Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-9

                                            கருவூரார் போகரின் சீடராவார். கருவூரைச் சேர்ந்தவர் என்பதால் கருவூரார் என்ற பெயர்  இவருக்கு வந்தது. சைவ சமயத்தைக் கடைபிடித்த இவர் ஞான நூல்களை ஆராய்ந்தவர்.சிவ யோக சித்தி அடைந்தவர்.                இவரது காலம் கி.பி. 11 -ம் நூற்றாண்டு.     கார்த்திகை திங்கள் மிருகசீரிடம் அன்று பூச நாளில் ஆரம்பித்து வேப்பமரக் கொழுந்தைக் கிள்ளி இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டால்.., பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது.     ஒரு மாதம் சாப்பிட்டால் குஷ்ட நோய் விலகும். கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று விரல்களால் எடுக்கும் அளவு பொடியை தேனில் குழைத்துத் சாப்பிட்டு வந்தால் நரை,திரை, மாறும் என்கிற வேம்பின் மகத்துவதை முதன் முதலாகச் சொன்னவர் இவர்,   வாத காவியம், வைத்தியம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், மெய்ச் சுருக்கம், சிவஞான போதம், கற்பவிதி, மூப்பு சூத்திரம்,  பூஜா விதி போன்ற பல தமிழ் நூல்களை நமக்கு வழங்கியுள்ளார்.    முனிவர்களால் ஞானப் பாலூட்டப்பட்டு வளர்ந்தவர் கருவூரார்.தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர்.கருவூராரின் தாய்-தந்தை ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோயில்களில் விக்கிரங்கள் செய்து கொடுத்து  வாழ்க்கை நடத்தி வந்தனர்.     அதில் கிடைத்த வருவாய் கொண்டு அவர்கள் முனிவர்களுக்கும்,சித்தர்களுக்கும் வேண்டிய பொருட்களை கொடுப்பது வழக்கம்.       சிறு வயதிலேயே மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்.வசியம், மோகனம்,  தம்பனம்,  உச்சாடனம் ஆகர்ஷணம், வித்து வேஷணம், பேதனம், மாரணம் எனும்  அட்டகர்ம மந்திரங்கள் கருவூராருக்கு அத்துப்படியாகியது. தாமரைக்காய் மாலையணிந்து, புலித்தோலால் செய்யப்பட்ட ஆசனத்தினை ஆலமரப்பலகை மீது விரித்து தென் மேற்குச் திசையில் அமர்ந்து நவசிவாயம்எனும் தம்பனத்துக்குரிய மந்திரம் அந்த வயதிலேயே அவருக்கு வசியமானது.        அறிந்த மந்திரம் யாவற்றையும் ஏழை, எளிய மக்கள் குறை தீர்க்கவே கையாண்டு  வந்தார். சிவாலயங்களில் சிவலிங்கத்தை  தங்கத்தால் உருவாக்குவதும் பாசுரம் பாடி  பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்து திரிந்தார். சாதி,குலம், நீத்துச் சிவத்தல  யாத்திரை செய்து திருவிசைப்பா பதிகங்கள் பாடி வந்தார்.சாதி சம்பிரதாயாங்களை  புறக்கணித்தார். 
                                            ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது.  ஆச்சரியத்துடன் அந்த ஓலையை  வாசித்தார். நீர் உடனே தஞ்சை வந்து  சேரும் என்ற வாசகம் இருந்தது.  அந்த  ஓலை  தன்  குருவான போகரிடமிருந்து வந்திருந்தது. தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது. அதனைப் போக்கவே அவரை அழைந்திருந்தார்.     தஞ்சையில்   இராஜராஜ சோழ மன்னன் கட்டிய பிரம்மாண்டமான சிவாலயம் கட்டியிருந்தான்.சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய அஷ்டபந்தனம் பலமுறை அவிழ்ந்து இளகி பந்தனம் ஆகாமல் போயிற்று. கோயிலுக்குள் நுழைந்த கருவூரார்  சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கே அஷ்டபந்தனம் செய்ய விடாமல் ஒரு பிரம்ம ராட்க்ஷ்ஸி தடுத்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன்மீது காறி உமிழ்ந்தார்.கருவூராரின்  வாய் எச்சில்பட்டு தீப்பொசுங்கி   பிரம்ம ராட்க்ஷ்ஸி கருகியது.  அதன்  பிறகு  அவரே  அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகமும் செய்து வைத்தார்.     சிவபெருமானின் ஐந்து முகமாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம்,வாமதேவம்,  சத்தியோசதம் அண்டரண்ட மந்திரம் உபதேசித்து நிறைவு செய்தார். அண்டரண்ட மந்திரம் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும்.
                                             பிறகு, கருவூரார் அங்கிருந்து புறப்பட்டு திருவரங்கத்திற்குச் சென்றார். அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப் பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று இவரை தம் இல்லம் அழைத்து பெரிதும் உபசரித்தார். அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப் பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று இவரை தம் இல்லம் அழைத்து பெரிதும் உபசரித்தார். சித்தர் பெருமானே! இத்தகைய மோகன சிறையை நான் இதுவரை கண்டதில்லை. இதன் மர்மம் என்ன? நான் அறியாலமா’’? ’என் நெற்றியில் உள்ள மோகன மூலிகைத் திலகம்தான் உன்னை வயப்படுத்தி உள்ளது. மோகன மூலிகையை ஐயும் கிலியும் சவ்வும்என்ற மந்திரத்தை தினமும் நன்கு உச்சரித்து  திலகமாய் இட்டுக்கொண்டால் மோகனம் சாத்தியமாகும் என்றார். இதனை கேட்டு தாசி வியப்பால் விதிர்த்து , விக்கித்து போனாள்.அதனால் களைப்பும் அடைந்தாள். அவளின் களைப்பு நீங்க, அருகிலிருந்த தென்னை மரத்தினைப் பார்த்து,      ‘’பிறங்பிறங் ஷங்ரங்சிங் சிவாய நம’’ என்று கருவூரார் மந்திரம் ஓத நிமிர்ந்து நின்ற தென்னை மரம் இளநீர் பறிக்க கைகெட்டும்  அளவுக்கு வளைந்து நின்றது. தாசி கோமளவல்லியின் புருவம் வில்லென வளைந்து நெளிந்தது. தங்களைத் தொட்டது என் பூர்வபுண்ணியம்.இந்த இரவு விடியாது இப்படியே இருக்க  வேண்டும் என வேண்டினாள். மற்றவர்களுக்கு விடியாமல் உனக்கு மட்டும் விடியல் காண்பாய்.இந்த நள்ளிரவில் உனக்கு மட்டும் ஒளிரும் சூரியனை காண்பாய்என்று கூறி ,... அதோ பார்! சூரியனின் இரதம் வருகிறது சூரிய மண்டலத்தை கண் கூசாது பார்எனக் கூறியபடி,  இரக்ஷ இரக்ஷ ஸ்ரீம் சிவாய நமோஎனும் மந்திரத்தை கருவூரார் உச்சரித்தார். மறுநாள், கோமளவல்லியிடம் விடைபெற எழுந்தார். கருவூராரை பிரிய மனமின்றி வருந்திய நின்ற தாசியிடம் நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன், என வாக்குறுதி தந்தார். அரங்நாதப் பெருமானை தரிசித்து, பெருமாள் தனக்களித்த இரத்தினப் பதக்கத்தை அன்பளிப்பாய் கோமளவல்லிக்கே அன்புப் பரிசாக அளித்துவிட்டு அவ்விடம் அகன்றார். தாசி கோமளவல்லி ஒருநாள் அந்த இரத்தினப் பதக்கத்தைப் போட்டுக்கொண்டு வெளியே வர, கோயில் அதிகாரிகள் அவளைக் கைதி செய்தார்கள். அதிகாரி இந்தப் பதக்கம் உனக்கு எப்படி கிடைத்ததுஎன வினவ, ’எனக்கு ஒரு சித்தர் கொடுத்தார்என்றாள். பெண்ணே, நீ சொல்வது பொய். இது பெருமாளுடைய  இரத்தினப் பதக்கம். யாரும் அறியா வண்ணம் நீ திருடியுள்ளாய்என்று திருட்டுப் பட்டம் சுமத்தினார்கள். சித்தர் பெருமானே! இதுவென்ன சோதனை..என்று நினைக்க மாத்திரத்திலேயே கருவூரார் அங்கு  வந்தார்.  கருவூராரிடம்  அதிகாரிகள்   உனக்கு இந்த இரத்தினப் பதக்கம் எப்படி கிடைத்ததுஎன்று கோயில் அதிகாரி, ‘அதோ அந்தப் பெருமாளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்என்று கூறி ஆகாயத்தை காட்ட பெருமாள் தரிசனம் தந்து நாமே அந்த இரத்தினப் பதக்கத்தை  அவருக்கு தந்தோம்எனக் கூறி மறைந்தார்.
                                          பல புண்ணியத் தலங்கள் வணங்கி சென்று கஜேந்திர மோட்சம் என்னும் தலத்தை அடைந்து அங்கு  இருந்த முன்றீசர் காளியை  அழைக்க  அவர்  தரிசனம் தந்து  என்ன வேண்டும்என்று கேட்க,  மது வேண்டும்’?’ என்று  கேட்கவே  காளி  மதுக்குடமளித்தாள். மீண்டும் காளியிடம், ‘மீனும் வேண்டும்என்று கேட்டார். காளி தமது கோட்ட வாசிகளிடம் மீன் கேட்க அவர்கள் எங்கு தேடியும் மீன் அகப்படவில்லை. கருவூரார்  அருகிலிருந்த வன்னி மரத்தை நோக்கவே,  அம்மரம் மீன் மாரி பொழிந்தது. பிறகு அவ்வூரைவிட்டு அகன்று விஷ்ணு ஆலயத்தை அடைந்து அங்குள்ள பெருமாளைக் கூவி அழைத்தார். பெருமாள் வராமல் இருக்கவே அக்கோயில் பூஜைகள் இல்லாமல் இருக்கக் கடவது என்று சாபமிட்டு சென்று, திருக்குற்றாலத்தை அடைந்து சிவதரிசனம் செய்து திவிசைப்பார் பாடிப் பொதிகையில் எழுந்தருவிருந்தார். , திருக்குற்றாலத்தை அடைந்து சிவதரிசனம் செய்து திவிசைப்பா பாடிப் பொதிகையில் எழுந்தருவிருந்தார். ஒருமுறை இவர் நெல்வேலியப்பரின் சந்நிதானத்து முன்னின்று நிவேதனை காலமென்று அறியாது, ‘நெல்லைப்பா!,நெல்லைப்பா!,நெல்லைப்பா! என்று மூன்ரு முறை  கூவி அழைத்தார். மறுமொழி பெறாத்தால் கடவுள் அங்கு இல்லை என்று நீங்கி செல்ல அந்த ஆலயத்தில் எருக்கு முளைத்து புதராய் மண்டிற்று.. நெல்லைப்பப் பெருமாள் ஓடிவந்து கருவூரார்யை மானூரில் சந்தித்துத் தரிசனம் தந்து அடுக்கொரு பொன்னும் கொடுத்து இவரை நெல்வேலிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். அதனால் முன் முளைத்த எருக்கு முதலிய  புல் பூண்டுகள் ஒழிந்து பழைய பிரகாசம் உண்டாயிற்று.
                                         சிறந்த சிவ பக்தனாக இருந்த சோழ மன்னனுக்கு அப்போது ஒரு சங்கடம் ஏற்ப்படிருந்தது . அந்தச் சோழ மன்னன் கனவில் ஒருநாள் நடராஜ தரிசனம் கிடைத்தது. அந்த நாளிலிருந்து கனவில் தரிசனம் கண்ட நடராஜரைப் போன்றதொரு சிலையைப் பொன்னால் செய்து தர வேண்டும் என்று சிற்பிகைளை வரவழைத்து ஒரு தூலம் பொன்னை நிறுத்திக் கொடுத்தான். ஏனோ தெரியவில்லை சிலை செய்யும் பணியில் சிக்கல் ஒன்று முளைத்துக் கொண்டே இருந்தது.பொன் வார்ப்பு நிலைத்து நிற்காது இருந்தது. அதனை கண்ட சிற்பி மனம் நொந்து போய் இறைவனை வேண்டி நின்றனர். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது நான் சொன்ன கெடு தேதிக்குள் நடராஜர் சிலை தயாரித்திருக்க வேண்டும். இல்லை யெனில் எல்லோரையும் கழுவில் ஏற்றிவிடுவேன்’’ என்று மன்னன் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தான். அதன் காரண்மாகவே சிற்பிகள் மனம் நடுங்கி புலம்பிக் கொண்டிருந்த போது அங்கே கருவூர் சித்தர் வந்து சேர்ந்தார். ஏன் இப்படி நெஞ்சம் பதைபதை நிற்கிறீகள்? உங்கள் கலக்கத்தை நான் போக்குகிறேன். நீங்கள் எல்லோரும் சற்று வெளியே சென்று இருங்கள்.நான் சிலையை வார்த்துத் தருகிறேன்.என்று கருவூரார் சொன்னதும் யாவரும் வெளியே சென்றனர். கருவூரார் பொன்னை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தைப் போட்டார். அதன் பிறகு அதனை அச்சில் வார்த்தார். அச்சிலிருந்து வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலையைக் கண்டு எல்லோரும்  வியப்பெய்தினர். சோழ மன்னன் செய்தியறிந்து ஓடோடி வந்து பார்த்தான்.தான் கனவில் கண்ட நடராஜர் தரிசனத்தை அந்தச் சிலையின் ஒளியிலும் வார்ப்பிலும் கண்டு திகைத்துப் போனவன் முகம் கருத்துப் போனது. நான் பத்தைரை மாற்றுத் தங்கம் அல்லவா கொடுத்திருந்தேன்.நீங்கள் அதனை திருடி எடுத்துக் கொண்டு செம்பால் சிலை செய்து விட்டிருக்கிறீகள்....,  அப்படிதானே?” என்று   சிற்பிகளை சினம் கொண்டு பார்த்த போது அவர்கள் பயந்து நடுநடுங்கிப் போனார்கள். அரசே!   இந்த சிலையைச் செய்தது நாங்கள் இல்லை.இந்த கருவூரார்தான் செய்தார்என்று அவரை சுட்டிக்காட்டினர்.அப்படியானால் அந்தக் கருவூராரை சிறையில் தள்ளுங்கள்என்று சோழ மன்னன் ஆணையிட்டு சிறையில் தள்ளினான். திருமூலர் சோழ மன்னன் செய்த அபாண்ட செயலினை கேள்வியுற்று அங்கு வந்து சேர்ந்தார். கருவூரார் பெருஞ்சித்தர்.  உனக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசையால் அவர் மீது வீண்பழி சுமத்தி  விட்டாய்.  நீ  கொடுத்த எடைக்குச் சமமாக வெள்ளியைக்  கொண்டு வந்து உருக்குஎன்று திருமூலர் கூறியதும் மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு  துளி  செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து தங்கமாக மாறியது.      அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி  செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து      தங்கமாக மாறியது.  ‘’மன்னா நீ ஆசை என்ற பெரிய மாயையில் வாழ்கிறாய். ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை உணர்ந்து கொள்வாய்.செல்வம் யோகியை வசப்படுத்த முடியாமையால் யோகிக்கு செல்வம் வசப்படுகிறதுஎன்று திருமூலர் உபசேதம் செய்தார்.    
                                    இதனால் கருவூரார் புகழ் பரவ பவர அவர் மீது பொறாமையும், பகைமையும் கொண்டோரின் எண்ணிகையும் ஏராளம் முளைத்தது. வேதியர்கள் அவர் மீது எண்ணற்ற   குற்றச்சாட்டுகளையும்   புகார்களையும்   மன்னனிடம் தொடர்ந்து உரைத்தனர்.  மன்னன் அறிவான்  மகான்  அவரென்று.  எனவே புகார் பலன் தரவில்லை. மன்னன்  அவரைத்  தண்டிக்க  எண்ணாததைப் புரிந்து கொண்ட வேதியர்கள்  ஒருநாள்  கருவூராரை  கொல்வதற்கு   ஆயுதங்களுடன் துரத்த, அவரோ ஓடிச்சென்று சிவலிங்கத்தைத் தழுவிக்கொள்ள சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தார். இவரின் கதையை அபிதான சிந்தாமணி நூலில் காணப்படுகிறது.     இவர் பூஜை விதிமுறைகளையும் ஆதி பராசக்தி வாலை பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளைப் பல வடிவங்களாக்கி, அவளைச் சிறுபிள்ளைக் கன்னியாகவும், சித்தர்களின் மனவடக்கத்தையும் சோதிக்கும் சிவகாமி ரூபியாகவும் விளையாட்டு வம்பியாகவும் சித்தரித்துக் காட்டி பூஜை செய்யும் விதியை பாடலாக பாடியுள்ளார்.  இவர் போகரிஷியின் மாணவர் என்றும் சொல்வர்.    பல வைத்திய நூல்களும் எழுதியுள்ளார்.

கொங்கணவர் .                       
கொங்கணவர்      மேலைக் கடற்கரை     கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது, மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்பலானது . பிறகு,     நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை, சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்குஎன்று அமைதியாகப் பதில் அளித்தார். என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்என்றார் அவர்.     கொங்கணவர், அந்த பெண்மணியின் தொலைவில் உணர்தலை (ஞானதிருஷ்டி) எண்ணி வியந்தார். அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார்.    போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. இவர் திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர். கொங்கணவர் வாத காவியம் பல வேதியியல் ரகசியங்களைப் பெற்றுள்ளது. கொங்கணவரின் முக்காண்டங்கள்,
வைத்தியம் 200,
வாதசூத்திரம் 200,
ஞான சைதன்யம்,
வாலைக்கும்மி,
சரக்கு வைப்பு,
முப்பு சூத்திரம்,
ஞான வெண்பா,
உற்பத்தி ஞானம்,
சுத்த ஞானம் குறிப்பிடத்தக்கதாகும். இவர் சுமார் 24 நூல்கள் இயற்றியுள்ளார்.      
                          எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.      கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார். அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.      தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.      ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்துஇரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார். கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.      
                              ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.       தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்துகொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.       திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.       கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.       தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்என்று கூறி அவரிடம் விடைபெற்றான். கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.      கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் பல சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.      
                              தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்என்று வழியனுப்பினார்.    பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார். அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான். அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர் திருவேங்கடத்தில் சித்தியடைந்தார்.
கொங்கணவர் இயற்றிய நூல்கள்:
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
 கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21
கொங்கணவர் சுத்த ஞானம் – 16 என்பவையகும்.
கொங்கணவர் சித்தர் தியானச் செய்யுள்
கொக்கை எரித்த கொங்கணரே அம்பிகை உபாசகரே கௌதமரின் தரிசனம் கண்டவரே இரசவாதமறிந்த திவ்யரே உங்கள் திருப்பாதம் சரணம்.
கொங்கண சித்தருக்கான பூசை முறைகள்:
அகப்புறத் தூய்மையுடன் பூஜையைத் துவக்க வேண்டும். அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகிக் கோலமிட்டு, எட்டு பக்கங்களிலும் சந்தனமும், குங்குமமும் இடவேண்டும். அப்பலகை மீது கொங்கணரின் உருவப்படத்தை வைக்க வேண்டும். சுத்தமாக விளக்கிய குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் மலரிட்டு அலங்கரித்து முக்கூட்டு எண்ணெய் தீபமேற்றி பூசையைத் துவங்க வேண்டும். முதலில் தியானச் செய்யுளை சொல்லி பக்தியுடன் வணங்கவேண்டும். பின்பு வில்வம், சாமந்தி, அரளி ஆகியவற்றால் 16 போற்றிகளைச் சொல்லிக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் உள்ளவரே போற்றி!
2.
அம்பிகைப் பிரியரே போற்றி!
3.
இரசவாத சித்தரே போற்றி!
4.
அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி!
5.
சிறந்த தவசக்தி பெற்றவரே போற்றி!
6.
செல்வங்களைத் தருபவரே போற்றி!
7.
வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
8.
நோய்களை அழிப்பவரே போற்றி!
9.
வறுமையை போக்குபவரே போற்றி!
10.
ஞானம் அளிப்பவரே போற்றி!
11.
தீய கனவுகளில் இருந்து காப்பவரே போற்றி!
12.
மாயையை அகற்றுபவரே போற்றி!
13.
கருணாமூர்த்தியே போற்றி!
14.
காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி!
15.
கொங்கு தேசத்தவரே போற்றி!
16.
குலம் விளங்கச் செய்பவரே போற்றி!
இவ்வாறு அர்ச்சித்தபிறகு ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!என்று 108 முறை ஜெபித்து பிரார்த்தனையை கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.
ஸ்ரீ கொங்கணசித்தரின் பூஜா பலன்கள்: முறைப்படி இவரை வழிபட்டால்
1.
மனவளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும்.
2.
கேது பகவானின் தோசம் நீங்கி களத்திர தோசம் இன்றி திருமணம் நல்ல முறையில் நடக்கும்.
3.
தியானம் கைகூடும்.
4.
சகவாச தோசம் நீங்கும்.
5.
தீய பழக்கங்கள் விலகும்.
6.
ஞாபக சக்தி உண்டாகும்.
7.
உறவினர்களின் பலம் உண்டாகும்.
8.
முன் கோபம் உள்ளவர்கள் சாந்த சொரூபிகளாவர்கள். இவருக்கு மஞ்சள், அல்லது சிவப்பு வர்ணங்கள் உடையை வைத்து அல்லது அணிவித்து பூஜை செய்யலாம். வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.
நிவேதனம்: தயிர்சாதம், கல்கண்டு, பழங்கள்.
                                 போகரின் சிஷ்யர்களுள் வித்தியாசமானவர், கொங்கணர் கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர்.அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள்.இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும்.கொங்கணர் குடும்பத்தில்,சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது.கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார்.தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது... திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்என்று விரும்பினாள். அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க... சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது. கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது.                           
                                         இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது. போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார். ‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர். ‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’ ‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’ ‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது..... ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது....’’ ‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’ ‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்...’’ ‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா...? வேறு வழிகள் இல்லையா?’’ ‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி... தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்... தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...!’’ என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது.
                                        போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது. ‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்...’’ _ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது. எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன. அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...! ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம். உதாரணத்திற்கு, விசுவாமித்திரர் ஒருவர் போதுமே...! இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர், தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது... யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார். இப்படி கொங்கணர் அப்படியும் இப்படியுமாக தடுமாறினாலும், இறுதியில் தவத்தின் பெருமையை உணர்ந்து, பெரும் தவசியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். நான் ஒரு தவசியே இல்லை.... நான் தவசியாக வேண்டுமானால் என்னையே மறக்க வேண்டும். எனக்கு என்னை நன்றாகத் தெரிகிறது எனும்போது, நான் எப்படி தவசியாவது...? ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும்!என்று அவர் தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது.
                                        மொத்தத்தில், கொங்கணர் வாழ்க்கை என்பது, மானுடர்களுக்கு தவத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு வாழ்க்கையாக ஆகிவிட்டது. இவர் வாழ்வில், பல ரசமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது. அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்... அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு.... ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம், கோபமும் கர்வமும்... மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும். துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே, தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோஎன்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்றார். நான்என்பது நீங்கி மமதை விலகிடும்போது, எல்லாமே வசப்படுகிறது. அல்லாதவரையில், எத்தனை பெரிய தவசியாக இருந்தாலும், மாயை அவர்களை விடுவதில்லை. கொங்கணரையும் அது அவ்வப்போது ஆட்டிவைத்து தலையில் குட்டியது.
                                  கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. அப்போது வள்ளுவருக்கு வாசுகி பணிவிடை செய்தபடி இருந்தாள். கற்புக்கரசிகளான நளாயினி, கண்ணகி, சீதை போன்றவர்களுக்கு ஒரு மாற்றுக் கூட குறையாதவள், வாசுகி. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது. காரணம், அவளது பணிவிடை. இது புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்...என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்க, ஆடிப்போய் விட்டது கொங்கணனின் தேகம். வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது! அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது... ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா?’’ என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள். காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார்.
                               ஒருமுறை, சிவலிங்கம் ஒன்றின்மேல் பூப்போட்டு வணங்குவது போல குளிகையைப் போட்டு வணங்கினார். அந்தக் குளிகை பொடிந்து பூசிக் கொள்ளும் நீறாகாமல் அப்படியே ஆவியாகி விட்டது. அது, குளிகைக்கு நேர்மாறான செயல்! அங்கே அவ்வாறு ஆகவும், இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புவதைப் புரிந்து கொண்டு, அங்கேயே தவம் செய்து, ‘குளிகையை மலரினும் மேலாகக் கருதி அதை லிங்கத்தின் மேல் வைத்தது தவறுஎன்பதை உணர்ந்தார். அப்படி உணர்ந்த நொடியில் அக்குளிகை திரும்ப அவருக்குக் கிட்டியது. சில குளிகைகள், வைக்கப்படும் இடத்தில் கல்லோ மண்ணோ இருந்தால், அதை சாம்பலாக்கி விடும். அவ்வளவு உஷ்ணமானவை. லிங்கத்தையே கூட தன் குளிகை சாம்பலாக்கும் என்று காட்ட கொங்கணர் முயன்றார். ஆனால், தோற்றார் என்றும் கூறுவர். கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது. அபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும்

கொங்கண நாயனார்.

                           கொங்கண நாயனார் சித்தர் இவர் திருமழிசை ஆழ்வார் காலத்தவர். கி.பி. ஏழாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.இவருடைய தாய், தந்தையார் இரும்பை உருக்கிக் கலங்கள் செய்து கோயில் வாசலில் வைத்து, அவற்றை விற்று வரும் பணத்தில் பிழைத்து வந்தனர். ஏழமை நிலையில்இருந்தாலும் தங்கள் இல்லம் வரும் முனிவர்கள்,சாதுக்கள்,சித்தர்களையும் முகம் மலரஅகம் குளிர வரவேற்று உபசரித்து வந்தனர்.அதே வழியில்கொங்கணாரும் சாதுக்களையும்,சந்நியாசிகளையும் ஆதரித்து தொண்டு ஊழியம் செய்து வந்தார். கொங்கணர்  பிற்காலத்தில் மிகவும் செல்வந்தராக இருந்தார் என்பதை,      தோணவே கைத் தொழிலாங் கலங்கள் செய்து          தோராமல் வர்த்தகத்தில் நிபுணனாகி          ஆணவங்கள் உள்ளடக்கி அரிய பாலன்         அவனிதனில் வர்த்தகனாயிருந்தார் தாமே...என்று  அகத்தியர் கூறும் பாடலின் மூலம் அறியலாம். வீரட்டகாச மூர்த்தியின் சிரசில் தமது குளிகையை வைக்க அச்சிவலிங்கமூர்த்தம் அக்குவிகையை நீராக்காமல் மறைத்ததால் அச்சிவ மூர்த்தியைப்பூசித்து இவர் குளிகைபெற்றார். இவர் ஒரு சமயம் திருமழிசை ஆழ்வாரிடம் குளிகை ஒன்றைக் கொடுத்து’ “ இது காணி கோடியைப் போதிப்பது!என்று கூற திருமாழிசை ஆழ்வார் தம் தேகத்தின்அழுக்கையே உருட்டிக் கொடுத்து, ”இது காணி கோடியாக்கும்!என்று கூறினார். அதை இவர்பரீட்சித்து அறிந்து ஆழ்வாரிடம் நட்புக் கொண்டார். இவரது நாடு கொங்கு நாடாயிருக்கலாம். இவர் வடக்கிலிருந்து தெற்கில் வந்து தஞ்சாவூரில்தன் பெயரால் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து முக்தி பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரைச்சிலர் அகஸ்தியர் மாணவர் என்று சொல்வர்.                      
இவர் மருத்துவ நூல்களும், இரசவாத நூல்களும், யோக நூல்களும்,
கொங்கணர் கடை  காண்டம்,திரி காண்டம், ஞானம் நூறு, குவிகை, கொங்கண தேவர் ஐந்நூற்றிரண்டு,கொங்கண தேவர் கலை, கொங்கண நாதர் சூத்திரம், கலைஞர் சூத்திரம், துருசுகுடுமுப்பத்தொன்று, தலைக்காண்டம், நடுகாண்டம், முப்பூதிட்சை, கொங்கணர் வாக்கியம்,கொங்கணர் தியானம் முதலிய நுட்களை இயற்றியுள்ளார். கொங்கணர் சித்தருக்குள் தனக்குதானே ஏதோ சிந்தனை ஓட்டம் பரவியது.நிஷ்டை ஆழ்ந்தார்.ஆழந்த நிஷ்டை மூலாதாரத்தில் சித்தி சித்தி செய்தபோது ஆறாதாரமும் பணிந்து ஒளிரும்.அண்டம் கைக்குள்ளடங்கி சித்தித்தது. காயசித்தி, வாதசித்தி, யோக சித்தி, ஞானசித்தி அனைத்தும்பெற்றார். தன்னை அறிந்து அர்ச்சிக்க உடல் தத்துவம் அறிய வரும். உலகம் அணுவின் சேர்க்கை.உடல் இறந்த பின்பு பஞ்ச பூதங்களும் அதன் அதன் கூட்டில் கலந்துவிடும். உடல் அழியாமல் காக்கும்நெறி அறிந்தவர்கள் சித்தர்கள்.
                                         ஞானப்பால் அருந்தியகொங்கணர் சித்தரிடம் அஞ்ஞானம் அகல, ஒருநாள் அவர் சந்நியாசியாகிகாடு, மலை, வனங்களென சுற்றி திரிந்தார். இப்படி காடுகளில் சுற்றி திரிந்த போது  அரிய கற்பகமூலிகை கண்டறிந்தார்.  ஒருநாள்  வனாந்தரங்களில்  மூலிகைகளை தேடிகொங்கணர் அலைந்தபோது, ஒரு துயர் சம்பவத்தை பார்த்தார். அக்காட்டில் பளிங்கர் இனத்தைச் சேர்ந்த ஓர் அழகிய இளைஞன் இறந்து கிடந்தான். அவனதுஉற்றார் உறவினர் அனைவரும் துக்கத்தால் நெஞ்சம் குமற கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த துயரமான சம்பவம் கண்டகொங்கணருக்கு துக்கம் சூழ்ந்தது. உடல் அழிந்து போகுமென்றுசாமான்யர் அழலாம். அழியாது காக்கும் நெறியறிந்த சித்தர் கவலை கொள்ளலாமா? தான்கற்ற கூடுவிட்டுக் கூடுபாயும்  பரகாயப் பிரவேசம் மூலம்,  தனது உடலை மறைவாக  ஓர்இடத்தில் உதிர்த்துவிட்டு இறந்து போன பளிங்கர் இளைஞர் சடலத்துள் புகுந்து உயிர் பெறசெய்தார்.   உற்றார், உறவினர், நண்பர்கள் என சுற்றிலும் எல்லாரும் கதறிக்கொண்டிருக்க பளிங்கர் இளைஞன் அப்போதுதான் உறங்கி எழுப்பவன் போல் உயிர் பெற்று எழுந்ததைப் பார்த்து அவர்கள் அனைவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்கு மறைவாக மறைத்து வைத்திருந்த கொங்கணர்  உடலை பளிங்கர் கூட்டம் கண்டவர். உயிரணைந்த உடல் உடன் எரிதீயில் நனைய வேண்டும். மரப்பட்டைகளை கொண்டு எரித்து சாம்பலாக்கினர் சகல சித்திகளும் பெற்ற சித்தர்களுக்கு, யோகிகளுக்கும்,ஞானிகளுக்கு எந்த உடலும் தேவையுமில்லை, சொந்தமுமல்ல. உயிர் நடமாட ஒரு கூடு மட்டும் தேவை. அதுவும் வாய்க்கவில்லை எனின் தனித்து சூக்கும உடலாய் அலையவும் அறிந்தவர்கள்.இப்போது பளிங்கர் உடலில் புகுந்த கொங்கணர்  அரிய மூலிகைகளின் இரகசியத்தை அனைத்தையும் கண்டறிந்தார். அனைத்து காய சித்திகளையும்  மூலிகையும் தெரிந்துக்கொண்டார். மகா சித்தர் போகரையும் அகத்தியரையும் சந்தித்து அவர்களிடமிருந்து ஞானம் பெற்றார். பிண்டத்தினை அறிந்தால் அண்டத்தை உணரலாம்.அந்த ஆதிப்புள்ளியையும் போகரிடம் இருந்து அறிந்து வைத்திருந்தார்.அந்த ஆதி,அந்தம் புள்ளியை நோக்கி, அக்கானத்தில் மூச்சடக்கி நிஷ்டையில் ஆழ்ந்தார். கவிந்த வாழைப் பூவைப்போல முகத்தை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு, பெண்பாம்பு  (வாலை)     போல் சுருட்டி சீறியபடி கிடக்கும் குண்டலினி சோதி  தட்டி எழுப்பினார். மூலத்தில் சோதியை கண்டவரே கொங்கணர். தடையற்ற அந்த ஆனந்த மகிழ்ச்சியில் நிஷ்டையில் இருந்த போது ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று சட்டெனகண்ணிமையில் எச்சமிட.., சித்தரின் இமைப்பகுதி திறக்க கோபக்கனல் பட்டு அந்த கொக்கு எரிந்து சாம்லாகி தரையில் விழுந்தது. நிஷ்டை கலைந்து போயிற்று.
                                          நீண்ட காலம் ஆகாரமற்று இருந்த காரணத்தால் வயிறு பசித்தது. ஆகாரம் வேண்டி ஒரு இல்லத்தில் முன் நின்று உண்ன உணவு வேண்டினார். அந்த இல்லத்தரசி கொங்கணர் வந்து நின்றதையே கண்டு கொள்ளாது, வெளியிலிருந்து வந்த தன் கணவனுக்கு ஆசனமிட்டு, தலைவாழை இலை விரித்து சாப்பாடும், பதார்தங்களையும் இட்டு பரிமாறினாள். கணவனுக்கு உணவு பரிமாறுவதிலும், தாகம் தீர்க்க தண்ணீரும், தாம்பூலம் தரித்து கொடுப்பதிலும் கவனம் பிசகாது நடந்துகொள்வதை கண்ட கொங்கணரும் உடல் கோபத்தில் நடுங்கியது. இல்லத்தில் பத்துபாத்திரம் தேய்க்கும் அற்ப மானுடப் பெண், சகல சித்திகளும் கைவரப் பெற்ற தன்னை வாசலில் காத்து நிற்க வைத்து காயப்படுத்தி விட்டாளே என்று அவளை சினம் பொங்க விழித்துப் பார்த்தார். ஓ..., என்னை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்று அவரது சினப்பார்வையை சட்டை செய்யாது அந்தப் பதிவிரதை கேட்டதும் அப்படியே அதிர்ந்து போனார் கொங்கணர். இந்த சாமான்ய பெண்மணிக்கு இந்த உடன் அறியும் சித்து எப்படி சாத்தியமாயிற்று? மனமானது நம்மிடத்திலேயே உள்ளது என்ற போதிலும், நமக்கே தெரியாத ஆழ்கடல் இரகசியங்கள் அதனுள் புதைந்து கிடக்கின்றன. இம்மண்ணுலகில் சாதாரண மானுடர் இடத்திலும் அதீத சித்து இருப்பதை கொங்கணர் அறியக்கூடிய வாய்ப்பு இது. பதிவிரதை தர்மத்தின் முன்னால் தனது சித்து ஏதும் செல்லா என்பதை உணர்ந்தார்.  இச்சம்பவத்தினால் மிகவும் மனம் நொந்த போனார் கொங்கணர்.இதனிலும் மேல் தனது வலிமையை பெருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான இடமும்,வழிமுறைகளை தேடி அலைந்தார். கானகத்தில் இடம் தேடி அலைந்தபோது அவர் காதுகளில் சங்கு, செகண்டிகள் முழங்க, மத்தளம், பேரிகையும் ஒலியும் கேட்டது. அப்போது கொங்கணர் கண்ணெதிரே ஒரு சமாதி தெரிந்தது.கைகூப்பி வணங்கி நின்றபோது போது சமாதியிலிருந்து சோதி சொரூபியாக கெளதம மகரிஷி வெளியே வந்தார். கொங்கணர் கெளதம மகரிஷி வணங்கியபடி தன் வாழ்க்கை வரலாற்றினை அனைத்தும் அவருடன் பகிர்ந்து கொண்டார். சுவாமி நான் இன்னும் மேலான பரிபூரண சித்து அடைய விழைகிறேன். அதற்கு தாங்கள் அருள் புரிய வேண்டும்என்று கொங்கணர் வேண்டினார். நான் அது ஆனேன் என்பது வேதாந்தம். அது நான் ஆனேன் என்பது சித்தாந்தம். முன்னதில்  நான் எனும் முனைப்பு தோன்றி ஆன்மா முற்பட்டு நிற்க , பிரம்மம் பிற்பட்டு நிற்கிறது. ஆனால்,  பின்னதில் பிரம்மம் முன்னிற்க, நான் எனும் ஆன்மா பின்னிற்கிறது .இவைகளை தாண்டி நீ  இன்னும் உயர் சித்தி அடைய சமாதி நிலை தேவை. அதற்கேற்ற இடமும் இதுதான்            என்று  ஓரிடத்தினை கெளதம மகரிஷி காட்டினார். கொங்கணர் அந்த இடத்தில் இறங்க மழை பொழிகிறது. அவர் சாமதி இருந்த இடத்தில் பூமி மூடிக்கொண்டது. துக்கமிலா ஒளிமயமான மனநிலை மனநிலை மனத்தை உறுதிப் படுத்துகிறது. மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் நிலைக்காதிருக்க அதுவே சமாதி. பரத்தோடு சேர்ந்து பரம் பொருளாக ஆகும் நிலை அது. ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் சமாதி நிலையில் இருந்தார் கொங்கணர். பற்றற்ற சித்தருக்கும் சித்துக்கள் மீதான ஆசைப் பற்று அற்று போய்விடுவதில்லை.சமாதி நிலையிலிருந்து திரும்பிய கொங்கணர் இன்னும் உயர்நிலை பெறும் வேட்கையில் யாகம் செய்ய முற்பட்டார். இதனை அறிந்த கெளதம மகரிஷி கோபமுற்று கொங்கணர் சித்தரிடம் வந்தார்.
                                     சித்தர்கள் வாழ்க்கை முறை வேறு; முனிவர்கள் வாழ்க்கை முறை வேறு. முனிவர்கள் செய்யும் யாகங்களை சித்தர்கள் செய்தல் தவறு. சித்தர் செய்யும் ஒரு நாளும் முனிவராவதில்லை. சாபங்களும் வரங்களும் அருளும் சக்தி எங்களுக்கு மட்டுமே உரியது. நீ செய்தது அதிக பிரசங்கித்தனமான செயல். செயலுக்குரிய செயலால் இதோ பிடி சாபம்.. - என்று கெளதம மகரிஷி சபித்தபோது கொங்கணர் மிரண்டு போனார்  சுவாமி, சாபம் ஒன்று உண்டெனில் விமோசனம் என்ற ஒன்று உண்டல்லவா?   தயை கூர்ந்து சாப விமோசனம் தாருங்கள்              என வேண்டினார். நீ தில்லை வனத்துக்குச் சென்று தாயாரைத் துதித்து சாப விமோசனம் பெறுவாய்..தில்லை வனத்துக்குச் சென்ற கொங்கணர் தாயாரை துதித்த போது அங்கு வந்தபராசர முனிவரை வணங்கி சாப விமோசனம் பெற்றார். திருமாளிகைத் தேவரைக் கண்டு வணங்கி பல இரகசிய சாதனை முறைகளை அறிந்து கொண்டு தீட்சை பெற்று, நிர்வாண தீட்சையும் பெற்றார். செரூப மணியை வாயில் வைத்துக்கொண்டும் கமலினியை இடுப்பில் கட்டிக்கொண்டும் அட்டமா சித்திகள் யாவும் செய்தபடி ஆகாய மார்க்கமாக உலகமெங்கும் உலா வந்தார் கொங்கணர். கொங்கணருக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட சீடர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் யோக ஞான சித்திகளைப் பெற வழிகாட்டினார். இறுதியாக் திருவேங்கடமலைக்குச் சென்று தவம் செய்து அங்கேயே சமாதி நிலையடைந்தார்.  கொங்கணச் சித்தர் இயற்றிய பாடல்கள்,    ‘’ கொங்கண நாயனார் வாலைக் கும்மி             என அழைக்கப்படுகின்றன இப்பாடல்கள் மிகச் சிறந்த கருத்துகளைக் கொண்டவை. மக்களுக்கு நல்லறிவைப் புகட்டுபவை. ஊத்தைச் சடலமென றெண்ணா - தேயிதை உப்பிட்ட பாண்டமென றேண்ணாட்தே பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப் பார்த்துக்கொள் உன்ற ணுடலுக்குள்ளே.  இவ்வுடலை மாயமென்றும், நிலையில்லாமை என்று எண்ணாதே.   சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இவ்வுடல் மூலம்   தான் யோகம் செய்து குண்டலினி சக்தியை வசப்படுத்தி இறவா   நிலையை எய்த முடியும். இவ்வுடலை ஊத்தை சடலமென்று   எண்ணாதேஉப்பு என்பது உணவு, வெறும் உணவை மட்டுமே   உட்கொள்கின்ற உடலல்ல.இந்த உடலைக்கொண்டுதான் சித்தம்   அடைய முடியும்

சட்டைமுனி.

                       சட்டை முனி      தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மலோடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார்.     சட்டை முனி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமிழைக் கற்றார். ஞானம் கொண்டார். சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து அநேக வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்றும் கருவூரார் கூறுகிறார்.     தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் தரணியில் உள்ளோர்க்கு எடுத்துக் காட்ட , சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது. இதிலுள்ள வேதியியல் விந்தைகளை, விவரிக்க முடியாத அதிசயங்களை, அற்புதங்களைக் காட்ட முயல்வதும், மிகவும் அரிய செயலாகும்.     சட்டைமுனி இரசவாதம் என்ற நூலில் பாதரசத்தை மணியாக்கி, அதற்கு உலோகங்கள் இரத்தினங்கள், உபரசங்கள் எல்லாவற்றினுடைய சத்துக்களையும் கொடுத்து, அவற்றை உயிருள்ள இரசமணிகளாக்கும் விதத்தையும் கூறுகின்றார்.     சட்டை முனி, திருவரங்கத்தில் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார்; இன்றும் அவர் அங்கேயே இருக்கிறார் என்று கருதப்படுகிறது. சட்டை முனி்      சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர். சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டு தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்து பிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்டக் காரணத்தால் விவசாய  கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின் வாசல்களில் தட்டை ஏந்தி யாசம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.
                            ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது வட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர் விட்டார். முனிவர். யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டு நீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும். சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.என்றார். சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனை ஆலயம் சென்று தினம் வணங்கினான். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிப்பட தவறவில்லை.
                                                 ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டு வெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது. ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதவிவிட எண்ண மில்லையா? ‘ சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில் வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்என்றார். உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்று தாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். [ இவரை கயிலாய சட்டைமுனி நாயனார்என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளி சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்..] சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்த செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ இதில் ஒன்றும் வியப்பில்லை. இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்என்றார். அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்து சித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார்.போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர், கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞான நிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார்.இவரின் தவத்தால் கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்..ரோமசர் போன்ற சித்தர்களின் நட்பும், ஆதரவும் பெற்று சிறந்து விளங்கினார் சட்டைமுனி ஆயிரத்து இருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின் வைப்பு, நிகண்டு, வாத காவியம், தீட்சை, ஞான விளக்கம் என பதினான்கு நூல்களையும் இயற்றியுள்ளார். 
                     கயிலாய பரம்பரையில் வந்த பேர்க்குக்                         கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே..    என்று இவர் பாடுவதால் கயிலாயத்தில் வாழ்ந்தவர் என உறுத்திப்படுத்தியுள்ளார். அதனால் இவர் இயற்றிய பாடல்கள் மானிட உலகிற்குச் கிடைத்த மாபெரும் சொத்தாகும். இவர் இயற்றிய ஞானப் பாடல்களாகும்.                 ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்                அறிந்து கொண்டே அறிவாலே நின்று பாரு;                சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்                செகமெலாம் பெண்ணான வுருத்தானப்பா!                ஓமப்பா பொன்மண்வா சணைவி னாசை                ஒற்றி நின்ற விந்திரிய மயக்கத் தாசை                நாமப்பா வென்று சொன்ன ஆண்மையாசை               நல்வினைக்குத் தீவினைக்கும்  வித்து மாச்சே.  [ இவ்வுலகை எல்லாம் அடக்கி ஆளும் திரோதாயி’’ எனும் மாபெரும் சக்தி பெண் சக்தியாகும்.    இவ்வுலகப் பொருள்களின் மேல் கொள்ளும் ஆசைதான் துன்பங்களுக்கு மூலகாரணம்.   இதனை நன்கு அறிந்துக்கொள்ளவேண்டும். நாம் கொள்ளும் ஆசை, ஐம்புலன்கள தம் வழியே   செயல்படும்போது நன்வினைக்கும் தீவினைக்கும் வித்தாக அமைகிறது. ]     சட்டைமுனி ஒருநாள் இரவு திருவரங்கம் கோயில் கோபுரத்தை தரிசித்து அரங்கா….. அரங்கா…” என்று குரல் கொடுக்க, வாசல் திறந்தது. கோயிலுக்குள் சென்று இறைவனை மனமுருகி வேண்டினார். கோயில் வாயிற் திறந்திருப்பதைக் கவனித்த காவலர்கள் சட்டைமுனியை கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். நிர்வாகித்தனர் அரசனிடம் அழைத்துச் சென்றனர். மன்னர் விசாரணையில் நடந்த விபரத்தினை கூற மன்னன் இந்த கூற்றை நம்பவில்லை.     இது உண்மையா என அறிய சட்டைமுனியை மீண்டும் கோயில் வாசலில் நிறுத்தி….,  எங்கே குரல் கொடு மணி அடிக்கிறதாவாயிற் கதவு திறக்கிறதா என்று பார்ப்போம்.. என்றனர்.   சட்டைமுனி மீண்டும் அரங்கா……, அரங்கா…” என்று மூன்று முறை குரல் கொடுக்க வாயிற் கதவு தானே திறந்து மணியும் ஒலித்தது. மன்னரும் மக்களும் அவரின் மகத்துவைத்தை உணர்ந்து வணங்கி நின்றனர். மன்னன் தான் தவறு செய்த உணர்ந்து அவரை தம்மோடு தங்கியிருக்க வேண்டினார். சட்டைமுனியும் திருவரங்கத்திலேயே தங்கி இறைவனுடன் கலந்தார்.        மயங்குவான் பொண்டேப் புரட்டுப் பேசி        மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்        தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;        சாதகமா யோகத்திற் சார்ந்தே என்பான்;        தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே என்பான்        செகசால் திரோதாயி சிரிப்பான் பார்த்து;        முயங்குவான் சமாதிவிட்டே னையோ வென்பான்        மூடமொற்ற ஞான்மெல்லா முலகிற் பாரே.      [ மனிதன் பொன்னையும், பொருளையும் தேடப் பொய் பேசுகிறான்.        ஞானம் (மெய்யறிவு) எதுவும் பெறாமலேயே மகத்தான ஞானம்        தாம் பெற்று விட்டதாக வீண் ஜம்பம் செய்வான். யோகத்தில்        என்னை ஈடுபடுத்தி கொண்டு விட்டேன் என மக்களை மயக்குவான்        தனக்கு நோயோ, வேறு எந்த துயரங்களோ வருமாயின் இறைவா !        எனக்கா இந்த சோதனை என்பான். செலவந்தனாக இருந்த போது        இறைவனை நினையான். இதனை கண்டு மாயை [திரோதாயி]        சிரிக்கிறாள் ]         பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;        பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு;        மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்        தங்கின்ற யோகம் போய் ஞானம் பாழாய்ச்        சமாதியென்ன மிந்திரியச் சார மூடித்        தொங்குகின்ற மோட்சனத்தின் தரைபோ லாகத் சுனியமாய் ஞானமெல்லாம் தோற்றுமாறே.  உடலில் தோன்றுகிற ஆசையால் மனம் சுகங்களில் அலைப்பட்டு   வாழ்வு வீணாகிறது. இறுதியில் வாழ்க்கை சூனியமாகிறது. அதன்   பின்தான் மனிதனுக்கு ஞானமும், அறிவும் தோன்றுகிறது.   இதனைத்தான் கண்ணதாசன் கெட்ட பின்பு ஞானிஎன்றார். "பாலனாம் சிங்களவ தேவ தாசி பாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான் சீலமுடன் சட்டை முனி என்று சொல்லி சிறப்புடனே குவலயத்தில் பெருண்டாச்சு" - போகர் 7000 - சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.
                                       பொதுவாக சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால் சட்டை முனி என்று அழைக்கப்பட்டார். இவர் போகருடைய சீடர் என்று சொல்லப் படுகிறது. இவர் சீர்காழியில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது.சட்டைமுனி ஞானம் எண்சீர் விருத்தம் காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய் கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார் பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும் நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார் நம்முடைய பூசையென்ன மேருப் போலே ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே.
1
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும் சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர் வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற் கோனென்ற வாதசித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே.
2
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய் குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய் மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய் மைந்தனே இவளை நீபூசை பண்ணத் தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய் திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே.
3
பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய் பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும் கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம் காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!
4
தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ் சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும் மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ? தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள் சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே.
5
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ? பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ? வாளான விழியுடைய பெண்ணைச் சேரும் மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ? காழான உலகமத னாசை யெல்லாங் கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக் கூடுவது மேதனென்றால் மூலம்பாரே.
6 (
பாடல்கள் நிறைவுபெற்றது.) சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி ! நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

சட்டைமுனி (நாதர்) .
ரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்த பாழும் மனிதர்களின் சந்தேகத்தை தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். கயிலையிலே சிவபெருமானை காணச்செல்லும் சித்தர்களில் நானும் ஒருவன். அங்கே செல்லும் போது, குளிர் தாங்க முடியவில்லை என்பதற்காக கம்பளிச் சட்டை அணிந்தேன். அதையே நிரந்தரமாக எங்கு சென்றாலும் அணிந்து கொள்கிறேன். அதனால் தானே என்னை சட்டை முனி என்றே எல்லாரும் அழைக்கிறார்கள்! இந்த உடையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, என கதறினாரோ இல்லையோ, அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்களெல்லாம் பதறிப் போனார்கள். மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.யார் இந்த சட்டை முனி?கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர், அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார். ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும், என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும், என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து, அவர்களின் நம்பிக்கையை  பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார். கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு, நண்பன் போல இவருடன் பேசினார்.சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக்குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார். இறந்தவர்களை எழுப்பும் கலையை சித்தர்கள் சங்கேத மொழியிலேயே குறித்து வைப்பர். ஏனெனில், சித்தர்களின் குறிப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். சட்டை முனி பகிரங்கமாக எழுதியதால் ஆத்திரப்பட்ட சில சித்தர்கள் அந்தக் குறிப்புகளை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவரது மருத்துவக் குறிப்புகளும், இன்னும் சில பயனுள்ள தகவல்களும் மட்டுமே எஞ்சின. மேலும், சட்டைமுனிவர் பற்றி சிவபெருமானிடமும் புகார் சொல்லி, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.இந்நிலையில் ஸ்ரீரங்கம் வந்த சட்டைமுனி ரங்கநாதனைச் சேவிக்கச் செல்லும்முன் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விட்டது. சட்டைமுனி வெளியில் இருந்தபடியே, ரங்கநாதா! உன்னை இன்றைக்குள் தரிசிக்க அவசர அவசரமாக வந்தேனே! பயனின்றி போய் விட்டதே, எனச் சொல்லி அரற்றினார்.தன் பக்தனின் அபயக்குரலைக் கேட்ட பெருமாள் நடையைத் திறக்கச் செய்தார். சித்தர் கருவறை அருகே சென்றதும், தனது அணிகலன்களை அவருக்கு சட்டை போல் அணிவித்தார்.(இதனாலும் இவர் சட்டைமுனி என பெயர் பெற்றார் என்பதுண்டு). அப்போது, ஊர் மக்கள் அவரைத் திருடனென சந்தேகித்து அரசனிடம் கொண்டு போய்விட, மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்தது. இவர் திருவரங்கம் அல்லது சீர்காழியில் சமாதியாகி இருக்கலாம் என நம்புகின்றனர். சித்தர்களில் குறிப்பிட்ட நாளில் விரதம் இருப்பது இவருக்கு மட்டுமே. திருவோணம், புனர்பூசம், பூசம், திருவாதிரை நட்சத்திர நாட்களிலும், புதன்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் வாஸ்து தினத்தன்றும் ஸ்ரீசட்டைநாத மாமுனி தர்ப்பயாமி என்று குறைந்தது 18 முறையும், அதிகபட்சமாக 108 முறையும் சொல்லி வழிபட்டால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்
இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி அரங்கா!என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்என்ற நூலில் காணப்படுகிறது. சட்டைமுனி இயற்றிய நூல்கள்: சட்டைமுனி நிகண்டு – 1200 சட்டைமுனி வாதகாவியம் – 1000 சட்டைமுனி சரக்குவைப்பு – 500 சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500 சட்டைமுனி வாகடம் – 200 சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200 சட்டைமுனி கற்பம் – 100 சட்டைமுனி உண்மை விளக்கம் – 51 தியானச் செய்யுள் சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே! சட்டைமுனி சுவாமி பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி! 2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி! 3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி! 4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி! 5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி! 6. வருண பகவானை வணங்குபவரே போற்றி! 7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி! 8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி! 9. கவலைகளை அகற்றுபவரே போற்றி! 10. நோய்களை அழிப்பவரே போற்றி! 11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி! 12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி! 13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி! 14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 15. ராமநாமப் பிரியரே போற்றி! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி!என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். ஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால், 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும். 2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும். 3. சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும். 4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும். 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும். 6. போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். 7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும். 8. இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம். பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.

புலிப்பாணி.         
புலிப்பாணி சித்தர் போகரது தலையாய சீடராவார். இவர் பூர்வீகம் சீன தேசம். போகர் பழனியில் மூலிகை முருகனை உருவாக்கிய படலத்தில் இவரது பங்கு முக்கியமானது. குருவுக்கு தேவையான மூலிகைகளை சேகரித்தலும் மற்றைய பணிவிடைகளையும் செய்த நம்பிக்கைக்குரிய சீடர் என்று போகரது காயகல்ப பரிசோதனையில் நாம் கண்டோம் அங்ஙணம்,குருவுக்கு பணிவிடை செய்யும்போது அவர் குளிர்ந்த நீரைக் கொண்டு புலிகளை வசியம் செய்து அதன் மேல் ஏறி மலை ஏறி இறங்கியுள்ளார்.இதுவே அவர்புலிப்பாணிபெயர்க் காரணம். இவர் ஒரு அதீத சிவ பக்தர். போகரின் நிர்விகல்ப சமாதி ஏற்பாட்டின் போது,மூலிகை முருகனுக்கு அடியில் குகை போன்ற சமாதி அமைப்பை உருவாக்கியும்,போகர் சமாதி நிலையை எய்தவுடன் குருவின் ஆணைப்படி அந்த குகையை பெரிய பாறை கொண்டு மூடியவரும்,குரு போகரை இறுதியாக தரிசித்தவரும் இவரே! போகரது (LAO TZU) சீன படைப்பான டாவோ”(TAOISM) மதத்தின் முக்கிய நூல்களான டாவோ சிங் மற்றும் டெ சிங்” (TAO CHING & TE CHING) ஆகியவற்றில்  இவரது (Yu)பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் சோதிடம்,வான சாத்திரம்,கணிதம்,சித்த மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார் சீன வேதிப் பொருள்கள்,சீனக் களிமண் பாண்டங்கள்,சீன மருத்துவம் ஆகியன இவர்கள் மூலமே இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது என செய்திகள் கூறுகிறது. இவரது படைப்புகளான புலிப்பாணி ஜாலம்325,புலிப்பாணி வைத்தியம் 500 ஆகியன இன்றும் நமது சித்த மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்பதில் ஐயமில்லை! அதற்கு பிரதிஉபகாரமாய் தங்களுடைய மருந்துகளுக்கு புலிப்பாணியின் பெயர் சூட்டி அவரைப் பெருமைப் படுத்துவது வரவேற்க்கத்தக்கது! புலிப்பாணியின் பொறுப்பில் மூலிகை முருகனுக்கு அபிசேகங்களும்,ஆராதனைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. புலிப்பாணியார் மறைவுக்குப் பின்,அவரது சந்ததியினரின் குடும்பக் கோவிலாகவே பராமரிக்கப்பட்ட மலைக் கோவில், மதுரை திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டாதாகவும்,அதற்க்கு இழப்பீடாக சில நியாயமற்ற உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் சில சர்ச்சைகள் இருந்து வந்தன. புனிதரது சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அவரது சந்தததியினரால் (பழனி ஆதீனம் திருமிகு புலிப்பாணி பத்திர சுவாமிகள்)பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும்,வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளுவதாகவும் நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர்.ஆதலால் செவ்வாய் தோசத்தைப் போக்கி, நிலத் தகராறு,சொத்துத் தகராறு,திருமணச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவரே! இவரை வில்வம் மற்றும் சாமந்தி கொண்டு அர்ச்சிக்க வேண்டிய உகந்த நாள் செவ்வாய்க் கிழமை! ஓம் புலிப்பாணி சித்தரே போற்றி! நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்! ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று. ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான், எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது."ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே  அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு  தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்  சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்". - போகர் - போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார். போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது. போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.
 போகரும் புலிப்பாணி பரம்பரையும்! போகர் சித்தர் ஆகாய மார்கமாக பயணம் செய்யும் போது பழனியை கண்டு, இந்த இடம் தான் நம்  பூஜைக்கு ஏற்ற இடம் என தீர்மானித்து தரை இறங்கினார். அங்கே அவர் கண்ட காட்சி அவரது  எண்ணத்தை உறுதி செய்தது. அவர் கண்டது, ஒரு வெள்ளை காகம், சிவப்பு நிற கொக்கு,  வெள்ளை, சிவப்பு நிறத்தில் இரண்டு குன்றுகள். வெள்ளை குன்று சிவகிரி என்றும்,  சிவப்பு குன்று சக்திகிரி என்றும் அவர் உணர்ந்தார். அவர் பழனியை வந்தடைந்த காலம் என்பது த்வாபர யுகத்தின் முடிவும், கலி யுகத்தின்  தொடக்கமும். அங்கு வந்து சேர்ந்த உடனேயே ஒரு குன்றின் மேல் தன் கமண்டலத்தையும்,  கைத்தடியையும் வைத்து, இறைவனாக பாவித்து தினமும் பூசை செய்து வரலானார். பின்னர்  பலரிடமிருந்தும் வந்த உத்தரவால், ஒரு நவபாஷாண சிலை செய்து அதற்கு தண்டாயுத (முன்  சொன்ன கைத்தடியின் பெயர்) பாணி (கமண்டலத்துக்குள் இருக்கும் நீர்) என்று பெயர்  வைத்து நித்ய பூஜை செய்து வரலானார். அந்த நவபாஷாண சிலைக்காக ஒன்பது வித விஷங்களை  உருவாக்கினார். அவை , வீரம், பூரம், ரசம், கந்தகம், மோமசலை, கௌரி, PHOSPHORUS,  துருசு, வெள்ளை பாஷாணம் என்பவை. கலியுகம் பிறந்த பின் 205 ஆண்டுகள் அந்த சிலைக்கு போகர் பூசை செய்து வந்தார்.  அதற்கு பின் சிவலிங்க தேவ உடையார் உடையார் என்பவர் போகரிடம் சிஷ்யராக வந்து  சேர்ந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் மைசூரை சேர்ந்தவர். உடையார் அவர்களை நித்ய  பூஜைக்கு நன்றாக தயார் படுத்திய பின், பூஜை செய்யும் பணியை அவரிடம்  சேர்பித்துவிட்டு, போகர் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தார். போகர் சமாதி ஆனா  பின்னரும், உடையார் பலமுறை போகரை சந்தித்து பூசை சம்பந்தமான விஷயங்களில்  கலந்தாலோசித்து வரலானார். நைனாதி முதலியார் என்பவர் சிறிது காலத்திற்குப்பின் உடையாரிடம் சிஷ்யராக வந்து  சேர்ந்தார். முதலியாரின் பக்தியில் மனம் மகிழ்ந்த உடையார், அவரை அழைத்து கொண்டு  போகரிடம் சென்று "முதலியார் நல்ல திறைமை உடையவர். அவருக்கே இனி பூஜை செய்யும் பணியை  கொடுத்துவிடலாம் என்று" பரிந்துரை செய்தார். போகர் சற்று நேர அமைதிக்கு பின் "முதலில், இவர் உலகை ஒரு முறை சுற்றி வரட்டும்.  அதற்கு பின் பூஜை செய்யும் உரிமையை கொடுக்கும் தீர்மானத்தை எடுக்கலாம்" என்றார். இதை கேட்ட உடையார் அதிர்ந்து போனார். போகரிடமிருந்து நித்ய பூஜை முறைகளை ஏற்று வாங்கி நிறைய வருடங்கள் ஓடிவிட்டது.  போதும். நாமும் போகரிடம் உத்தரவு கேட்டு சமாதி ஆகிவிடலாம் என்று ஆசை பட்ட  உடையாருக்கு, "அவரை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், அதற்கு முன் அவர் இந்த உலகை  ஒருமுறை சுற்றி வந்து என் முன் வெற்றிகரமாக நிற்க வேண்டும். அப்படி ஆனால் அவருக்கு  பூஜை செய்யும் உரிமையை கொடுக்கிறேன்" என்று போகர் சொன்னபோது உண்மையிலேயே உடையார்  ஆடி போய் விட்டார். "இவரால் முடியுமா? அப்படியும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து  இவர் முடிப்பதற்குள் எத்தனை வருடங்கள் ஆகிவிடும். அதுவரை காத்திருக்க வேண்டுமே",  என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடியது. முதலியார் பேச தொடங்கினார். இந்த உலகை கால் நடையாக சென்று சுற்றி வர என்னால் முடியாது. வேண்டுமானால் ஒரு

புலியின் மீதமர்ந்து முடிக்க முயற்சி செய்கிறேன் என்றார். போகரும் அதற்கு சம்மதிக்கவே, முதலியாரும் காட்டுக்குள் சென்று ஒரு புலியை  வசப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து, விடை பெற்றார். காலங்கள் ஓடியது. சென்றவரை  காணவில்லை. உடையாருக்கு மனதில் கவலை ஏறியது. எதிர்பார்க்காமல் ஒரு நாள், உடையார்  ஒரு வேளை பூசை முடித்து தீபாராதனை காண்பிக்கவே, அங்கு புலிமேல் அமர்ந்தபடி,  முதலியார் வந்து சேர்ந்தார். இதை கண்ட உடையாரின் மனம் சொல்லொண்ணா இன்பத்தில்  ஆழ்ந்தது. பூசை முடித்த கையுடன், அவரை அழைத்து சென்று போகர் முன் நிறுத்தினார். அவரை கண்ட  போகர், "சரி, வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து விட்டாய். இருப்பினும், ஒரு சில  நாட்கள் வரை உடையாரே பூசை செய்யட்டும். அதுவரை, பூசையில் உடையாருக்கு உதவி செய்து  இரு" என்று கட்டளை இட்டார். மேலும் "புலியில் சென்று இந்த உலகை சுற்றி வந்ததால் நீ  இன்று முதல் "புலிப்பாணி" என்று அழைக்க படுவாய்" என்று கட்டளை இட்டார். பூஜை நன்றாக நடப்பதை கண்ட போகர், புலிப்பாணியின் பெருமையை உடையாருக்கு உணர்த்த பல  வித சோதனைகள் நடத்தினார். அதில் ஒன்று "ஷண்முக நதி வரை சென்று அபிஷேகத்துக்கு நீர்  கொண்டு வா" என்று உத்தரவிட்டார். நதி கரை வரை சென்ற புலிப்பாணி, கையில் ஒரு  பாத்திரமும் இல்லாததால், தன் தபோபலத்தால், அந்த நதியின் நீரை எடுத்து ஒரு  பாத்திரமாக மாற்றி, அதனுள் நீரை ஊற்றி, அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார்.  அதிலிருந்து அவர் "புலிப்பாணி பாத்திர சுவாமிகள்" என்று அனைவராலும் அழைக்க பட்டார்.  தினமும் ஆறு முறை ஷண்முக நதிக்கு சென்று நீரை பாத்திரமாக்கி, அதில் நீரை ஊற்றி, மலை  மேல் இருக்கும் முருகனுக்கு அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார். எல்லாம் நல்ல படியாக நடப்பதை கண்ட போகர், உடையாருக்கு சமாதியாகும் பாக்கியத்தை  கொடுத்தார். பின்னர் புலிப்பாணியை அழைத்து, "பூஜை முறைகள் தொடர்ந்தது தலை முறை தலை  முறையாக நடக்கவேண்டும். அதற்கு நீ தான் வழி அமைக்க வேண்டும்" என்றார். 205 வருடங்கள் புலிப்பாணி பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தாயிற்று. போகரின் இந்த  உத்தரவுக்கு, புலிப்பாணி கீழ் வருமாறு பதிலளித்தார். இன்றுவரை 205 வருடங்கள் ஆகிவிட்டது. அடியேனுக்கு, குடும்ப வாழ்க்கையில் சற்றும்

விருப்பம் இல்லை என்றார். தலை முறையாக பூஜை நடக்க வேண்டும் என்றால், ஒரு ஆண் மகவு வேண்டும். குடும்ப

வாழ்க்கையில் இருந்து கொண்டு சன்யாச வாழ்க்கையும் வாழலாம். ஆண் மகன் பிறந்த 16 வது

வருடம், பூஜை விஷயங்களை அவனிடம் சேர்பித்துவிட்டு, நீ சமாதி ஆகலாம் என்றார். குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு புலிப்பாணியும் குடும்ப வாழ்க்கை தொடங்கினார். ஒரு வருடத்தில் அவருக்கு ஆண் மகன் உருவானான். அவனுக்கு "காரண புலிப்பாணி" என்று  பெயர் இட்டு வளர்த்து வரலானார்! காரண புலிப்பாணி தனது பதினாறாவது வயதில் பூஜை செய்யும் உரிமையை ஏற்றுகொள்ள,  புலிப்பாணி பரம்பரை பூசை செய்யும் உரிமை உருவாயிற்று. புலிப்பாணியும் சமாதியில்  அமர்ந்தார். காரண புலிப்பாணி 1100 ஆண்டுகள் பூசை செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன்  பிறக்க,, அந்த மகனுக்கு குமார சுவாமி புலிப்பாணி என்று பெயரிட்டனர். குமார சுவாமி  புலிப்பாணி, காரண புலிப்பாணி இடமிருந்து பூசை செய்யும் உரிமையை வாங்கிக்கொள்ள,  புலிப்பாணி தலைமுறை வளர்ந்தது. இவர் 1000 ஆண்டுகள் இருந்து பூசை செய்து வர,  அவருக்கு அடுத்த வாரிசாக, வேல் ஈஸ்வர புலிப்பாணி என்பவர் வந்தார்.  பின்னர் இந்த புலிப்பாணி தலைமுறை கீழ்கண்டவாறு வளர்ந்தது. வேல் ஈச்வர புலிப்பாணி , ஆறுமுக புலிப்பாணி , ஹரிக்ருஷ்ண புலிப்பாணி , பழனியப்ப  புலிப்பாணி. பழனியப்ப புலிப்பாணி தலை முறை வந்ததும், இரண்டு மகன்கள் உருவாயினர். அவர்களை,  பாலகுருநாதர் புலிப்பாணி, போகநாதர் புலிப்பாணி என்று அழைத்து வந்தனர். விதிப்படி,  பூஜை முறைகள் மூத்த மகனுக்குத்தான். பால குருநாதர் புலிப்பாணி திருமணம் செய்து  கொள்ளததினாலும், 22 வயதில் மரணமடைந்ததினாலும், பூஜை செய்யும் உரிமை இரண்டாவது மகன்,  போகநாதர் புலிப்பாணி இடம் சேர்ந்தது. போகநாதர் புலிப்பாணி தன் மகன் பழனியப்ப  புலிப்பாணி இடம் பூஜை விஷயங்களை சேர்க்க, அது அடுத்த தலைமுறையில் சிவானந்த  புலிப்பாணி இடம் சேர்ந்தது. இவர் தான் இன்று அந்த ஆஸ்ரமத்தில் தலைவராக இருந்து  கொண்டு பூஜை முறைகளை நடத்தி வருகிறார். பழனியப்ப புலிப்பாணி ஒரு நாள் ஆஸ்ரமத்தின் பின் பக்கம் கட்டிட வேலைக்காக குழித்த  போது அங்கே ஒரு குகையில் ஒரு சித்தர் தவம் செய்வதை கண்டார். சித்தரின்  தலையிலிருந்து நீண்டு வளர்ந்த முடியானது மரத்தின் வேர் போல மண்ணுக்குள் மிகுந்த  ஆழத்தில் ஊடுருவி செல்வதை கண்டார். அந்த சித்தர் பத்மாசனத்தில், கைகளை மார்புக்கு  குறுகலாக வைத்த படி இருக்க, அவர் கை, கால் விரல்களில் நகம் இதுவரை அவர் கண்டிராத  அளவுக்கு நீளமாக அவர் தோள்களை சுற்றி வளர்ந்திருந்தது. அவரது தவத்தை கலைத்துவிடுகிற  அளவுக்கு நாம் ஏதேனும் செய்து விட்டோமோ என்று நினைத்த அவர், அப்படியே தொடங்கிய  வேலையை விட்டுவிட்டு, உடனேயே அந்த இடத்தில் சமாதி கட்டினார். அது தான் இன்றும் நாம்  சென்றால் பார்க்கும் மிக பெரிய லிங்கம் உள்ள, சமாதி. பழனி அந்த காலத்தில் மதுரை நாயக்க மன்னரின் ஆட்ச்சியில் இருந்ததால், மன்னரே,  ஆஸ்ரமம், பழனி முருகருக்கு பூசை செய்யும் முறை இவைகளின் பேரில் உள்ள உரிமையை  புலிப்பாணி தலைமுறைக்கு மட்டும் தான் என்று பிரகடனம் செய்து, செப்பு தகட்டில்  பதித்து கொடுத்தார். மேலும், பூசை முறைகளுக்கு யார் எந்த விதத்தில் உதவினாலும் அவர்கள் காசியில்/கங்கை  கரையில் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்த பலனை அடைவர் என்றும், இதற்கு (பூஜைக்கு)  ஏதேனும் விதத்தில் தடங்கல் செய்பவர்கள், கங்கை கரையில் "காராம் பசுவை" கொன்ற  குற்றத்திற்கு உள்ளாவார்கள் என்று பிரகடனம் செய்தார். பழனி என்பது யோகிகளால், நவக்ரகங்களில், செவ்வாய்க்கு பரிஹார ஸ்தலமாக  கருதப்படுகிறது. தங்கள் தவத்தை/அதன் நிலையை உயர்த்திக்கொள்ள பழனியை யோகிகள் சிறந்த  இடமாக கருதுகின்றனர்.

1 comment: