கம் வைத்திய மகா வெண்பா ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. அகத்தியருக்கு நாளுக்கு நாள் கண்பார்வை மங்கியது. சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அப்போது அணனமயம் காட்டில் இருக்கும் சித்தர் பற்றி நினைவு வரவே அவரை அழைத்து வந்து அகத்தியர் கண்ணுக்கு வைத்தியம் செய்ய எண்ணி அகத்தியரிடம் உத்தரவு வேண்டினர். அகத்தியர் கொஞ்சம் யோசித்துநீங்கள் போகும் போது புளியமரத்தின் நிழலிலேயே உறங்க வேண்டும்என்று கட்டளையிட்டு அனுப்பினார்.      வெகுநாட்கள் நடந்த சீடர்கள் தேரையரின் இருப்பிடத்தினை அடைந்தனர். தன் குரு நாதருக்கு கண் பார்வையைத் தெளிவாக்க வேண்டுமாறு கோரினர். இதைக் கூறி முடித்த சீடர்கள் இரத்தவாந்தி எடுத்தனர். அந்த நிலைக்கான காரணத்தை அறிந்திருந்த தேரையர், சீடர்களிடம் திரும்பிச் செல்லும் போது வேப்பமரத்தின் நிழலிலேயே உறங்கிச் செல்லுமாறும் தாம் இரண்டு நாட்களில் வைத்தியத்திற்கு வருவதாகவும் கூறியனுப்பினார்.       திரும்ப வந்த சீடர்கள் உடல் நலனுடன் இருப்பதைக் கண்ட அகத்தியர் இது தேரையரின் வைத்தியம் தான்என்பதை புரிந்து கொண்டார்.     தேரையர் அகத்தியரின் ஆசிரமம் அடைந்து அகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார். பார்வை தெளிவடைந்த அகத்தியர், சடாமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை இங்கு வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களில் விழுந்து வணங்கினார். நாட்கள் ஓடின.       ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுதுஎன்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் தேரையர் குலைபாடம்என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார். ஸ்ரீ தேரையர் தியான செய்யுள் மாய மயக்கம் நீக்கி காய கல்பம் தேடி மூலிகை கொணர்ந்து முதுகுகூன் நிமிர்த்திய அகத்தியர் சீடரே உன் பாதம் சரணம். தேரையர் பூசை முறைகள்       அகப்புறத்தூய்மையுடன் அழகிய சிறு பலகையை செம்மண்ணினால் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள் குங்குமம் இடவேண்டும். அவ்வாசனத்தின் மேல் தேரையரின் படம் வைத்து வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும்.      முதலில் தியானச் செய்யுளை கூறி மூலிகை இலைகளினால் அர்ச்சனை செய்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூற வேண்டும். பதினாறு போற்றிகள் 1. குரு மெச்சிய சீடரே போற்றி! 2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி! 3. சிவனை பூசிப்பவரே போற்றி! 4. சங்கடங்களை போக்குபவரே போற்றி! 5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி! 6. சாந்த சொரூபரே போற்றி! 7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி! 8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி! 9. சித்த சுத்தியுடையவரே போற்றி! 10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி! 11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி! 12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி! 13. துக்கத்தைப் போக்குபவரே போற்றி! 14. கண் ஒளி தந்த கருணையே போற்றி! 15. குறை தீர்க்கும் நிறையே போற்றி! 16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!      அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!என்று 108 முறை கூறி வழிபட வேண்டும். நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும். இவரை பூசிக்க ஞாயிற்றுக் கிழமை சிறந்தது. தேரையர் பூசா பலன்கள் 1. ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும். 2. குடும்ப ஒற்றுமை ஓங்கும். 3. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும். 4. பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தீரும். 5. தீராத தலைவலி, இடுப்புவலி நீங்கி நலம் உண்டாகும். 6. உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய் சரியாகும். 7. வீண் பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும். 8. வாக்கு பலிதமும், ராசியோகமும் உண்டாகும். 9. எந்த பிரச்சனையானாலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.

தேரையர் சித்தரின் வைத்தியம்.

                      தேரையர்  தலையைப் பிளந்து  அறுவைச் சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார். அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது. ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.சுவாமி! இந்த வலிக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சொல்லி அருளுங்களேன் என்றான் மன்னன்.அது உனக்கெதற்கு? வியாதியஸ்தனுக்கு மருந்தும் சுகமும் தானே தேவை. நீ புறப்படு, என்றவரிடம், மன்னன் மிகவும் பணிவுடன் கேட்டான். மன்னா! சொல்ல வேண்டாம் என நினைத்தேன். சொல்ல வைத்து விட்டாய். உன் தலைக்குள் தேரை ஒன்று இருக்கிறது, என்றார். தேரை என்பது தவளை வகையில் ஒன்று. தேரையா! அதெப்படி தலைக்குள் நுழைய முடியும், என்று மன்னன் கேட்கவே, நீ தூங்கும்போது, உன் மூக்கின் வழியாக குஞ்சு ஒன்று நுழைந்திருக்க வேண்டும். அது தலையை இப்போது அடைந்ததால், வலி வந்திருக்கிறது, என்றதும், மன்னன் அதிர்ந்தான். சுவாமி! என்னால் நம்பவே முடிய வில்லையே. இப்படி ஒரு கொடிய நிலைமையா எனக்கு? தலைக்குள் இருக்கும் தேரையை எப்படி வெளிக்கொண்டு வர முடியும்? என்று பதட்டப்பட்டு கேட்ட மன்னனிடம், பயப்படாதே. நாளை உனக்கு கபால சிகிச்சை செய்யப் போகிறேன். உன் தலையைப் பிளந்து, உள்ளிருக்கும் தேரையை எடுக்க முயற்சிக்கிறேன், என்ற தேரையரை இடைமறித்த அரசன், ஐயோ சுவாமி! தலையை உடைத்த பின் எப்படி என் உடலில் உயிர் தங்கும்? என உடல் வெடவெடக்க கேட்டான். அகத்தியர் அவனைத் தைரியப் படுத்தினார். மன்னா! தலையைப் பிளக்கவும், அதை மூடவும் என்னிடம் மூலிகைகள் உள்ளன. இதனால் உனக்கு வலி தெரியாது. மேலும், சில மூலிகைகளைக் கொடுத்து உன்னை மயக்கமடையச் செய்து விடுவேன். என்ன நடக்கிறது என்பதை நீ அறியமாட்டாய். என்னிடம் வைத்தியம் பார்க்க வந்த எவரும் இதுவரை குணமாகாமல் திரும்பியதில்லை, என்றார். அகத்தியரின் தெய்வசக்தியை மன்னனும் அறிவான். எனவே, அவன் சிகிச்சைக்கு சம்மதித்தான். அகத்தியர் மன்னனின் மூக்கருகே ஏதோ ஒரு மூலிகையை நீட்டினார். அதன் வாசனைபட்டதுமே, மன்னன் படிப்படியாக மயக்கநிலையில் ஆழ்ந்தான். ஏதோ ஒரு மூலிகையை எடுத்து அரைத்து மன்னனின் தலையில் தடவிய அகத்தியர், அவனது தலையின் ஒரு பகுதியை பவ்யமாக உடைத்து திறந்தார். என்ன அதிசயம்! மன்னனின் மூளையில் ஒரு தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. அது மிரள மிரள விழித்தது. இதை எப்படி வெளியேற்றுவது...கை படக்கூடாது. ஏதாவது குச்சியால் தட்டினால் அது ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், பின்னர் மன்னனின் உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதையான அகத்தியரே கலங்கி விட்டார். இந்த சமயத்தில், அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது. உடனே பாத்திரத்தை அங்கிருந்து அகற்றி விட்டார் தேரையர். தன் சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டினார். தேரையா! தன்னைச் சார்ந்தவனுக்கு இக்கட்டான நிலையில் கை கொடுப்பவனே உலகில் உயர்ந்தவன். நீ செய்த காரியத்தால், என் மானமும், மன்னனின்  உயிரும்காப்பாற்றப்பட்டன. என் மருந்துப்பெட்டி யிலுள்ள சந்தானகரணி மூலிகையை எடு, என்றார். சந்தானகரணியை எடுத்த தேரையர், குருவே! இதன் குணம் என்ன? என்றார். உடைந்த தலையை ஒட்டவைக்கும் அரியவகை மூலிகை இது, என்ற அகத்தியர் அதன் சாறைப் பிழிந்து தலையில் ஊற்றினார். சிறிது நேரத்திலேயே தலை ஒட்டிக்கொண்டது. அகத்தியரே இந்த சிகிச்சையை செய்தார் என்றாலும் கூட, தேரை வெளியேற தேரையரே காரணமானார். தேரையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதால் தான் இவருக்கு தேரையர் என்ற பெயரே ஏற்பட்டது. இன்னொரு சமயத்திலும் அகத்தியருக்கு பெரும் உதவி செய்தார் தேரையர். அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார். அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன்.  நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார். குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய்யுமளவுக்கு தகுதி பெற்று விட்டாய். அதனாலேயே உன்னை வெளியே அனுப்புகிறேன். கடந்த வாரத்தில், உன் கைங்கர்யத்தால் காட்டில் இருக்கும் முனிவர் ஒருவரின் வயிற்று வலி நீங்கியது! என்றார். ஆம்...மன்னனுக்கு கூன் நிமிர்ந்த பிறகு, தீராத வயிற்றுவலி இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு முனிவர் அகத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். அதி அற்புதமான திரவ மருந்தொன்றை அவருக்கு கொடுத்த அகத்தியர், பத்திய முறைகளின் படி இதைச் குடித்து வர, வலி பறந்தோடி விடும் என சொல்லி விட்டார். அகத்தியரின் மருந்துக்கு மறுமருந்து உண்டா? முனிவரும், அதை குடித்தார். உஹும்...வலி தீரவில்லை.இரண்டு நாள் கழித்து முனிவர், தன் சீடன் ஒருவனை அகத்தியரிடம் அனுப்பினார். அவன் அகத்தியரிடம் வந்து, அகத்திய சித்தரே! தங்கள் மருந்தாலேயே எங்கள் குருவின் வியாதியைக் குணப்படுத்த முடியவில்லை என்றால், இனி யாரால் மருந்து தர இயலும்? குரு வயிற்றுவலி தாளாமல், இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறார், என்றான். அகத்தியருக்கு ஆச்சரியம். சரியான மருந்தைத் தானே கொடுத்தேன். சரி.. சரி... உன்னோடு, தேரையனை அழைத்துச் செல். அவன் என்ன ஏதென்று பார்ப்பான், எனச்சொல்லி தேரையரை அனுப்பி வைத்தார். தேரையர் அங்கு சென்று முனிவரைச் சோதித்தார். கொருக்கை என சொல்லப்படும் குச்சியை எடுத்தார். அந்தக் குச்சியின் நடுவில் துவாரம் இருக்கும். அதாவது, இப்போது நாம் குளிர்பானம் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்டிரா போல! அதன் மூலமாக, அகத்தியர் கொடுத்த அதே மருந்தை உறிஞ்சி குடிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! வலி உடனே பறந்து விட்டது. தேரையர் மகிழ்ச்சியுடன் ஆஸ்ரமத்துக்கு வந்து, அகத்தியரிடம் நடந்ததைச் சொன்னார். அகத்தியர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் பெயரைக் காப்பாற்றினாய், என்று சொல்லி பாராட்டினார். இப்படி அகத்தியர் பல மருந்துகளைக் கண்டுபிடிக்க, அதைப் பயன்படுத்தும் வித்தையை தேரையர் பல்வேறு விதங்களில் கையாள...பல நோயாளிகள் பயன் பெற்றனர். இந்தக் காரணத்தாலேயே அகத்தியர், தேரையரை வெளியில் அனுப்ப உத்தேசித்தார். இந்தக் காலத்தில் தொழில் தெரிந்த ஒருவர், தன்னைப் போலவே ஒருவர் அதே தொழிலைச் செய்ய முற்படுகிறார் என்றால், அவரை எப்படி கவிழ்க்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்து விடுவார். ஆனால், மகான்கள் பிறர் நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.குருவின் கட்டளையை ஏற்று தேரையரும் கிளம்பி விட்டார். அகத்தியர் இருந்த இடத்தை விட்டு வெகு தொலைவிலுள்ள காட்டுக்குச் சென்றார். அங்கு பல முனிவர்களுக்கு வைத்தியம் செய்து அவர்களின் பிணி நீக்கினார். இந்நிலையில், பாண்டியநாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தங்களுக்கு தங்கம் கிடைத்தால், அதை வேற்று நாட்டவரிடம் விற்று, உணவுப் பொருள் வாங்கிக் கொள்வதாக மக்கள் தேரையரைச் சந்தித்துக் கூறினார்.தேரையரும் தங்கம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் அமைத்த பட்டறைகளில் இருந்து எழுந்த புகை, அப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு இடைஞ்சலைக் கொடுத்தது. அவர்களில் சிலர், அகத்தியரிடம் வந்து, உங்கள் சீடன் செய்த காரியத்தால், எங்கள் தியானம் கலைந்தது என புகார் செய்தனர். அகத்தியருக்கு கடும் கோபம். தேரையரை வரவழைத்தார். அவரிடம் பேசக்கூட இல்லை. இரண்டாக அவரைக் கிழித்தார். தேரையரின் உயிர் பறந்து விட்டது. தேரையர் தன் சீடர்களுக்கு முன்கூட்டியே, இப்படி ஒரு நிலை வந்தால், உடலை ஒட்ட வைத்து மீண்டும் உயிரூட்டும் கலையைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி தேரையரை உயிர் பெறச் செய்து விட்டனர் சீடர்கள். அதன்பின் அகத்தியருக்கு பயந்து தலைமறைவாக இருந்தார் தேரையர். சீடனின் திறமையையும், சமயோசிதத்தையும் கேள்விப் பட்டு மகிழ்ந்தார். ஆண்டுகள் ஓடின. அகத்தியருக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது. அவர் சீடர்களை அழைத்து, தேரையனை மருந்துடன் வரச்சொல்லுங்கள். அவன் வந்தால் தான் எனக்கு கண் குணமாகும், என்றார். சீடர்களும் பல மைல் தூரம் சென்று, தேரையரை அழைத்து வந்தனர். தேரையர் தன் குருநாதரின் கண்களில், ஒரு மூலிகையைப் பிழிந்து விட, கண் முன்பை விட தெளிவாகத் தெரிந்தது. தன் சீடனை அப்படியே அணைத்துக் கொண்டார் அகத்தியர். தேரையா! நீ முன்னிலும் தேறி விட்டாய். உன்னை நான் கொன்றும் கூட, புத்திசாலித் தனத்தால் உயிர் பெற்றாய். என்னை பழி வாங்க எண்ணாமல், தக்க வைத்தியம் செய்தாய். உயிர் போகும் அளவிலான துன்பம் செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்பவனே உலகில் உயர்ந்தவன். அத்தகைய நற்குணத்தை நீ பெற்றுள்ளாய். நீ கண்டுபிடித்த மருத்துவக்குறிப்புகள் வீண் போகக்கூடாது. அவற்றை ஒரு நூலாக எழுதி வை. எதிர்கால வைத்தியர்கள் உன்னை தலைதலைமுறையாக வாழ்த்துவர், என்றார்.தேரையரும், 21 நூல்களை எழுதினார். பலகாலம் வாழ்ந்த அவர், முன்பு கேரளத்தில் இருந்ததும், தற்போது தமிழகத்தில் தென்காசி அருகில் உள்ளதுமான தோரணமலையில் சமாதியானதாக ஒரு குறிப்பு கூறுகிறது. நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள். காடு,  மலைகளில்  வாழ்ந்த  சித்தர்கள்  நூற்றாண்டுகளை  கடந்தும்   வாழ்தார்கள்.  நோய்கள் அவர்கள்   அருகே  வர   அஞ்சியது.  தங்கள்  ஆயுள்  ரகசியத்தை அவர்கள்  சொல்லி  இருந்தாலும்,  நாம்  தான்  அதன்படி  வாழ மறுக்கிறோம்.  18  சித்தர்களில்  ஒருவரான  தேரையார்  எப்படி  வாழ  வேண்டும்  என்பதை  ஒரு  பட்டியலே  இடுகிறார். மனிதன்  எதை  மட்டும்  செய்ய  வேண்டும்  என்பதற்கு   அவர்  இப்படி  சொல்கிறார் :  பால்  உணவு  உட்கொள்ளுங்கள். எண்ணெய்   தேய்த்து  குளிக்கும்போது   வெந்நீரில்   குளியுங்கள். படுக்கும்போது   எப்போதும்  இடது  கைப்புறமாகவே   ஒருக்களித்து  படுங்கள். புளித்த  தயிர்  உணவை   விருப்பி   உட்கொள்ளுங்கள். பசிக்கும்போது   மட்டுமே  உணவை  உட்கொள்ளுங்கள். ஒரு  நாளைக்கு  இரண்டு  முறை  மட்டுமே  உணவு  உட்கொள்ள     வேண்டும்.  இரவில்  நன்றாக  தூங்குங்கள். பெண்ணுடன்   மாதம்  ஒருமுறை  மட்டுமே  உறவு  வைத்துக்கொள்ள  வேண்டும். வாழைக்காயை   உணவுக்கு  பயன்படுத்தும்போது   பிஞ்சிக்  காய்களை        மட்டுமே   பயன்படுத்த  வேண்டும் .  முற்றிய  காய்களை  கறி  சமைத்து        உண்ணக்கூடாது. உணவு   உட்கொண்ட  உடனேயே  சிறிது  தூரம்   நடக்கும்   பயிற்சியை   செய்ய    வேண்டும். 6   மாதத்திற்கு  ஒருமுறை   வாந்தி  மருந்து  உட்கொள்ள  வேண்டும். 4   மாதங்களுக்கு  ஒருமுறை   பேதி  மருந்து  சாப்பிடுங்கள். 1 1/2  மாதத்திற்கு  ஒருமுறை   மூக்கிற்கு  மருந்திட்டு  சளி  போன்ற  நோய்கள்   வராமல்  பார்த்துக்  கொள்ளுங்கள். வாரம்  ஒருமுறை  முகச்சவரம்  செய்துகொள்ள   வேண்டும். ( இது  ஆண்களுக்கு  மட்டும்  ) 4  நாட்களுக்கு  ஒருமுறை   எண்ணெய்  தேய்த்து  குளிக்க  வேண்டும். 3  நாட்களுக்கு   ஒருமுறை   கண்ணுக்கு  மை  இட  வேண்டும். (பெண்களுக்கு மட்டும்) விரும்பிய  தெய்வங்கள்,  குருவை  வணங்குங்கள். இவற்றை   எல்லாம்  ஒருவர்  தனது  வாழ்நாளில்  பின்பற்றி  வந்தால்  எமன்  அவரை   நெருங்கி  வரவே  பயப்படுவான்   என்கிறார்  தேரையார். எவற்றை  எல்லாம்  செய்யக்கூடாது  என்பதற்கு   தேரையாரின்   அறிவுரை :   பகலில்  உடலுறவு  கொள்வதையும்,  தூங்குவதையும்  தவிர்த்து  விடுங்கள். கரும்பு  போன்ற  இனிப்பவர்களாக  இருந்தாலும்  வயதில்  மூத்த பெண்களுடனும்  இனிய  வாசம்  தரும்  தலைமுடியைக்  கொண்ட  விலைமாதர்களுடன்  உடலுறவு  கொள்ளாதீர்கள். காலை  இளம்  வெயிலில்  அலையாதீகள். மலம்,  சிறுநீர்  போன்றவற்றை  அடக்கி  வைத்திருக்காதீர்கள். முதல்  நாள்  சமைத்த  கறி  உணவு,  அமுதம்  போன்று  இருந்தாலும்  அதை  மறுநாள்   உண்ணவேண்டாம். உலகமே  பரிசாக  கிடைக்கிறது  என்ற  போதும்,  பசிக்காத  போது  உணவு  உட்கொள்ளாதீர்கள். உணவு  உட்கொள்ளும்போது  தாகம்  அதிகம்  எடுத்தாலும்,  இடைஇடையே  தண்ணீர்   குடிக்கக்கூடாது. மயக்கும்   மனம்   வீசும்  கந்தம்,  மலர்கள்  போன்றவற்றை   நள்ளிரவு    நேரத்தில்    நுகரக்கூடாது  . மாத  விலக்கான  பெண்கள்,     ஆடு, கழுதை  போன்றவை   வரும்  பாதையில்  எழும்   புழுதி  உடல்மேல்   படும்படி  நெருங்கி   நடந்து  செல்லாதீர்கள். இரவில்,  விளக்கு  வெளிச்சத்தில்   நிற்பவர்   நிழலிலும்,  மர  நிழலிலும்  நிற்பதை  தவிர்த்திடுங்கள். பசியின்  போது   உணவு   உட்கொண்ட  உடனேயும்   உடலுறவு   வைத்துக்கொள்ளாதீர்கள். மாலை  நேரத்தில்  தூங்குதல்,  உணவு  உட்கொள்ளுதல்,  அளவுக்கு  மீறிய   காமச்  செயல்களில்  ஈடுபடுதல்,  அழுக்கான  ஆடை   அணிந்திருத்தல்,  தலையை  வாரி  முடி   உதிரச்செய்தல்   போன்ற  செயல்களில்  ஈடுபடாதீர்கள். மற்றவர்கள்  கை  உதறும்போது  அவர்களது   நகத்திலிருந்து  விழும்  தண்ணீரும்,  குளித்து  தலை  துவட்டும்  போது  உதிரும்  தண்ணீரும்   மேலே  தெரித்து விழும்  இடத்தில்  நடக்காதீர்கள். -இப்படி  சொல்கிறார்  அவர். தேரையார்   சித்தர்  கூறிய  அனைத்தையும்  ஒரே  நாளில்  பின்பற்றுவது   என்பது  இயலாத  காரியம்.  ஏனென்றால்,  நாம்  இப்போது   வாழ்ந்து  கொண்டிருக்கிற   வாழ்க்கை   அப்படி.  அதனால்,  படிப்படியாக   முயற்சிப்போம்.  நோய்,  நொடியின்றி   நாளும்   நலத்தோடு   வாழ்வோம்.

ஸ்ரீ காகபுஜண்டர்.

ஸ்ரீ காகபுஜண்டர். அண்டசராசரங்களையும் ஆண்டுகொண்டிருக்கும் 'உமாமகேஸ்வரன்' தன் சொருபமாக தன்னால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளாக விளங்கக் கூடிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்கள், நவகோடி சித்தர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள், காந்தர்வர், சித்தவித்யாதரர், எட்சர், அட்டதிக்கு பாலகர்கள், எண்ணாயிரம் வகைகளைக் கொண்ட உயிரினங்கள் போன்றவர்களுக்கெல்லாம் முக்கால வழிகாட்டுதல்களைஸ் செய்வதற்காக சிரஞ்சிவிஸ் சித்தராக ஸ்ரீ காகபுஜண்டரை இவ்வுலகில் படைத்தார்.  அண்டத்தின் இயக்ககங்களை நிர்ணயித்து, மும்மூர்த்திகள் முதலான அனைத்து தேவர்களின் எதிர்காலங்களையும் அறிந்து உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உரைத்து வழிகாட்டும் பொறுப்பையும் 'உமாமகேஸ்வரன்' காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்துள்ளார். உலகத்தின் தெய்வீக சூட்சுமங்கள் குறித்து தேவசபையில் எழும் சந்தேககங்களுக்கு நிர்ணயமான உண்மை விளக்கங்களைக் கொடுத்து இவ்வுலகோர்க்கு வழிகாட்டக் கூடிய ஆற்றல் வாய்ந்த கடமைகளையும் செய்யுமாறு 'பரமேஸ்வரன்' காகபுஜண்டரை பணித்தார். உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து தேவரகசியங்களையும் பாதுகாத்து வைக்கும் படியான பொறுப்பையும் காகபுஜண்டரிடத்திலே ஒப்படைத்தார். அறுபத்தி நான்கு தெய்வீகக் கலைகளின் முழுசூட்சுமங்களையும் தன் ஆத்மாவில் பதிந்து கொண்டு உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்கிற அருளாணையும் இறைவனால் காகபுஜண்டருக்கு வழங்கப்பட்டது. பலகோடி ஆண்டுகளாய் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள்குரு காகபுஜண்டர் தன்வழி வந்த பலகோடி சித்தர்களுக்கு பலகோடி தேவரகசியங்களை உபதேசித்துள்ளார். அவற்றுள் கொல்லிமலை கோரக்கச் சித்தருக்கு உபதேசம் செய்த தேவரகசியத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய பூரண வரலாற்றையும் காகபுஜண்டர் தானாகவே சுருக்கமாகக் கூறியிருக்கின்றார். காகபுஜண்டரின் தெய்வீக வரலாறு - கோரக்கச்சீடரின் பெருமை அறம்பாடியம்மையை தன் இடப்பாகத்தில் சுமந்து கொண்டு சித்தர்களுக்கெல்லாம் அருள் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இறைவன் அறப்பள்ளியீஸ்வரன் ஆட்சி செய்யும் பெருமையும் அருள்சித்தர்கள் பலர் ஜீவ நிலையில் குருவருள் கொடுத்துக் கொண்டிருக்கும் மகாபெருமையும் பெற்றதொரு திருப்தியாம் கொல்லிமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை சீடனாகிய கோரக்கனே! அருளன்புடன் கேட்பாயாக உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் மேலான குருவால் ஆட்கொள்ளப்பட்டு இம்மை மறுமை வினைகளை நீக்கி வீடுபேறு பெறவேண்டும் என்பதற்காக இவ்வுலகத்தின் ஆதிகுருவாக படைக்கப்பட்ட என்னுடைய திவ்விய சரிதத்தை மிக சுருக்கமாக சொல்லுகிறேன், அன்புடன் கேட்பாயாக' என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடருக்கு தன் தெய்வீக வரலாற்றை சொல்ல ஆரம்பிக்கின்றார். மும்மூர்த்திகள் தோற்றம்: ஆதியிலே உலகத்தின் ஆதிசக்தியாக விளங்கக்கூடிய ஆதிபராசக்தியானவள் தன் சக்தியை ஆள்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளைப் படைத்தாள். மும்மூர்த்திகளையும் இயங்குவதற்காக தன் சக்தியின் ரூபமாக சரஸ்வதி, லட்சுமி, ஈஸ்வரி என்னும் மூன்று சக்திகளைப் படைத்தாள். பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், விஷ்ணுவிற்கு லட்சுமியையும், சிவனுக்கு ஈஸ்வரியையும் மணம் செய்வித்தாள். பிரம்மாவிற்கு படைக்கும் தொழிலையும் கொடுத்து, மும்மூர்த்திகளும் தத்தம்தேவிகளோடு சேர்ந்து இவ்வுலகை ஆளவேண்டுமாய் கட்டளையிட்டாள். மும்மூர்த்திகளுக்கும் தலைவனாய் முக்கண் படைத்த சிவபெருமானை தன்னுடைய ரூபமாகிய பார்வதியுடன் கூடி இவ்வுலகை ஆளப்பணித்தாள். சரஸ்வதியின் தவம்: மும்மூர்த்திகளின் தொழிலுக்கெல்லாம் ஆதியான தொழிலாக விலங்கக்கூடிய படைக்கும் தொழிலை ஏற்றுக் கொண்ட பிரம்மன் தன் மனைவியான சரஸ்வதியுடன் கூடி தான் எப்படி இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதற்குண்டான உயிர்களையும் அவர்களை ஆள்வதற்கான தேவர்களையும் படைக்கப் போகிறேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! எனக்கு யாராவது வழிகாட்ட வேண்டும்! நான் எப்படி அந்த வழிகாட்டுதலைப் பெறுவேன்? என்று பல சந்தேகங்களைக் கிளப்பி தன் மனைவியான சரஸ்வதியிடம் முறையிட்டான். தன் கணவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட கலைவாணி முத்தொழில்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய உமாமகேஸ்வரனைத் துதித்து கடும் தவம் இயற்றினார். தவத்திற்கு மெச்சிய இறைவன் தன் மனைவி உமாமகேஸ்வரியோடு கலைவாணிக்கு காட்சிக் கொடுத்து, "அம்மையே! உம் தவத்திற்கு மெச்சினோம்! உன் கணவன் பிரம்மன் தன் தொழிலை நல்ல முறையில் செய்வதற்கு வழிகாட்டுதற்காக சிரஞ்சீவியாக உலகத்தின் ஆதிகுருவாக விளங்கக்கூடிய ஓர் ஞான குழந்தையை உமக்கு அளிக்கிறேன்! பெற்றுக் கொள்! என்று சொல்லி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை சரஸ்வதின் மடியின் மீது செலுத்தினார் உமாமகேஸ்வரன். காகபுஜண்டர் தோற்றம்: பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன். மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது. பிரம்மனின் படைப்புத் தொழில் ஆரம்பம்: நான், என் பிறப்பிற்குக் காரணமான என் தாய், தந்தையரான சரஸ்வதியையும் பிரம்மதேவனையும் வணங்கி அவர்களின் ஆசிபெற்றேன். எம்முடைய தோற்றத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு என் பெற்றோர் பூரிப்படைந்தனர். நான், என் தந்தை பிரம்மதேவனுக்கு உலகின் படைப்பு ரகசியங்களை உபதேசம் செய்தேன். என் அன்பு உபதேசங்களை ஏற்றுக் கொண்டு என் தந்தை பிரம்மதேவன் தேவர்கள் முதலான அனைத்து உயிரனங்களையும் இவ்வுலகில் படைத்து பெருமகிழ்வெய்தினார். கற்பகவிருட்சத்தில் காகபுஜண்டர்: நான் என் கரத்திலமர்ந்த காமதேனுவை நோக்கினேன், அவள் கற்பகவிருட்சமரத்தை உண்டு பண்ணி அதன் மீதமர்ந்து இவ்வுலகிற்கு வழிகாட்ட வேண்டுமாய் எம்மை வேண்டினாள். காமதேனுவின் விருப்பப்படி அந்தநாள் முதல் கற்பகத்தருவின் மீதமர்ந்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள நைத்து உயிரனங்களுக்கும் நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன். மும்மூர்த்திகளூக்கும் ஏற்படக்கூடிய சந்தகங்களைத் தெளிவித்துக் கொண்டு இவ்வுலகின் ஆதிகுருவாக இவ்வுலகை நான் அருளாட்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்தி எண்ணாயிரம் முனிவர்களும், கின்னர்களும், கிம்புருடர்களும், சித்தவித்யாதரர்களூம், அட்டவசுக்களும், அட்டதிக்கு பாலகர்களும், நவகிரகங்களும், காவல் தெய்வங்களும், பஞ்சபூதங்களும், மற்றும் பலகோடி சித்தர்களும் என்னிடம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உலகங்களில் பலமுறை உபதேசம் பெற்றிருக்கிறார்கள். பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் இவ்வுலகிற்கு வழிகாட்டிக் கொண்டு நான் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு வருகிறேன். யுகாந்திர தர்மங்கள், வேதங்கள், மந்திரங்கள், சாஸ்திரங்கள், ஞானதத்துவங்கள், அறுபத்து நான்கு கலைகள், தேவபுராணங்கள் போன்ற அனைத்து கல்விகளும் சரஸ்வதியின் அன்புடன் இவ்வுலகிற்கு எம்மால் உணர்த்தப்பட்டவையே. அண்டசராசரங்களின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால இயக்கங்கள் அனைத்தையும் நானறிவேன். சம்புகமுனிவரின் தவம்: ஒரு சதுர்யுகக் காலம் நான் இவ்வுலகில் வாழ்ந்து வழிகாட்டிய பிறகு அடுத்த சதுர்யுகம் ஆரம்பித்தது. இரண்டாவது சதுர்யுகத்தில் வீரத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகோர் வாழவும் அதர்மம் அழியவும் வேண்டி கயிலாயத்திலே உமாமகேஸ்வரன் தன்னுடைய தேவியோடு கமலாச்சிதேவியுடனாய சம்புகமுனிவருக்கு காட்சி கொடுத்து, "தவப்புத்திரரே! உமது தவத்திற்கு மெச்சினோம்! உமது எண்ணம் ஈடேறி இவ்வுலகில் தர்ம்மானது சிரஞ்சீவியாக நிலைத்து ஓங்கி வாழ்வதற்காக சிரஞ்சீவியாக ஒரு ஞானக் குழந்தையை உமக்கு அளிக்கிறேன். இக்குழந்தைக்கு பகுளாதேவி என்று பெயரிட்டு யாம் முன்னரே நியமித்தபடி சரஸ்வதியின் அன்பு புத்திரனாக சிரஞ்சீவியாக வாழக்கூடிய காகபுஜண்டருக்கு மணம் முடித்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்வீர்களாக! " என்று கட்டளையிட்டார். உமாமகேஸ்வரி தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கதிர்வீச்சினை கமலாச்சியின் மடியின் மீது செலுத்தினாள். பகுளாதேவி தோற்றம்: பல ஆயிரம் சந்திரர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு, காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் நவரத்தின மணிகளை அணிந்து கொண்டு; தன் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ்நோக்கியவாறு நான்கு கைகளும் அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும்; கீழ்நோக்கியவாறு நான்கு கைகளுமாக பதினாறு திருக்கரங்களைக் கொண்டு; தன்னுடைய பதினாறு திருகரங்களிலும் சிரஞ்சீவிக் காப்புகள் அணிந்து கொண்டு; பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு நெற்றிக் கண்ணுடன் கமலாச்சி தேவியின் மடியின் மீது பகுளாதேவி திருஅவதாரம் செய்தாள். மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து பகுளாதேவியை ஆசீர்வதித்தார்கள். உலகத்தின் ஆதி குருபத்தினியாகவும் தர்மசொரூபினியாகவும் விளங்கக் கூடிய ஞானசக்தியாக பகுளாதேவியை முமூர்த்திகளும் வணங்கினார்கள். பகுளாதேவியின் உடலின் வலபாகத்தில் மேல் நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், கருநாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் வலப்பாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல்(ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை யோகத்தண்டு போன்றவைகள் அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞானவொளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவியின் உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, அன்னம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. பகுளாதேவி தன் தாய் தந்தையரான சம்புகமுனிவரையும் கமலாச்சி தேவியையும் வணங்கினாள். சம்புக முனிவர் தன் மனைவி கமலாச்சி தேவியோடு தன் ஞானமகளை ஆசீர்வதித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பகுளாதேவி தன் தந்தையாருக்கு அதர்மத்தை அழிக்கும் உபாயங்களையும் வீரதத்துவத்தின் சூட்சுமங்களையும் உபதேசித்துக் கொண்டு நாளொடு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரலானாள். காகபுஜண்டர் - பகுளாதேவி திருமணம்: ஒருநாள் என் தாய் சரஸ்வதி தேவியானவள் எனக்குத் திருமணம் செய்ய ஆவல்கொண்டு அதற்கான மார்கங்களையும் எம்மிடமே கேட்டாள். நான் ஞானத்தின் வழியாக எமக்கென்று இறைவனால் சம்புகமுனிவருக்கு பகுளாதேவி மகளாகப் பிறந்திருப்பதையும் அவளை மணந்து கொள்ளும் காலத்தையும் என் தாயாருக்கு உணர்த்தினேன். என் தாய் சரஸ்வதி தேவியானவள் முமூர்த்திகளையும், மூன்று வேதியர்களையும் அழைத்துக் கொண்டு கயிலாயத்தில் ' சம்புகிரி ' என்னும் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்புகமுனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்கள். தேவர்கள் புடைசூழ வந்த கலைமகளை கமலாச்சிதேவியும் சம்புகமுனிவரும் வணங்கி வரவேற்று உபசரித்தார்கள். முமூர்த்திகளுள் ஒருவராகிய மகாவிஷ்ணு தாங்கள் வந்ததின் நோக்கத்தை சம்புகமுனிவருக்கு தெளிவுபடுத்த சம்புகமுனிவரும் அதற்கு இயைந்து எனக்கும் பகுளாதேவிக்கும் திருமணம் நிச்சயித்தார்கள். மகரத் திங்கள் (தைத்திங்கள்) பூச நட்சத்திரம், மீனலக்கினம், சுக்கிர வாரம், பஞ்சமி திதி கூடிய சுபயோக சுபதினத்தில் மகேஸ்வரன் அரசாட்சி செய்யும் திருக்கயிலை தேவசபையில் எங்கள் திருமணம் நடந்தது. தேவர்களனைவரும் வருகை தந்து எங்களை ஆசீர்வதித்து எங்களையும் வணங்கி எங்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுச் சென்றார்கள். என் தாய் கலைவாணியே வேதியராக அமர்ந்து யாகங்கள் முதலான அனைத்து சடங்குகளையும் செய்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.  ஆதிகுருவாக பகுளாதேவியுடன் காகபுஜண்டர்: உமாமகேஸ்வரனும் உமாமகேஸ்வரியும் எங்கள் இருவரையும் அணைத்து இருவரின் நெற்றிக் கண்ணிலும் முத்தமிட்டு சிவசக்திகலைகளை ஆசீர்வதிதார்கள். அன்று முதல் என் தேவி பகுளாதேவி என் வலபாகத்தில் அமர்த்திக் கொண்டு கற்பகவிருட்சத்தின் மேலமர்ந்து இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றேன். இவ்வுலக உயிர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். பலகோடி ஆண்டுகள் கடந்த என் வாழ் நாட்களில் பல தவங்களுக்குச் சென்று நான் என் தேவியோடு அருள்காட்சிகள் கொடுத்திருக்கின்றேன். ஒரே நேரத்தில் பல்லாயிரம் உயிர்களுக்கு வெவ்வெறு உலகங்களில் வெவ்வெறு இடங்களில் வெவ்வெறு ரூபங்களில் வழிகாட்டும் தெய்வீக சக்தியை படைத்தவன் நான். என்னை வழிபாடு செய்பவர்களுக்கு இவ்வுலகின் அனைத்து சூட்சுமங்களையும் உணர்த்தி பிறப்பின் எல்லா பயங்களையும் பெறும்படியாக ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு உயிர் தானெடுக்கும் ஏதாவதொரு பிறவியில் எம்மை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுவிட்டால் அவ்வுயிருக்கு கற்பக விருட்சமாக ஞானங்களை வழங்கி அவ்வுயிரைக் கரையேற்றஸ் செய்யும் உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன். நான் அகாரபீடத்தில் அமர்ந்து கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருக்கின்றேன். அகரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்கள் வாழ்வதைப்போல் அகாரபீடத்தைக் கொண்ட என் குருவருளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலக உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, உலகத்தின் ஆதிகுரு நானேயாவேன். காகபுஜண்டர் மும்மூர்த்திகளுக்கு உபதேசித்தல்: மகாபிரளயங்கள் வரும் பொழுது மும்மூர்த்திகளுள் இருவர்களாகிய பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவர்களும் சிவனின் மகாபிரளய அவதாரமாக விளங்கக் கூடிய காயாரோகணீஸ்வரனிடத்தில் ஒடுங்குவார்கள். மகாபிரளயம் முடிந்தபிறகு கிருதயுகம் ஆரம்பித்தவுடன் ஒடுக்கத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு போன்ற இருமூர்த்திகளும் மகாசிவத்திலிருந்து பிறப்பார்கள். மீண்டும் மூன்று மூர்த்திகளும் மூன்று தேவியர்களும் தாங்கள் இவ்வுலகில் ஆற்றவேண்டிய கடமைகளை அறிந்து கொள்வதாற்காக கைலாயத்தில் தேவசபையைக் கூட்டி மகாசிவனின் உத்திரவுப்படி எம்மை அழைப்பார்கள். இவ்வுலகில் முமூர்த்திகளும் அவர்களது தேவியர்களும் ஆற்றவேண்டிய கடமைகளையும் அவர்களின் முற்பிறப்பு உண்மைகளையும் நான் என் மனைவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளுக்கு உபதேசிப்பேன். நான் உபதேசம் செய்கின்றபொழுது மும்மூர்த்திகளும் என்னை வணங்கி என்னை குருபீடத்தில் அமரச்செய்து அன்பின் மிகுதியால் எம்பீடத்திற்கு கீழான பீடத்திலமர்ந்து கொண்டு என் உபதேசதைக் கேட்பார்கள். எம்முடைய உபதேசத்தை பிரம்மாவானவர் பிரம்மபாலன் சொரூபத்திலும், விஷ்ணுவானவர் கோபாலன் சொரூபத்திலும், சிவனானவர் பைரவபாலன் சொரூபத்திலும் கேட்டு இன்புருவார்கள். மும்மூர்த்திகளுக்கும் நான் உபதேசம் செய்த பிறகு இவ்வுலகில் பிரம்மாவானவர் தேவர்கள் முதலான அனைத்து உயிர்களையும் படைப்பார். பிரம்மனின் படைப்பை பிரம்மாவோடு சேர்ந்து விஷ்ணுவும் சிவனும் ஆட்சி கொள்வார்கள். தேவர்களூக்கெல்லாம் பிரம்மாவானவர் தன் உபதேச சொரூபமாகிய வேதமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்றபொழுது அவர்கீழமர்ந்து அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். வைகுண்டத்தில் திருமால் ஆளுகையின் கீழமர்ந்த அனைத்து தேவர்களுக்கெல்லாம் விஷ்ணுவானவர் தன் உபதேச சொரூபமாகிய கிருஷ்ணமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்ற பொழுது அவர்கீழமர்ந்து வைகுண்டவாசம் செய்யும் அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். கைலாயத்தில் மகாசிவனின் ஆளுகையின் கீழ் அமைந்த தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களுக்கெல்லாம் மகாசிவன் தன்னுடைய உபதேச சொரூபமாகிய தட்சணாமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசம் செய்கின்றபொழுது அவர்கீழ் அமர்ந்து அனைத்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களையெல்லாம் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயங்களைச் செய்வார்கள். இவ்வாறாக பிரம்மனருளால் தேவர்களால் படைக்கப்படும் அனைத்து சிறு தேவர்களும் அவர்களின் படைப்புக்குக் காரணமான தேவர்கள் மூலம் அதற்குத் தொடர்புடைய மூன்று உபதேச சொரூபங்களாக விளங்கக்கூடிய வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் தட்சணாமூர்த்தி போன்ற ஏதாவதொரு குருசொரூபம் மூலம் குரு உபதேசம் கொடுக்கப்பட்டு இவ்வுலகம் ஆட்சி செய்யப்படுகிறது. ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் ஜீவராசிகளுக்கும் அவ்வாறாகவே அவ்வுயிர்களின் படைப்புக் காரணத் தொடர்புடைய குருசொரூபத்தால் குரு உபதேசம் செய்யப்படுகிறது. ஒரு சதுர்யுகத்தில் முதலாவதாக வரும் கிருதாயுகத்தில் ஊழ்வினை விலக்கு அளிக்கப்பட்டு எல்லா உயிர்களுக்கும் பூரண சுதந்திரம் அளிக்கப்படுகின்றது. தர்மத்தை வழுவாமல் தேவர்களும் மற்ற உயிர்களும் வாழ்வதற்கு அனைத்து வசதிகளும் இன்பங்களும் இறைவனால் அளிக்கப்பட்டு பதினான்கு லோகங்களையும் உள்ளடக்கிய இவ்வுலகம் ஆளப்படுகிறது. கிருதாயுகத்தில் கடைசியாகப் பெற்ற பிறவியில் செய்கின்ற பாவங்கள் மட்டும் அவ்வுயிர்களின் வினையேட்டில் பதிக்கப்படுகிறது. கிருதாயுகம் முடிந்து திரேதாயுகம் ஆரம்பித்த பிறகு முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிறவி தரப்படுகின்றது. வினையின் அடிப்படையில் அமைந்த அப்பிறவி முதல் கலியுகம் முடிகின்ற வரை அவ்வுயிர் செய்கின்ற நல்வினை மற்றும் தீவினைகளை அடிப்படையாகக் கொண்டே உயர்வும் தாழ்வும் இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. வினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு உயிரும் தனக்கென்று பிரத்யேக தேவர்களையும், முனிவர்களையும் சித்தர்களையும் வழிபாடு செய்கின்ற பொழுது அந்தந்த தேவர்களாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் அந்தந்த உயிர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உபதேசம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரின் வினையின் வீரியத்தை அடிப்படையாகக் கொண்டு உபதேசத்தின் நிலைகளும் மாற்றம் பெறுகின்றது. எந்த அளவிற்கு ஓர் உயிர் நல்வினையைக் கொண்டுள்ளதோ அந்த அளவிற்கு உயர்நிலை ஞானங்களையும் உபதேசங்களையும் அந்த உயிரால் பெறப்படுகிறது. இவ்வாறாகவே அனைத்து முனிவர்களும், தேவர்களும், சித்தர்களும், அவரவர்களை வணங்குபவர்களுக்கு உரிய உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். இவ்வாறாகவே எம்மை வழிபடுவோர்களுக்கும் உலகத்தின் மூலகுருவாகிய நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம் வழிவந்த சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு வருகிறேன். காகபுஜண்டர் சகல உயிர்களுக்கும் உபதேசித்தல்: பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் எம் வழிவந்த கோடான கோடி தேவபுருடர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், மிருகங்கள், பறவைகள், பாம்புகள் முதலான ஒன்று முதல் ஆறு அறிவு வரை படைத்த அனைத்து உயிர்களுக்கும் நான் இதுவரை உபதேசம் செய்துள்ளேன், தொடர்ந்து உபதேசங்களை செய்துகொண்டும் இருக்கின்றேன். பல கற்ப காலங்கள் கடந்த எம் வாழ்க்கையில் பல கோடி விசித்திரங்களை நான் இவ்வுலகின் பார்த்திருக்கிறேன். பூலோகம் மட்டுமன்றி பிற பதிமூன்று லோகங்களிலும் பலகோடி தேவ இன உயிர்களுக்கும் நான் உபதேசம் செய்திருக்கின்றேன். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் என் அரசாட்சி பல கோடியுகங்களாய் குறைவின்றி நடந்து வருகின்றது. கிருதா யுகத்தில் "தேவமதம்" என்னும் பொதுப் பெயரால் ஒரேயொரு மதம் மட்டும் வாழ்ந்து தர்மம் தழைத்தோங்கும் உயர்நிலைக் கொண்டு பதினான்கு உலகங்களும் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கின்றேன். துவாபரா யுகத்தில் ஒன்பதாயிரம் மத பேதங்களைக் கொண்டு இவ்வுலகம் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். கலியுகத்தில் பதினெட்டாயிரம் மதபேதங்களை கொண்டு இவ்வுலகம் வாழ்வதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். வெவ்வேறு சதுர்யுகங்களிலும் வெவ்வேறு வேற்றுமைகளைக் கொண்ட ஒரே ஒற்றுமை மூலங்களைக் கொண்டு தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், , எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் வகை ஜீவராசிகளும், இறை அவதாரங்களும், புராணங்களும், தத்துவங்களும், வேதங்களும், கலைகளும் இவ்வுலகில் தோன்றுவதும் இறுதியில் மறைவதும் மீண்டும் தோன்றுவதுமாகிய சுழற்சி விளையாட்டுக்கள் இவ்வுலகில் நிகழ்வதை நான் பலகோடி ஆண்டுகளாய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு தேவபுருடர்களையும் அடுத்தடுத்த பிறவிகளில் கண்டு அவர்க்ளை ஆசீர்வதித்து அவர்களுக்கு இது எத்தனையாவது பிறவி என்ற விவரத்தை சொல்லி அவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறேன். எல்லா யுகங்களிலும், எல்லா லோகங்களிலும், எல்லா வடிவங்களிலும் நான் ஆதிகுருவாக அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன். காகபுஜண்டரின் பதினாறு திருப்பெயர்கள்: உலகத்தின் ஆதிகுருவாகிய எனக்கு பதினாறு திருப்பெயர்கள் உண்டு. அவையாவன. 1. காகபுஜண்டன் 2. நாகபுஜண்டன். 3. யோகபுஜண்டன். 4. புஜங்கன். 5. புஜண்டி 6. காக்கையன். 7. நாகேந்திரமுனி. 8. மனுவாக்கியன். 9. காலாமிர்தன். 10. சஞ்சீவிமுனி. 11. அஞ்சனாமூர்த்தி. 12. கற்பகவிருட்சன். 13. நற்பவி. 14. பிரம்மகுரு. 15. ஆதிசித்தர். 16. திரிகாலஜெயர்.. காக்கையை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு காகபுஜண்டர் எனப் பெயருண்டு. நாகத்தை கரத்தில் தாங்கியுள்ளதால் எனக்கு நாகபுஜண்டன் என்கிற பெயருண்டு. யோகதண்டத்தை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு யோகபுஜண்டன் என்கிற பெயருண்டு. கரங்களில் பல அங்கங்களையும் கொண்டுள்ளதால் எனக்கு புஜங்கன் என் கிற பெயருண்டு. கரத்தை அண்டியவர்களுக்கெல்லாம் உபதேசித்தருள்வதால் எனக்கு புஜண்டி என் கிற பெயருண்டு. பலகோடி ரூபங்களை நான் எடுத்தாலும் எனக்கு பிடித்தமான ரூபமாக காக்கை ரூபத்தை கருதுவதால் எனக்கு காக்கையன் என் கிற பெயருண்டு. நாகேந்திரனை தலைவராகக் கொண்ட நாகலோகத்தில் வாழும் நாகங்களுக்கெல்லாம் குருமுனிவராகத் திகழ்வதால் எனக்கு நாகேந்திரமுனி என் கிற பெயருண்டு. உலகத்தின் உயர்ந்த நீதியாக விளங்கக்கூடிய மனுநீதியை உபதேசிப்பதால் எனக்கு மனுவாக்கியன் என்கிற பெயருண்டு. முக்கால ரகசியங்களையும் உணர்ந்து அதன் அமிர்தங்களை இவ்வுலகிற்கு உபதேசித்தால் எனக்கு காலாமிர்தன் என்கிற பெயருண்டு. என்றும் அழியாத சிரஞ்சீவியாக நான் வாழ்ந்து வருவதால் எனக்கு சிரஞ்சீவிமுனி என்கிற பெயருண்டு. முக்காலத்தையும் பூரணமாக உணர்ந்து முக்கால அஞ்சனமாக விளங்குவதாலும், எம்முடைய கரத்தில் அஞ்சனம் கொண்டிருப்பதாலும் எனக்கு அஞ்சனாமூர்த்தி என் கிற பெயருண்டு. கற்பகவிருட்சத்தின் மீது அமர்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் அளவற்ற ஞானத்தை நான் உபதேசித்துக் கொண்டிருப்பதாலும், என் ஞான உபதேசத்தைப் பெறுபவர்கள் கற்பகவிருட்சமாக எல்லா வளங்களையும் கொண்டு விளங்குவதாலும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கும் எனக்கு கற்பகவிருட்சன் என்கிற பெயருண்டு. உலகமெல்லாம் நன்மையே விளைய வேண்டும் என்கிற உயர் நோக்கம் கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருப்பதால் எனக்கு நற்பவி என்கிற பெயருண்டு. பரபிரம்ம தத்துவமாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அருளுபதேசம் செய்வதால் எனக்கு பிரம்மகுரு என்னும் பெயருண்டு. சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தனாக இவ்வுலகில் தோன்றி எல்லா சித்தர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டு அவர்களை அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு ஆதிசித்தர் என்கிற பெயருண்டு. முக்காலங்களையும் வென்று பலகோடி ஆண்டுகளாய் வெற்றியோடு சிரஞ்சீவியாக இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு திரிகாலஜெயர் என்கிற பெயருண்டு. இவையன்றியும் இவ்வுலகோர் பல்வேறு குருசொரூபங்களில் எம்மை வணங்கி என்னருள் பெற்று வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். காகபுஜண்டரின் பதினாறு திருக்கரங்களின் அருளாட்சி: நான் என்னுடைய பதினாறு திருக்கரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன். சூலாயுத கரத்தால் உலக உயிர்களை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன். எழுத்தாணி கரத்தால் உலகதோருக்கு அவர்களின் நாவில் ஞானத்தை எழுதுகிறேன். ஞானஒளி கரத்தால் உலகோர்களுக்கு ஞானஒளியைப் பாய்ச்சி ஆசீர்வதிக்கிறேன். அபய கரத்தால் உலகோர்களுக்கு அபயமளிக்கிறேன். காமதேனு கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு எல்லா செல்வங்களையும் குறைவின்றி காமதேனு மூலம் பெற்றுத் தருகிறேன். வீணை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அறுபத்திநான்கு தெய்வீகக் கலைகளையும் உபதேசித்தருள்கிறேன். காகத்தைக் கொண்ட கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அன்பு தத்துவத்தையும் ஒற்றுமை தத்துவத்தையும் உபதேசித்தருள்கிறேன். அஞ்சனம் கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு முக்கால ரகசியங்களை உணரும் தெய்வீகத்தை உபதேசித்தருள்கிறேன். வேலாயுத கரத்தால் உலகோர்களுக்கு வெற்றி ஆசீர்வாதங்களை வழங்குகின்றேன். தண்டாயுத கரத்தால் குருவருளுக்குக் கலங்கம் ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனைகள் வழங்குகின்றேன். வரத கரத்தால் உலகோர்களுக்கு வரம் அளிக்கின்றேன். செந்நாகம் கொண்ட கரத்தால் உலகோர்களுக்கு ஊழ்வினை நீக்கி ஞானத்தை அருள்கிறேன். சுருதி (ஓலைச்சுவடி) கரத்தால் உலகோர்களுக்கு அனைத்து கல்வியையும் அருளுகின்றேன். அமிர்தகலச கரத்தால் உலகோர்களுக்கு அமிர்தத்தை கொடுத்து அவ்வுயிர்களின் ஆயுளை உயர்த்துகிறேன். அட்ட சித்தி முத்திரை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அட்டமாசித்திகளையும் வழங்குகின்றேன். யோகத்தண்டு கரத்தின் மூலம் உலகோர்களுக்கு பூரண யோகமார்க்கத்தை உபதேசித்தருள்கிறேன். இவ்வாறாகவே, என் வலபாகத்திலே சக்திரூபமாக என் மனைவி பகுளாதேவி சுமந்து கொண்டு இவ்வுலகில் தெய்வீக அருளாட்சிகள் செய்து கொண்டு வருகிறேன். எம்போன்ற எங்களிருவருக்கும் அமைந்த ஒத்த திருக்கரங்களான பதினான்கு திருக்கரங்களைத் தவிர்த்து என் மனைவிக்கு வேறுபட்டிருக்கும் அன்னம் கொண்ட திருக்கரத்தின் மூலம் தாய்மை அன்பையும், கரும்பாம்பு கொண்ட திருக்கரத்தின் மூலம் மோட்சத்தையும் உலகோர்களுக்கு என் மனைவி வழங்கியருள்கிறாள். நானும், என் மனைவியும் சிவசக்தி ரூபத்தில் அதாவது தந்தை தாய் ரூபத்தில் (இடப்பாகம் தந்தையாகவும் வலபாகம் தாயாகவும்) இவ்வுலகில் குருவருளாட்சி செய்து கொண்டு வருகிறோம். தந்தை தாய் ரூபமான எம் குருவருளன்றி பேரருளை முழுமையாக பெறுகின்ற பாக்கியம் உலகோர்களுக்கு கிட்டாது. என்பது பேருண்மை. என், அன்பு சீடனாகிய கோரக்கனே! யான் இதுவரை சொல்லியருளிய எம் தெய்வீக வரலாற்றை நீர் மிகப்பணிவுடன் கேட்டபடியினால் பகுளாதேவி உடனுறை காகபுஜண்டனாகிய எம் வற்றாத பதினாறு குருவருட்பேறுகளும் உமக்குக் குறைவின்றி கிடைக்க ஆசீர்வதிக்கின்றோம். நற்பவி! காகபுஜண்டரின் மூலமந்திரங்கள்: காகபுஜண்டரின் மூலமந்திரங்கள் இரண்டு வகைகளாகக் கொண்டதாகும். அவையாவன : கர்மசித்தி மூலமந்திரம் மற்றும் ஞானசித்தி மூலமந்திரம் என்பனவாகும். உலக இன்பங்களைப் பெறுவதற்கு கர்ம சித்தி மூலமந்திரமும், ஞான இன்பங்களைப் பெறுவதற்கு ஞான சித்தி மூலமந்திரமும் பயன்படும். காகபுஜண்டரின் கர்மசித்தி மூலமந்திரம்: "ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீபகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டமகரிஷி ப்யோம் நமஹ நமஹ வசியவசிய ஸ்ரீபாதுகாம் பூஜையாமே! தர்ப்பயாமே!" காகபுஜண்டரின் ஞானசித்தி மூலமந்திரம்: "ஞானானந்தமயம் தேவம் நிர்மல படிகாத்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் காகபுஜண்டம் உபாஸ்மகே!"


No comments:

Post a Comment