Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-3

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :
ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.


இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.


                           மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
1.    சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
2.    திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
3.    ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
4.    திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

 சித்தர்கள் பட்டியல்

                        உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த சித்தர்களின் பெயர்கள்,குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன: ஆதாரம்: "நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர் நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர் கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி) சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர் செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."

சித்தர் மரபு அடங்கிய தலம்

நந்தி வேதியர் காசி
அகத்தியர் வேளாளர் அனந்த சயனம்
திருமூலர்  வேளாளர் தில்லை(சிதம்பரம்)
புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி
புலத்தியர் சிங்களவர் யாழ்ப்பாணம்
பூனைக் கண்ணர் எகிப்தியர் எகிப்து
இடைக்காட்டு சித்தர் இடையர் திருவண்ணாமலை
போகர் சீனக் குயவர் பழனி
புலிக் கையீசர்
கருவூரார் கன்னரர் கருவூர்
கொங்கண சித்தர் கன்னட இடையர் திருப்பதி
காளங்கி நாதர் சீனத்து ஆசாரியார் காஞ்சீபுரம்
அழுகண்ணச் சித்தர் சீனத்து ஆசாரியார் திருக்குறுங்குடி
அகப்பேய் சித்தர் வேளாளர் அழகர் மலை
பாம்பாட்டி சித்தர் கோசாயி விருத்தாசலம்
தேரையர் வேதியர் பொதிகை மலை
குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம்
சட்டை முனி் சிங்களவர் திருவரங்கம்

பின் வருபவர்களும் சித்தர்களே என்பர் சிலர்;

சித்தர்கள் மரபு அடங்கிய தலம்

இராம தேவர்
இராமலிங்க சுவாமிகள் கருணீகர் குலம் மேட்டுக்குப்பம்
கமல முனி உவச்சர் திருவாரூர்
கடுவெளிச் சித்தர்
கணபதி தாசர்
காக புசுண்டர் சமணர் அன்னவாசல்
காளைச் சித்தர்
கோரக்கர் மராட்டியர் / கள்ளர் பேரூர்(கோவை) கைலயக் கம்பளிச் சட்டை முனி
சிவவாக்கியர் சங்கர குலம்
சூரியானந்தர்
சுந்தரானந்தர் வேளாளர் மதுரை
தன்வந்திரி அந்தணர் வைத்தீசுவரன் கோயில்
பதஞ்சலியார் கள்ளர் இராமேசுவரம்
பத்திரகிரியார்
பட்டினத்தார்
பீரு முகமது
பூரணானந்தர்
மச்ச முனி செம்படவர் திருப்பரங்குன்றம்
வாம தேவர் ஓதுவார் அழகர் மலை
வான்மீகர் வேடர் எட்டிக்குடி
மதுரை வாலைச் சாமி
உரோமரிஷி மீனவர்

இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது. ஆயினும் இவர்கள் பாடிய பாடல்கள் காணக் கிடைப்பது இல்லை.
அபிதான சிந்தாமணியில் சித்தர்கள் பற்றிய குறிப்பில் சித்தர் ஒன்பதின்மர் என்று
1.சத்தியநாதர்
2.சதோகநாதர்
3.ஆதிநாதர்
4.அனாதிநாதர்
5.வெகுளிநாதர்
6.மாதங்க நாதர்
7.மச்சேந்திரநாதர்
8.கடேந்திரநாதர்
9.கோரக்க நாதர் ஆகிய ஒன்பதுபேரையும்,தொடர்ந்து சித்தர் பதிணென்மர் என்று
அகத்தியர்,
போகர்,
கோரக்கர்,
கைலாச நாதர்,
சட்டைமுனி,
திருமூலர்,
நந்தி,
கூன் கண்ணர்,
கொங்கணர்,
மச்சமுனி,
வாசமுனி,
கூர்மமுனி,
கமல முனி,
இடைக்காடர்,
புண்ணக்கீசர்,
சுந்தரானந்தர்,
உரோமரிஷி,
பிரமமுனி இவர்களின்றி
தன்வந்திரி,
புலஸ்தியர்,
புசுண்டர்,
கருவூரார்,
ராமதேவர்,
தேரையர்,
கபிலர் முதலியவரும் பட்டியலிடப்படுகின்றனர்.சித்தரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களைப் பற்றிய உண்மைகளைப் போலவே அவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒவ்வொரு நூலிலும் முரண்களைக் காண முடிகிறது. எனினும் சித்தர் ஒன்பதின்மர் எழுதியதாக எந்த ஒரு பாடலும் நமக்குக் கிடைக்கவில்லை.
 பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலில் 44 சித்தர் வகை பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
அவற்றில் சிவவாக்கியரின் பாடல் முதன்மைப்படுத்தப்பட்டு
பட்டினத்தார்,
பத்திரகிரியார்,
திருவள்ளுவர்,
சட்டைமுனி,
பாம் பாட்டி,
இடைக்காடர்,
அகப்பேய்ச்சித்தர்,
குதம்பைச் சித்தர்,
கடுவெளிச்சித்தர் என மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன..

                      சித்தர்கள் தம் வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிவாழ்ந்த சித்தர்கள், பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையை பெறவும், மூடநம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள்பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள் முன்வைத்து செயல்பட்டுள்ளனர்.மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம். அதுபோன்றே மதப்பிரச்சாரங்கள் பின்னாளில் நிகழக்கூடும் என்பதனையும் அவர்கள் உணர்ந்தே செயல்பட்டவர்கள் என்பதனை கொங்கணச் சித்தர் எழுதிய இப்பாடலின் மூலமாக அறியலாம்:
எல்லாமறிந்தவரென்றுசொல்லியிந்தப்
பூமியிலேமுழு ஞானியென்றே
உல்லாசமாகவே வயிறுபிழைக்கவே
ஓடித்திரிகிறார்வாலைப்பெண்ணே
-இதுதான்சித்தர்கள்நமக்குவிட்டுச்சென்றசெய்தி.
சித்தரின் பெயர் பிறந்த மாதம் நட்சத்திரம்  வாழ்நாள  சமாதியடைந்த இடம்  
1.பதஞ்சலி
   பங்குனி   மூலம்  5 யுகம் 7நாட்கள்  இராமேசுவரம்.  
2.அகத்தியர்
   மார்கழி   ஆயில்யம்  4 யுகம் 48 நாட்கள்  திருவனந்தபுரம்.  
3.கமலமுனி
   வைகாசி   பூசம்  4000 வருடம் 48 நாட்கள திருவாரூர்.  
4.திருமூலர்
  புரட்டாதி   அவிட்டம்  3000 வருடம் 13 நாட்கள்  சிதம்பரம்.  
5.குதம்பையார்
   ஆடி   விசாகம்  1800 வருடம் 16 நாட்கள்  மாயவரம்.  
6.கோரக்கர்
   கார்த்திகை ஆயில்யம்  880 வருடம் 11 நாட்கள்  பேரூர்.  
7.தன்வந்திரி
   ஐப்பசி   புனர்பூசம்  800 வருடம் 32 நாட்கள்  வைத்தீச்வரன் கோவில்.  
8.சுந்தரானந்தர்
   ஆவணி   ரேவதி  800 வருடம் 28 நாட்கள்  மதுரை.  
9.கொங்கணர்
   சித்திரை   உத்திராடம்  800 வருடம் 16 நாட்கள்  திருப்பதி.  
10.சட்டமுனி
   ஆவணி  மிருகசீரிடம்  800 வருடம் 14 நாட்கள்  திருவரங்கம்.
11.வான்மீகர்
   புரட்டாதி   அனுசம்  700 வருடம் 32 நாட்கள்  எட்டுக்குடி.  
12.ராமதேவர்
   மாசி   பூரம்  700 வருடம் 06 நாட்கள்  அழகர்மலை.  
13.இடைக்காடர்
   புரட்டாதி   திருவாதிரை  600 வருடம் 18 நாட்கள்  திருவண்ணாமலை.  
14.மச்சமுனி
   ஆடி   ரோகிணி  300 வருடம் 62 நாட்கள்  திருப்பரங்குன்றம்.  
15.கருவூரார்
   சித்திரை   அஸ்தம்  300 வருடம் 42 நாட்கள்  கருவூர், தஞ்சை.  
16.போகர்
   வைகாசி   பரணி  300 வருடம் 18 நாட்கள்  பழனி. 
17.பாம்பாட்டி
   கார்த்திகை   மிருகசீரிடம்  123 வருடம் 14 நாட்கள்  சங்கரன்கோவில்.
18.சிவவாக்கியர் காலம்
 தெரியவில்லை கும்பகோணம்.




No comments:

Post a Comment