Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-12

காகபுசுண்டர் .

                                      பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்: காக புசுண்ட சித்தர் ஒரு காக்கை வடிவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தார் என்பர். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திரக் குலத்தில் பிறந்தார். இவர் அறிவிற்சிறந்தவர். பெரும் தபசி. இவர் பிரளய காலங்களில் அவிட்ட நட்சத்திர பதவியில் வாழ்வார். ஆகையால் இவரை காகபுசுண்டர் என்பர். ஒருசமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். சிவபெருமான் தனக்கு எழுந்த சந்தேகத்தை அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா?” என்றார். எல்லோரும் மௌனமாக இருந்தனர். மார்க்கண்டேயர் இதற்கு திருமாலே பதில் சொல்வார்என்றார். திருமாலிடம் சிவன் கேட்டார். அவரும் பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக எனது சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு வந்த புசுண்டர் எப்படியோ என் சக்கரத்தினை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைத் தாண்டிச் சென்றார். அதனால் அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அனுப்பி அவரை அழைத்து வருவதுதான் சரி, அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலும்என்றார். சிவனும் வசிட்டரை அனுப்பி புசுண்டரை அழைத்து வரும்படி சொன்னார். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தினைக் கூறினார். புசுண்டரும் தான் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார். தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லாழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களைக் கண்டதாகவும் கூறினார். காக புசுண்டர் துணைகாவியத்தில் இந்நிகழ்ச்சி விளக்கமாகக் கூறப்படுகிறது. இச்சையால் வாழ்வு கொச்சைப்படும்என்பது காகபுசுண்டர் என்னும் சித்தரின் கருத்தாகும். பரம்பொருளினை அடைவதே அனைவரது முழுமுதற் கொள்கை என்பதை வலியுறுத்துகிறார். யோகநிஷ்டை என்பதே இவரது ஞானவேட்கையாகும் என்று காகபுசுண்டரின் பாடல்கள் தெரிவிக்கின்றன. மூச்சை அடக்கி மூலப்பொருளைக் காணவும், பேச்சை ஒடுக்கி பிரம்மத்தை அடையவும் கற்றுத்தருவதே காகபுசுண்டரின் குறிக்கோளாகும். காகபுசுண்டரின் பிறப்பு பற்றி போகரின் சப்தகாண்டம் கூறுகிற கருத்தினைப் பற்றிப் பின்வருமாறு அறிவோம்: காகபுசுண்டர் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழித்ததையும் எத்தனையோ பிரம்மாக்கள் எத்தனையோ விஷ்ணுக்கள், எத்தனையோ சிவன்கள், அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்குப் பின்பும், உயிர்கள் புதிது புதிதாக உண்டாவதையும் பார்த்ததாகக் கூறியுள்ளார்கள். காகபுசுண்டர் பல யுகங்கள் உயிரோடு இருந்ததாகக் கூறுகின்றார்கள்.ஒரு சமயம் சக்தி கணங்கள் மது அருந்தி நடனமாடிக் களித்திருந்தனர். அப்போது சிந்திய மது கலந்த தண்ணீரை அன்னங்கள் அருந்திப் போதைக் களிப்பால் நடனமாடின. இதை சிவனும், பார்வதியும் கண்டு களித்தனர். அதனால் உண்டான சிவகணங்களை காகத்தின் வடிவில் அன்னத்தோடு சேர்ந்தார். அப்போதே அன்னம் கருவுற்று முட்டைகளை இட்டது. 20 முட்டைகள் அன்னக்குஞ்சுகளாகப் பொரிந்தது. 21வது முட்டையில் காகம் பொரிந்து வெளிவந்ததாம். அந்த காகமே காகபுசுண்டர். அந்த 20 அன்னங்களும் அநேக நாள் இருந்து முக்தி அடைந்தன. சிவகலையின் தாக்கத்தால் வலுவான காகபுசுண்டர் தன் தவவலிமையால் என்றும் உயிரோடு இருக்கும் ஆற்றலைப் பெற்றார். காகபுசுண்டர் பலநூறு பிறவிகள் எடுத்தவர். இருந்தாலும் முந்தைய பிறவிகளின் நினைவுகளை மறக்காதவர். அவர் காக வடிவிலான சித்தராய் காகபுசுண்டராய் உருவெடுத்ததன் காரணத்தை அவர் கூறுவதாலேயே நாம் அறிவோம். இந்த காகவடிவத்தில் தான் நான் இராமனிடம் பக்தி கொண்டேன். அவனுடைய அருள் இந்த உடலில் தான் எனக்குக் கிட்டியது. அதனால் தான் இந்த உடல்மீது எனக்கு வெறுப்பு இல்லை. நான் விரும்பினால் எனக்கு மரணம் வரும். இருந்தாலும் நான் காக வடிவத்தை விட்டுவிட மாட்டேன்.காகபுசுண்டருக்கு முற்பிறவி ஞாபகம் வந்து அலைமோதிய எத்தனை பிறவி எடுத்த போதிலும் அவர் அனுபவித்த பிராமணன் பிறவிதான் அவருக்கு மிகவும் அற்புதமான பிறவியாகத் தோன்றியது. அங்ஙனம், பிராமணனின் மகனாக இருந்தபோது குருகுலவாசமாக லோமச முனிவரின் ஆசிரமம் சென்றார். காகபுசுண்டருக்கு ஸ்ரீராமபிரானின் திருவடித்தாமரைகளை ரசிப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். ஆனால், லோமச முனிவரின் அறிவுரையை அலட்சியம் செய்தார். இதனை அறிந்த முனிவர் காகபுசுண்டரிடம், “நான் கூறும் உபதேசத்தை ஏற்க மறுக்கிறாய். இது உனக்கு நல்லதல்ல. எதற்கெடுத்தாலும் பய உணர்வு உன்னிடம் தலைகாட்டுகிறது. எனவே, உன்னைக் காகமாக உருவெடுக்க சபிக்கிறேன்,” என்று சாபமிட்டார். பின்னர், சிறிது காலத்திற்குப் பின்பு காகபுசுண்டரின் குறிக்கோளை அறிந்த லோமச முனிவர் அவருக்கு தேவரகஸ்யமான இராமசரிதத்தை எடுத்து வைத்தார். அவருக்கு சகலசித்திகளும் கிடைக்க, அவர் விரும்புகிறபோது மரணம் சம்பவிக்கும் என்றும் ஆசீர்வதித்தார். மேலும், மாயை, யோகம், காலம், கர்வம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் காகபுசுண்டரை அணுகாது என்று ஆசிர்வதித்தார். காகபுசுண்டர் தாம் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ பிரம்மாக்கள், எத்தனையோ விஷ்ணுக்கள் சிவன்கள் அழிந்து போனதைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் சிருஷ்டிக்கப்பட்டதைப் பார்த்ததாகவும் அவர் கூறினார். இத்தகைய நிகழ்வுகள் பற்றி காகபுசுண்டர் துணைக்காவியத்தில் விளக்கமாகக் கூறப்படுகிறது. (வாசியோகம், நெற்றிக்கண் திறத்தல், தனிப்பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.) காகபுசுண்டர் அருளிய நூல்கள்: காகபுசுண்டர் வைத்தியப்பெருங்குறள் காகபுசுண்டர் நாடிசோதிடம் காகபுசுண்டர் ஞானம் 80 காகபுசுண்டர் உபரிடதம் 31 காகபுசுண்டர் காவியம் 33 காகபுசுண்டர் குறள் 16 காகபுசுண்டர் பெரு நூல் 1000 சித்தர்களின் ஞானமும், ஆழமும், சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாதவை. வசிட்ட முனிவருக்கே உபதேசம் செய்யக்கூடிய அளவு தகுதி பெற்றவர் காகபுசுண்டர். போலி சித்தர்களையும், சாதுக்களையும் மிகக்கடுமையாக விமர்சிக்கிறார். காகபுசுண்டர் உள்ளொளி காணும்வரை யோக சாதனைகளை விடாமல் செய்ய வேண்டும் என்கிறார். இவர் திருச்சி வரையூரில் வாழ்ந்து அங்கேயே சமாதி அடைந்ததாக ஆய்வு நூல்கள் கூறுகின்றன. காக புசுண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. அவைகளில் கிடைத்தவை: 1. புசுண்டர் நாடி, 2. காகபுசுண்டர் ஞானம் – 80 3. காக புசுண்டர் உபநிடதம் – 31 4. காக புசுண்டர் காவியம் – 33 5. காக புசுண்டர் குறள் – 16 இவை இவருடைய வேதாந்தக் கருத்துக்களைக் கூறுகின்றன. காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புசுண்டர் யோகஞானம், சமாதிமுறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூல்களில் கூறப்பட்டுள்ளன.இல்லறமாயினும், துறவறமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகாவிடில் செய்யும் பிற செயல்கள் வீண் பகட்டாகக் கருதப்படும்என்கிறார். காக புசுண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி கொண்டதாகவும் சித்தர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காகபுசுண்ட முனி தியானச் செய்யுள் காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய மகா ஞானியே! யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும் காக்கை ஸ்வாமியே! மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய் காக புஜண்ட சுவாமியே! காக புஜண்ட சித்தர் பூஜை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ஸ்ரீ காக புசுண்ட சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி நீலோத்பலம், நீல சங்கு, தவனம், மரு கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள் 1. மகா ருத்ரரே போற்றி! 2. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி! 3. ஸ்ரீம், ஹ்ரீம், லம், நமஹ, ஸ்வம், பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 4. அசுரர்களை அழிப்பவரே போற்றி! 5. தேவர்களைக் காப்பவரே போற்றி! 6. ஸ்ரீ ராமரை பூசிப்பவரே போற்றி! 7. அன்னப்பிரியரே போற்றி! 8. மானஸா தேவியை வணங்குபவரே போற்றி! 9. சிவசக்தி ஐக்கியத்தைத் தரிசிப்பவரே போற்றி! 10. மகானுகளுக்கெல்லாம் மகானே போற்றி! 11. மனிதர்களை வணங்கும் தெய்வமே போற்றி! 12. நோய்களுக்கு மருந்தே போற்றி! 13. கோடி லிங்கங்களை பூஜிப்பவரே போற்றி! 14. பாவத்தைப் போக்குபவரே போற்றி! 15. நாரதகானப் பிரியரே போற்றி! 16. ஸ்ரீ ராமர் பாதத்தை தரிசனம் செய்த ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், லம் நமஹ, ஸ்வம் ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி!என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக வறுத்த கடலை, தண்ணீர் ஆகியவற்றை வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வணங்க வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும். காகபுசுண்டர் பூசையின் காரிய சித்தி பலன்கள் இவர் நவக்கிரகங்களில் குரு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்.. 1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். 2. பணப்பிரச்சினை, புத்திர பாக்கிய கோளாறு, அரசாங்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவையும் அகலும். 3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை ஆகியவை அகன்று லஷ்மி கடாக்ஷம் பெருகும். 4. வயிறு, குடல் சம்பத்தப்பட்ட கோளாறுகாள் நீங்கும். 5. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். 6. வறுமை அகன்று வாழ்க்கை வளம்பெற இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் விஷேசப்பலன்கள் கிடைக்கும். இவரை வழிபட சிறந்த நாள் வியாழன். இப்போது புசுண்டர் எனப்படும் காக புசுண்டர் கூறிய மூன்று காயகல்ப முறைகளை இவர் ரோம ரிஷிக்கு குரு ஆவார் .இவர் பிரளயம் தோறும் அவிட்ட நாள் என்ற நக்ஷத்ர பதவி அடைந்து ,மீண்டும் உலகம் தோன்றும் போது இங்கு சித்தர் குழாமுடன் வந்து வாழ்பவர் .அவிட்ட நாளில் காக்கை உருவில் இருப்பதால்  காக புசுண்டர் எனப்படுவர் . இவர் செய்த நூல்கள் வைத்திய வாத யோகா ஞானம் ஞாசுத்திரம் ஞானக்குறள் இன்னும் பல இவரின் நாடி ஜோதிடம்  ஏடுகள் ஜீவநாடி எனப்படும் , இதன் மூலம் பல சரித்திர உண்மைகள் ,வைத்திய முறைகள் இதுவரை  வெளிப்பட்டுள்ளது . இது தேவையானவர்கள்  கேட்டால் இந்த நாடி  இருக்கும் இடம் , மேலும் சில விபரங்கள் கூறுகிறேன் . ஆனால் இதை வைத்து பல சரித்திர சான்றுகள் கிடைத்தது மட்டும் உண்மை நானே பார்த்திருக்கிறேன் .*   மகாலிங்கம் சன்னதிக்கு வட திசையில் ஒரு நாழிகை வழி தூரத்திற்கு அப்பால் முண்டக வனம் இருக்கிறது ,அவ வனத்திற்கு வட மேற்கு மூலையில் முண்டக விர்ஷம் என்ற ஒரு மரம் இருக்கிறது . அது ஆல மரம் போலவும் இலை சிறிதாகவும் காய்கள் கல்லத்தி காய போலிருக்கும் .மரத்தை தட்டினால் பால் வரும் ,அப்ப பாலை அரைக்கால் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகும் .அச்சமயத்தில் ஒருவர் கூட இருந்து ஆவின் பால் காய்ச்சி தேன் விட்டு அடிக்கடி ஒரு கரண்டி கொடுத்துவர முர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் தேகத்தில் சட்டை கழலும் ,அப்போது தேகம் தங்க நிறமாய் மாறும் ,மலஜலம் பேதிக்கும் ,காயசித்தியாகும் .* *இன்னொரு முறையும் உண்டு .அதாவது முண்டக விர்ஷம் பக்கத்தில் வட்ட பாறை ஒன்று உண்டு .அதற்க்கு மேற்கே கண் தண்ணீர் கசிவும் ,நெரி கற்களும் நிறைந்த இடத்தில் அழு கண்ணி என்ற ஒரு முலிகை உண்டு . அதன் இல்லை பலா சுளை போல் இருக்கும் .எந்நேரமும் நீர் வடிந்து கொண்டிருக்கும் .பூ மஞ்சள் நிறமாகவும் ,காய்கள் செந்த்தட்டி காய்கள் போலவும் இருக்கும் . அதை பூர்வ  பக்ஷம் பூச நக்ஷத்திரதன்று  சாபம் நீக்கி சமூலதையும் பிடிங்கிவந்து சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து  ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நரை திரை மாறும் .* *இனொரு முறையும் உண்டு அதாவது அழு கண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு மேல்ப்புரமாக தொழுக கண்ணி என்னும் ஒரு மூலிகை உண்டு . அதன் இலை அலறியிலை போலிருக்கும் .பூ வெண்மையாகவும் , தூர் கருமையாய் இருக்கும் ,அது கதிரவனை நோக்கியே நிற்கும் . இத் தொழுக கண்ணி இலையில் கொஞ்சமும் ,அழு கண்ணி இலையில் கொஞ்சமும் சமஎடை சேர்த்து சூரணித்து ,உலக்கை சப்ப்தம் வராத இடத்தில் திரிகடி பிரமாணம் ஆவின் பாலில் போட்டு அருந்தினால் தேகம் சித்தியாகும் . என்று அருளிச்செய்தார் தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று அலைந்து திரிகின்றனரே என்பதை, “தானென்ற பிரமத்தை யடுத்திடாமல் தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24) வரிகளில் சுட்டிக்காட்டி, “முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சக்தியடா மனந்தானே யோக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா! புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லந்தான் பணியு முன்னே; எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானேஎன்று வாசியோக மார்க்கத்தை இறைவனை அடையும் மார்க்கமாக அறிமுகப்படுத்துகின்றார். அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும் அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும் விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக் குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26) என்று வாசியோகத்தின் மூலம் குண்டலி யோகம் செய்து இறைவனைக் காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும், “தாமென்ற உலகத்தில் மனித ரோடே சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே காமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே” “விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலையாகும் விரும்பிப்பாரு மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு மைந்தனே சாகாக்கா லதுவே யாகும் அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக் கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28) இது மனம் காமவயப்படாமல் வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும். இவர் கூறும் இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை, “நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்; வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானேஎன்று சுழுமுனைக்கு விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில் மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை, “இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம் என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44) என்று கூறுகின்றார். இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது. காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது.

பாம்பாட்டிசித்தர்.

பாம்பாட்டிசித்தர் சித்தர்களில் போகர் எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானவர், பாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.     தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிந்த சித்தர்களில் இவரும் ஒருவர். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்து வேடிக்கை காட்டுவதே இவர் தொழில். எவ்வளவு பெரிய பாம்பானாலும் சரி ! எவ்வளவு கொடிய நாகமானாலும் சரி. பிடித்துவிடுவார். அவற்றின் விஷத்தைக் கக்க வைத்துச் சாதாரணமான தண்ணீர்ப் பாம்பு போல் ஆக்கிவிடுவார்.     விஷத்தை முறிக்கும் மூலிகைகளையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார். விஷ வைத்திய ஆராய்ச்சியாளர் என்றே அவரைக் கூறலாம். மருத மலையில் விஷ வைத்திய ஆய்வுக் கூடமே நடத்தினார்.     ஒரு நாள் மலைமேல் பெரிய நவரத்தினப் பாம்பைக் கண்டு, அதைப்     பிடிப்பதற்கு     விரைந்தார். பாம்பைப் பிடிக்கப் போகும்போது, சட்டைமுனியைக் கண்டார்.     சட்டைமுனி, பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தார். காடுகளில் பாம்புகளைப் பிடித்து நாடு நகரில் சென்று அவற்றை ஆட்டிக் கொண்டு, பிழைத்துக் கொண்டிருந்த பாம்பாட்டி ஞானப்பால் உண்டு நானிலம் மெச்சும் சித்தராகி விட்டார்.     நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதியில் பாம்பாட்டிச் சித்தரைப் பற்றிக் கூறிய கருத்தினைக் காணலாம். இவர் திருக்கோகர்ணத்தைத் தமக்குச் சன்மஸ்தானமாக (பிறந்தவூர்) உடைய ஒரு சித்தர், இவர் காலம் நன்கு புலப்படாததாயினும் சமீப காலத்தவர் என்பது எளிதில் துணியப்படும். இவர் ஆடு பாம்பே எழுந்தாடு பாம்பே என்று     பாம்பை     முன்னிலைப்படுத்திப்     பாடல் பாடியுள்ளமையால் இவருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்றும் பெயர் வழங்கி வருகிறது. இவர் பாடல், கூத்தர் பாடல் போல் வெள்ளையாயிருப்பினும், தத்துவார்த்தங்களின் மேலதாகிய அற்புத ஞானக் கருத்தை உட்கொண்டிருக்கும். இவர் பாம்பு என்று கூறுவது பாம்புருவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலினி சக்தியை. அதை எழுப்புதல்     யோகிகளுக்கு அவசியமாகும். அதனால் எழுப்புவாராயினார்”.     பாம்பாட்டிச் சித்தர் ஜோகி என்னும் வகுப்பைச் சார்ந்தவர். "கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல் காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர் மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!" "தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே - சிவன் சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே! ஆடு பாம்பே! தெளிந்து ஆடு பாம்பே சிவன் அடியினைக் கண்டோம் என்று ஆடு பாம்பே" - பாம்பாட்டிச் சித்தர் - பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருக சீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும், சட்டை முனியின் சீடர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் குறிப்பிடுகிறார். மூலாதரத்தில் இருக்கும் குண்டலினியை உறங்கிக் கிடக்கும் பாம்பு என்று சித்தர்கள் சொல்வர். இந்த குண்டலினி சக்தியானது சுழிமுனை நோக்கி ஏறுவதை, பாம்பு புற்றிலிருந்து ஏறுவது போல என குறியீடாக சொல்வர். இதையே கருத்தாக கொண்டு குண்டலினி சக்தியை மேல் எழுப்புவதை பற்றிய பாடல்கள் பல பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவரின் பல பாடல்களில் ஆடு பாம்பே என குண்டலினியை விளித்து பாடியதை அவதானிக்கலாம். பாம்பாட்டி சித்தர் பாடல் சித்தரா ரூடம் பாம்பாட்டி சித்தர் வைத்தியம் ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. இவர் தவம் செய்த குகை மருதமலையில் இன்றும் காணப்படுவதாக சொல்லப் படுகின்றது. இவர் விருத்தாசலத்தில் சமாதியடைந்ததாகவும் சொல்லப் படுகிறது. பாம்பாட்டிசித்தர் வாழ்க்கை குறிப்பு இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள். சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது. ‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார். ‘‘ஜோகிங்க சாமி...’’ ‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’ ‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ ‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’ ‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’ ‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’ ‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’ ‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’ அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி. குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி... அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது. ‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’ ‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது. ‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’ ‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’ ‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான். சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார். ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜ்ஜால சித்தரானார். எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், குண்டலினி யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார். இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’ _ என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர். அந்த நொடியில், உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடுஎன்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது? போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார். பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது.இவர் சித்தாருடம் என்னும் நூலை எழுதியுள்ளார்.
   இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண             ஈரைந்து மாதமாய் வைத்த சூளை        அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை             அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே !      - என மனித உடலின் நிலையற்ற தன்மையை அனைவரும் வியப்புறும் படி பாடியவர்தான் -- பாம்பாட்டிச் சித்தர். பாம்புகளைக் கண்டு பயப்படாமல் காடு, மலையெல்லாம் அஞ்சால் பாம்புகளைத் தேடி திரிந்த இளைஞர்தான் பாம்பாட்டிச் சித்தர். ஒருநாள் பாம்பாட்டிச் சித்தரிடம் சிலர் வந்து  தம்பி, உன்னுடைய அசாத்திய துணிச்சல்  எங்களை பிரமிக்க வைக்கிறது. நவரத்தின மயமான உடலினை கொண்ட குட்டையான பாம்பு ஒன்று இந்த மலைக்காடுகளில் சுற்றித்திரிகிறது. அதன் தலையில் மாணிக்கம் ஒன்று இருக்கிறது. அந்தப் பாம்பு இரவில் மட்டுமே உலவிடும். மருந்தாக அதன் விஷம், மாணிக்கம் எங்களுக்கு தேவைப்படுகிறது.அந்த விஷப் பாம்பை எப்படியாவது பிடித்து கொடு....என்றனர். பாம்புகளைப் பிடிக்க புற்றை இடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, வேடிக்கைக் காட்டுவது இவையெல்லாம் பாம்பாட்டி சித்தரின் விருப்பமான விளையாட்டு, இனிமையான பொழுது போக்கு.எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும், எவ்வளவு கொடிய விஷ நாகமானாலும் அதனைப் பிடித்துஅதன் விஷத்தைக் கக்கவைத்து விடுவார். அதனால்தான் அந்த வைத்தியர் பாம்பாட்டிச் சித்தரிடம் அந்தக் கோரிக்கையை முன் வைத்தார். எவராலும் பிடிக்க முடியாத அந்த நவரத்தினப் பாம்பை எப்படியேனும் பிடித்தாக வேண்டும் என்ற வேட்கையில் வெறி பிடித்தாற் போல் காடுகளில் அலைந்து திரிந்தார். ஒரு புற்றிலும் அவர்கள் கூறிய நவரத்தின் பாம்பு இல்லாமல் போனதைக் கண்டு மிகவும் மனம் நொந்தார். இப்படி மென் மேலும் அலைந்து, திரிந்த சமயம், திடீரென்று காடே அதிர்வது போன்ற ஒரு சிரிப்பொலி கேட்டது. பாம்பாட்டி சித்தர் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தபோது, ஓரிடத்தில் அவருடைய  விழிகள் குத்திட்டு நின்றன.  அங்கே ஒளி வீசும் திருமேனியுடன்* சட்டைமுனி* எனும் புகழ் பெற்ற சித்தர் நின்று கொண்டிருந்தார். சிங்கள நாட்டு தேவதாசின் வயிற்றில் பிறந்தவர்தான் சட்டை முனிவர் எனும் இந்த சித்தர். இவர் பிறந்த பின் இரவது தாயாரோடும், தந்தையாரோடும் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறினார். சட்டைமுனி, கோவில் வாசலில் தட்டை ஏந்திக்கொண்டு யாசகம் பெற்றுத் தம் தாய் தந்தையருக்கு  உதவி வந்தார். இளையரான சட்டைமுனி ஒருநால் கோவிலில் யாசகத்திற்கு நின்று கொண்டு இருந்தபோது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட தவசி ஒருவரைக் கண்டார். அவரைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே அவரால் கவரப்பட்டு அவருடனேயே புறப்பட்டு போய் விட்டார். அந்தத் தவசியுடனே காடு-மலை என சுற்றியலைந்தார். அப்படி அலைந்து திரியும் போதுதான் போக முனிவரை சந்திக்கும் பேறு பெற்றார். அன்று முதல் அவர் போக சீடரானார்.அப்போது கொங்கணவர், கருவூரார் ஆகிய சித்தர்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்த அபூர்வ சித்தர்களிடமிருந்த  அனைத்து சித்தர் நெறிகளையும் சட்டை முனி கற்றுத் தெளிந்தார். தாம் கற்றவற்றை எல்லாம் உலகத்தார்க்குத் தெரியப்படுத்த அற்புத நூல்களாக எழுதினார். பொதுவாக சித்தர்களின் சித்த நெறியும் அற்புத இரகசியங்களும் வெளிப்படையாக எழுதப்பட்டால்  கொடியவர்களின் தீய ஆயுதமாகிவிடும் என்பதால்தான் அவற்றையெல்லாம் பசிபாஷையாக எழுதப்படும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், சட்டை முனி  அதற்கு   எதிர்மாறாக,  விளக்கமாக  வெளிப் படையாகவே சித்த இரசியங்களை எழுதியதால், திருமூலர் அந்நூலை கிழித்தெறிந்தார். உரோம ரிஷியும் கடுங் கோபம் கொண்டு சட்டை முனியை விமர்சனம் செய்தார். சட்டை முனிக்கும் உரோம ரிஷிக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. இதனால் சட்டை முனி தனது அரிய நூட்களை அகிழித்துதெறிந்து விடுவார் என  அஞ்சி அந்நூட்களை காகபுஜண்டரிம் கொடுத்தார். அவர்  அந்நூட்களை தமது காக்கைச்   சிறகுகளினடியில் மறைத்துக் கொண்டார். பின்னர் அவற்றை பத்திரமாக அகத்தியரிடம் கொடுத்துவிட்டார். அதன்பின்  சட்டைமுனி  இரசவாதம் முதலான  வேதியியல்  மர்மங்களை  அறிய  சதுரகிரி மலை சென்று  அளவற்ற  ஆற்றலைத்  தரும்  இரசமணியை  தாயரித்து  அளப்பரிய செயல்களை நிகழ்த்தினார். திருவரங்கநாதன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார் சட்டை முனி கால் நடையாகவே அரங்கனை காண கால்நடையாகவே சென்றார். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள் நள்ளிரவு பூஜையும் முடிந்து நடையையும் சாத்திவிட்டார்கள். திருவரங்கனை எப்படியும் தரிசித்து விடவேண்டும் என்று பைத்தியம் பிடித்தார் போல் பூட்டிய கோவிலுக்கு வெளியே நின்றுகொண்டு அரங்கா அரங்காஎன்று மூன்று முறை கூவினார். தாபம் பொங்க அவர் கூவியதும் கோயில் மணிகள் முழங்க மேளதாளங்கள் ஒலித்தன.முரசுகள் அதிர்ந்தன. கோவில் கதவுகள் தாமாகத் திறந்தன.ஊர் மக்கள் ஒன்றும் விளங்காதவர்களாய் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது சட்டை முனி அரங்கன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். சட்டை முனி இருந்த கோலம் திருவரங்கன் அணிந்திருந்த சங்கு சக்கரம் ஆபரணங்கள் அவர் மேலிருந்தது. சட்டை முனி நிச்சியம் கள்வனாகத்தான் இருக்க வேண்டும் எண்ணி கோவில் பட்டர்கள் அவரை அரசன் முன்னிறுத்தினர். அரசனும் சட்டை முனி கள்வனெ குற்றம் சுமத்திய போது அவர் அரங்கனே அனைத்தும் அறிவார்என கூறினார். கோவில் வாசலுக்கு வந்ததும்அரங்காஎன்று மூன்று முறை கூவி அழைத்தார். அப்போது சட்டை முனியின் அருகில் திருவரங்கன் காட்சி தந்தார்.  அந்த தெய்வீக காட்சியைக் கண்டு மெய் மறந்த நின்ற வேளையில் சட்டை முனி இறைவனோடு இரண்டறக் கலந்தார். அந்த சட்டை முனிதான் இப்போது காட்டில் ஒளி வீசும் திருமேனியுடன் பாம்பாட்டிச் சித்தருக்கு காட்சியளித்தார். ஆனால், பாம்பாட்டிச் சித்தருக்கு அவர் யாரென்று அறியவில்லை. ஆகையால் சட்டை முனியைப் பார்த்து, “யார் நீங்கள் ’’ என்று பாம்பாட்டிச் சித்தர் கேட்டார். நீ எதற்காக அலைந்து கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உலகத்திலுள்ள அத்தனை  பாம்புகளையும் பிடித்து ஆட்டக்கூடிய திறமைசாலி என்றும் அறிவேன்.ஆனால், உன் உடம்புக் குள்ளேயே ஒரு பாம்பு ஒளிந்திருக்கிறதே அது  தெரியுமா உனக்கு. எல்லோரும் அறியாதது போலவே நீயும் அதனை அறியப்படவில்லை.அதை ஆட்டுபவந்தான் அறிவாளி.அதனை அடக்கி ஆள்பவர் தாம் சித்தர்கள்.அடக்கத் தெரியாதவர்கள் பைத்திக்கார மனிதன். எனவேதான் சொல்கிறேன்.கண்ணுக்குத் தெரிய வெளியில் திரியும் அந்தப் பாம்புகளை விட்டு விடு. உன் உள்ளே இருக்கும் அந்தப் பாம்பை தேட, அடக்க வழி தேடு.. சாமி, இந்தக் காடெல்லாம் பாம்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு பாம்பு இருப்பதை இது நாள் வரை அறியவில்லை. இதைப்பற்றி இது வரை யாரும் என்னிடம் கூறியதுமில்லை. தயவு செய்து தாங்கள் எனக்கு அதனைத் தெரிவிக்க வேண்டும்..என்று பணிந்து நின்றார் பாம்பாட்டி சித்தர்

குண்டலினி  பாம்பாட்டி சித்தர்.

குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர் பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லைஎன்றார். இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதேஎன்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. குண்டலினிஎன்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான். இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது குண்டலினிஎன்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவேஎன்று சொல்லி முடித்தார். குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார். பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார். ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் அரசனொருவன் இறந்து போய் அவனது உடல் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் தன் உடலை மறைவிலிட்டு இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார். அரசன் எழுந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை. சித்தன் போல் பிதற்றுகிறார், மாயங்கள் எல்லாம் செய்கிறார் என்ற மக்களின் விமர்சனம் ராணியின் காது படவே விழுந்தது. அவள் மனதில் கவலையோடு சந்தேகமும் எழுந்தது. அரசனைப் பார்த்து ஐயா! தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது சித்து வித்தைகள் புரிபவரா?“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களின் துன்பத்தினைப் போக்குவதற்காகவே நான் மன்னனது உடலில் புகுந்தேன். என் பெயர் பாம்பாட்டி சித்தன்என்றார். உண்மை உணர்ந்த அரசி எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கடைதேறும் வழியை உபதேசியுங்கள்என்று கைகூப்பி வேண்டினாள். அரசரிடமிருந்து பலப்பல தத்துவப் பாடல்கள் உபதேசமாக வெளிவந்தன. அவைகளை கவனமாக எல்லோரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேரினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்தொடங்கினாள். அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் உடலில் புகுந்தார். இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது. இவர் செய்த நூல்கள் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன. மருதமலை சித்தர் தியானச் செய்யுள் அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து ! பின் உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே! ஆதிசேசனின் அருள் கண்டு ஆதிசிவன் மகன் வரம் கொண்டு சாதி மத பேதம் இன்றி காக்கும் சித்தரே காக்க! காக்க! பாம்பாட்டி சித்தரின் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறுபலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமிகளின் படத்தை வைத்து, அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் சித்தருக்காக குறிப்பிட்ட தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறவேண்டும். பின்னர் அல்லி, தாமரை, தாழம்பூ, சம்பங்கி ஆகிய மலர்களால் பின்வரும் 16 போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. ஸ்ரீ நாகாபரணம் உடைய சிவனை வணங்குபவரே போற்றி! 2. ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி! 3. சர்ப்பரட்சகரே போற்றி! 4. முருகனின் பிரியரே போற்றி! 5. பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி! 6. மூன்று வர்ணங்கள் கொண்டவரே போற்றி! 7. வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி! 8. ஸ்ரீ ஆதிசேசனை வணங்குபவரே போற்றி! 9. விஷத்தினை முறிப்பவரே போற்றி! 10. நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி! 11. ஜந்துக்களின் உருவம் உடையவரே போற்றி! 12. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி! 13. ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 14. சிவனுக்கு ஆபரணமாஅக இருப்பவரே போற்றி! 15. நந்திதேவரின் நண்பரே போற்றி! 16. ஸ்ரீ பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தர் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு கூறி அர்ச்சித்தபின் மூலமந்திரமான ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி!என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும். பின்னர் நிவேதனமாக சர்க்கரை கலக்காத பச்சைப் பாலையும், வாழைப்பழங்களையும் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். பாம்பாட்டி சித்தர் பூசா பலன்கள் இவர் நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்: 1. நாகதோசம் அகலும். 2. மாயை அகன்று மனத்தெளிவு பிறக்கும். நிழல் நிஜமாகவும், நிஜம் நிழாகவும் தோன்றும் நிலை மாறும். 3. கணவன், மனைவி இடையே உள்ள தாம்பத்திய பிரச்சினைகள் அகலும். 4. போதைப் பொருட்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் அகலும். 5. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும். 6. ஜாதகத்தில் ராகுபகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோசம் நீங்கும். நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். 7. ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஓங்கும். 8. வீண்பயம் அகன்று தன்பலம் கூடும். 9. நரம்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும். இவருக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம். பூசை செய்ய உகந்த நாள் சனிக்கிழமை. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை - 641046 கோயம்புத்தூர் மாவட்டம் சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது.பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது. பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, "பாம்பு வைத்தியர்' என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, ""உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!'' என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில்ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார்.பக்தர்கள் இவரை, "மருதமலை மாமணி' என்றுசெல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள். மன நிம்மதி வேண்டுபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர், இனிப்பான நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். அர்த்தஜாம பூஜை விசேஷம் : மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போதுஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் "ஏழாம்படை வீடாக' கருதப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் சன்னதி : மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடிவைத்துள்ளார். அருகில் சிவலிங்கம், நாகர் இருக்கிறது. முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டிச்சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள். "பாம்பு' முருகன் : பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ளபாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச்சித்தருக்கு முருகன் காட்சி தந்தார். இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளது. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன்தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம். மருதாச்சல மூர்த்தி : மருத மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், "மருதாச்சலமூர்த்தி' என்றுஅழைக்கப்படுகிறார். மருதமரமேஇத்தலத்தின்விருட்சம். தீர்த்தத்தின் பெயர் "மருது சுனை'. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆதி முருகன்:புராதனமான சிவன் கோயில்களில் சிவன், சுயம்புலிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி "ஆதி மூலஸ்தானம்' எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் இவருக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். பஞ்ச விருட்ச விநாயகர் :அரச மரத்தின் அடியில் விநாயகர் இருப்பார். இத்தலத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்க அதன் அடியில் விநாயகர் இருக்கிறார். இவரை, "பஞ்சவிருட்சவிநாயகர்' என்று அழைக்கிறார்கள். அருகில் முருகப்பெருமான், மயில் மீது அமர்ந்து, கையில் வேலுடன் காட்சி தருகிறார். சோமாஸ்கந்த தலம்:சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில்தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள முருகன் சிகிவாகனர் (மயிலை வாகனமாக உடையவர்), "சேனானி' (படைத்தளபதி) என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம். தோஷம் நீக்கும் விபூதி பிரசாதம்:பாம்பாட்டிச்சித்தருக்கு ஆடம்பர அலங்காரம் செய்யப்படுவதில்லை. விபூதிக்காப்பு செய்து, காவியுடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். மனிதர்கள்ஆடம்பரம் இல்லாமல், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. தம்பிக்கு உகந்த விநாயகர்: மருதமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாகஇருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, "தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும்அழைக்கிறார்கள்.மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். மலைக்கோயிலுக்கு படி வழியாகச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இவரை வணங்கிச் செல்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள், இவரைக் கவனிக்காமல் சென்று விடுகிறார்கள். வாகனத்தில் வந்தாலும், அடிவாரத்திலுள்ள இவரை வணங்கியபிறகே செல்ல வேண்டும் என்பது நியதி.  குதிரையில் வந்த முருகன் : முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோயில்களில் அவரை விழாக்காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோயிலில் சில திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோயிலில் சேர்க்கச் செய்தார். அதோடு அவர்களை பாறையாக மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை "குதிரைக்குளம்பு கல்' என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

பதஞ்சலி முனிவர்.

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்தது தமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும். பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம். ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் தாவோ ஆ·ப் ·பிசிக்ஸில் அளிக்கும் உவமை. இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள். இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான். ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி? மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம். ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி  இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம்   என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. உளச்செயல்என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம். அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன?  யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என நிரோத த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார். இது நம் மூலநூல்களில் பலவற்றின்  முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறதுஇவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொல்லப்படுவதுண்டு.அதாவது பிற  அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும். இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது.  பண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற  நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது. இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டுவரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது. இன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை.  காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை.  ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன. காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது. அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம். இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம். ராமகிருஷ்ணர் வேதாந்தி. பிரம்மமே நான்என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார். இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம். நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன. இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை. ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும். இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு. பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக்கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது. இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு. அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள். ஆனால் மேலைத்தத்துவம் அவற்றை தத்துவமூலநூல்களாகக் கண்டு காலந்தோறும் வளர்ந்து வரும் தத்துவசிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்கவும், மானுடசிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப்புரிந்துகொள்ளவும் உதவக்கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத்தேவை என்பது என் எண்ணம். இவ்வாறான நவீன வாசிப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய நவீனச் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று தத்துவம். மேலைத்தத்துவ சிந்தனை என்பது தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கு கொண்ட ஒன்று. அத்தகைய ஒரு சீரான வளர்ச்சி இந்திய சிந்தனையில் இல்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமான காரணம் இந்தியாவில் இன்று இந்திய சிந்தனை கற்பிக்கப்படுவதில்லை என்பதே. நாம் எட்டாம் வகுப்பு படிப்பதற்குள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வரை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறோம். இந்திய தத்துவத்தை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டமேற்படிப்பு படித்தாலொழிய கபிலரை நாம் அறிமுகம்செய்துகொள்ள முடியாது. அத்துடன் நம் கல்விமுறையின் அடித்தளமாக இருப்பது மேலைநாட்டு அறிவியலும் தத்துவமும்தான். ஆகவே நம்முடைய சிந்தனைமுறையின் அடியில் இந்திய தத்துவமரபின் அம்சமே இல்லை. இதனால் நம்மால் இந்திய தத்துவ மரபை ஒரு தொல்பொருள் என்ற அளவில் தகவல்களாக மட்டுமே அணுக முடிகிறது. அதை நம் சிந்தனைகளுக்கான கருவியாகக்கொள்ள முடிவதில்லை. ஆகவே நம் தத்துவ மரபு நவீனகாலகட்டத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக வளர்க்கப்படவில்லை. சிற்சில விதிவிலக்கான தனிச்சிந்தனையாளர்கள் மட்டுமே கண்ணுக்குப் படுகிறார்கள். அது போதாது. ஒரு தத்துவமரபு ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் பொதுச்சிந்தனையின் உள்ளே செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழமுடியும். கிரேக்க தத்துவ மரபு ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. இன்றைய நவீன சிந்தனையாளன்கூட கிரேக்க மரபில் இருந்துதான் தன் கருதுகோள் உருவாக்கத்தை தொடங்குகிறான், ஏற்றோ மறுத்தோ. ஆகவே மேலைத்தத்துவத்தில் உண்மையான வளர்ச்சி உள்ளது. மேலும் இந்தியசிந்தனை சார்ந்த எதுவுமே உதவாத பழங்குப்பை என்று சொல்ல நாம் ஒரு நூற்றாண்டாக பழக்கப்பட்டிருக்கிறோம். மெக்காலேயின் புகழ்பெற்ற மேற்கோளில் அவர் ஒட்டுமொத்த இந்திய சிந்தனை அனைத்த்தையும் சேர்த்தால்கூட பத்தாண்டுகால பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் தத்துவசிந்தனையின் அளவுக்கு நிகராகாது என்று சொல்கிறார். மெக்காலேயில் தொடங்கும் நம் கல்வித்துறை தலைமுறை தலைமுறையாக நம்மிடம் அந்த எண்ணத்தை உருவாக்குகிறது. அதை ஒரு மானசீகமான அடிமைத்தனம் எனலாம். ஆனால் நம்முடைய பேரறிஞர்கள் இலக்கியவாதிகள் என பலர் அந்த எண்ணத்தை மீற முடியாதவர்கள். உதாரணமாக, நான் நன்கு அறிந்த இலக்கியவாதியான சுந்தர ராமசாமி இந்திய சிந்தனை என்பது அர்த்தமில்லாத பழங்கால தர்க்கங்களும் மூடநம்பிக்கைகளும் கலந்தது என்று எண்ணினார்.அவை காலாவதியாகிவிட்டன என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு இந்திய சிந்தனை பற்றி எளிய அறிமுகம் கூட இருக்கவில்லை. அதேசமயம் மூவாயிரமாண்டு பழமையுள்ள சாக்ரடீஸ்,பிளேட்டோ, அரிஸ்டாடில் சிந்தனைகள் மானுட சிந்தனையின் அடித்தளங்கள் என்று அவர் சொல்வார், அவை அவருக்கு பழங்குப்பைகள் அல்ல. இந்திய சிந்தனைகளை மத சிந்தனைகள் என அவர் சொன்னபோது சாக்ரடீஸும் கிரேக்க மதத்துக்குள் நின்றவரல்லவா, அவரும் ஆத்மா போன்ற உருவகங்கள் வழியாக சிந்தித்தவர் அல்லவா என்று நான் கேட்டேன். அப்போதுதான் அச்சிந்தனைகளிலும் அவருக்கு பெரிதாக அறிமுகம் இல்லை என்று உணர்ந்தேன். ஆனால் இந்த மனப்பிம்பம் அவரில் ஆழ வேரூன்றியிருந்தது. இது சராசரியான ஒரு இந்தியமனத்தின் அமைப்பு. நம்மைச்சூழ்ந்துள்ள பெரும்பாலானவர்கள் இந்தத் தளத்திலேயே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். ஆகவே மேலைத்தத்துவத்தின் அடிப்படைகளுடனும் இன்றைய பரிணாமத்துடனும் பதஞ்சலி யோகசூத்திரத்தை நாம் ஒப்பிட்டு வாசிக்கும்போது ஏராளமான புதிய சாத்தியங்களைக் கண்டடைய முடியும். அதற்கு பதஞ்சலி யோகசூத்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தத்துவப்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலைத்தத்துவம் உருவாக்கியிருக்கும் கோட்பாடுகளுடன் அவற்றை இணைத்து யோசிக்க அது நமக்கு உதவும் இரண்டாவதாக, மேலை உளவியல். பதஞ்சலி யோக சூத்திரத்துடன் ஒப்புநோக்கையில் மேலை உளவியல் குழந்தைப்பருவத்திலேயே இருக்கிறது என்பதே என் எண்ணம். அதை முக்கியமான சில உளவியலாளர்களுடனான உரையாடலிலும் நான் கேட்டதுண்டு. மேலும், மேலை உளவியலின் பல ஆதாரக் கோட்பாடுகள் பதஞ்சலி யோகம் போன்ற கீழை யோகவியலில் இருந்து கடன்பெற்றவை. ஆனால் மேலை உளவியல் நவீன அறிவியலுக்குரிய தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது கிரேக்க தர்க்கவியலில் இருந்து பிறந்து இன்று எல்லா சிந்தனைகளுக்கும் அடிபப்டையாக இருக்கும் மேலை அறிவியங்கியலில் அது அமைந்திருக்கிறது. நாம் கல்விக்கூடங்களில் கற்பதும் சிந்திப்பதும் அதில்தான். ஆகவே பதஞ்சலி யோகம் போன்ற பண்டையச் சிந்தனைகளை நாம் மேலை உளவியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் விவாதிப்பதும் எளிதாகிறது. பதஞ்சலி யோகத்தை உளவியலும் உளம் கடந்த இருப்பு குறித்த ஆய்வும் என்று பொதுவாக வகுத்துக்கூறலாம். அதன் அடிப்படைகள் பல மேலை உளவியலை வைத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள எளிதானவை. அதே சமயம் பதஞ்சலி சொல்வதை நிரூபிக்கமேலை உளவியலை துணைகொள்வது போன்ற அபத்தமும் வேறில்லை. பட்டப்படிப்புப் பாடத்தை பத்தாம் வகுப்புப் பாடத்தை வைத்து நிரூபிக்க முயல்வது போன்றது அது மூன்றாவதாக, மொழியியல். பதஞ்சலி அடிப்படையில் மனித இருப்பு அல்லது தன்னிலை குறித்த தரிசனத்தை முன்வைக்கிறார் எனலாம். சமகாலச் சிந்தனையில் இந்த கருதுகோள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மொழியியலில்தான் நிகழ்ந்துள்ளன. ஆகவே மொழியியலின் கோட்பாடுகளை பதஞ்சலியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம். அத்தகைய ஒரு நவீன வாசிப்புக்கு இன்றியமையாத தேவை பதஞ்சலி யோகசூத்திரத்தை நவீன மனநிலையுடன் அணுகுவதாகும். நவீன மனநிலை என்றால் நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன். 1. ஒரு ஞானத்தை ஒரு இனம், மொழி, மதம், பண்பாட்டுக்குள் நிறுத்திவிடாமல் மானுடப்பொதுவான ஞானமாக அதை எடுத்துக்கொண்டு ஆராய்வது. 2. ஒரு ஞானத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாகக் கருதாமல் எப்போதைக்குமான ஞானமாக எடுத்துக்கொண்டு ஆராய்வது 3. அதன் மீது பக்தியோ வெறுப்போ இல்லாத தர்க்கபூர்வ  அணுகுமுறை அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலியை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடும் இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பலவகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோகசூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன். நெடுங்காலமாகவே யோகமரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக்கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும்சரி,  யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான். என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம்  தன் மனத்தை அவதானிப்பதில்  தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர்செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே. நேர் மாறாக தாந்த்ரீக மரபு என்பது மனவெளிப்பாடுகளையே முதலில் கருத்தில் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாக பயின்று அறிந்து  வென்று கடந்துசெல்லுதல் அதன் வழிமுறை. அச்சம் காமம் வன்முறை போன்று மனத்தின் ஆதார வெளிப்பாடுகள் ஏராளமானவை. ஒவ்வொன்றையும் அறிவதே தாந்த்ரீகம் முன்வைக்கும் விடுதலை மார்க்கமாகும்.கடந்துசெல்லுதலே விடுதலை அல்லது முக்தி என்பது அதன் அறிதல். மனம் வெளிப்படுவது குறியீடுகள் வழியாகவே. ஆகவே தாந்த்ரீகம் குறியீடுகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்கிறது. நம்முடைய புராணங்கள் சிற்பங்கள் போன்ற ஏராளமான குறியீடுகள் தாந்த்ரீகத்தால் உருவகிக்கப்பட்டவையே. அதேபோல நம் உடல், மனம் பற்றியும் தாந்த்ரீகம் ஏராளமான குறியீடுகளை உருவாக்கியிருக்கிறது. அக்குறியீடுகளை பருண்மையான உண்மைகளாக எடுத்துக்கொள்வர்கள் பலர். தாந்த்ரீகம் இரு வழிகளை கடைப்பிடிக்கிறது. அவை இடது வலது என பிரிக்கப்பட்டு வாமாசாரம் தட்சிணாச்சாரம் என்று சொல்லப்படுகின்றன. மனவெளிப்பாடுகளை அறிய அவ்வெளிபபடுகளையே மனதால் நிகழ்த்தி அதன் எல்லையை அறிவது ஒரு வழி. அதாவது காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது. அச்சத்தை வெல்ல அச்சமூட்டுவதற்குள்ளேயே நுழைவது. மரணத்தை அச்சமென்றால் சுடுகாட்டு பிணம் மீது அமர்ந்து தியானம்செய்வது போன்ற ஒரு உக்கிரமான வழி அது.  இதுவே இடதுமுறை. அல்லது வாமாச்சாரம். மன வெளிப்பாடுகளை வெல்ல அவ்வெளிப்பாடுகளை உன்னதமாக்கிக் கொள்ளலாமென்பது இன்னொரு வழி. காமத்தை வெல்ல அதை குறியீடாக ஆக்கி அக்குறியீட்டை கலைகளாக ஆக்கி அக்கலையின் உன்னதங்கள் வழியாக காமத்தை அறிந்து கடந்துசெல்லலாம். அச்சம் வன்முறை அருவருப்பு என அனைத்தையுமே அவ்வாறு கடந்துசெல்லலாம். உன்னதமாக்கல் என்பது இம்முறையின் முக்கியமான வழிமுறை. சடங்குகள் பூஜைமுறைகள் கலைகள் என அதற்கு பல வழிகளை அது கண்டடைந்துள்ளது. இது வலதுமுறைதட்சிணாச்சாரம். நாம் தமிழ் சித்தர் மரபு என்று சொல்லும் மரபில் இருவகை தாந்த்ரீகர்களும் உள்ளனர். இரு மரபுகளுமே யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கின்றன. இவ்விரு மரபுகளும் பலவகையான உருவகங்களையும் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.அக்குறியீடுகள் எளிமையான சித்தர் பாடல்கள் வழியாக சாதாரண மக்களிடம் வரும்போது அவை அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு யோகம் குறித்து ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே புழங்குகின்றன. உடலில் உள்ள மூலாதாரம் முதலிய ஒன்பது சக்திமுனைகள் பற்றிய பேச்சு ஓர் உதாரணம். அவை முறையே காமம்,பசி,மூச்சு,பேச்சு,இதயம், சிந்தனை, உள்ளுணர்வு, உயிருணர்வு, பேருணர்வு என்ற நிலைகளைச் சுட்டுபவை. ஆனால் உடம்பிலேயே அவை உள்ளன, தொட்டுக்கூட பார்க்க முடியும் என்ற அளவில் அவை புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தியானத்தில் நெற்றிப்பொட்டில் ஒளி தெரிவது போன்ற பல நம்பிக்கைகள் இவ்வாறு தாந்த்ரீக உருவகங்களை நேரடியாக எடுத்துக்கொள்வதன் விளைவுகளே. இன்னும் அடுத்தபடிக்குச் சென்று அணிமா மகிமா போன்ற அட்டமாசித்திகளும் யோகத்தால் வசமாகும் என்றும் முக்காலமும் தெரியும் என்றும் சொல்லக்கூடியவர்கள் உள்ளனர். சிலர் கல்லைக் கடித்து தின்னுதல் போன்ற ஹடயோக வித்தைகளையும் யோகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள். அவையெல்லாமே தாந்த்ரீக மரபின் குறியீடுகள். பதஞ்சலி யோகத்துக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்பதை உணரலாம். அத்தகைய எளிய உருவகங்களை உதறிவிட்டுத்தான் நாம் பதஞ்சலி யோகத்தை அணுக வேண்டும். பதஞ்சலி யோகம் மாயவித்தையோ, ரகசிய வித்தையோ ஒன்றும் அல்ல. அது மிக திட்டவட்டமாக எழுதப்பட்டு புறவயமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஞானம். அதை குருமரபுகளில் தெளிவாகவே கற்றறிந்திருக்கிறார்கள். அதில் சில பகுதிகள் நமக்கு விளங்காதவையாக இருக்கலாம்ஏனென்றால் அது பயிலப்பட்ட மரபுகளில் பதினேழாம் நூற்றாண்டு முதல் ஓர் அறுபடல் உள்ளது. அதில் இடைச்செருகல்களும் இருக்கலாம். ஆனாலும் அது திட்டவட்டமான ஒரு தத்துவ -நடைமுறை நூலேயாகும்.

யோக சூத்திரர்  ஸ்ரீ பதஞ்சலி முனிவர்.

யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றியவியாகரண சூத்திரம்என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தைஉபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்என்றார் ஒரு சீடர். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்என்றார். குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர். பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்என்றார் பதஞ்சலி. பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரேஎன்று கண்ணீர் வடித்தார்.குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று. இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்: "பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில்ல் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலக்குன்றுகள்" இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்." "தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்: "நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர் என்றிவர் என்னோடு எண்மருமாம்!" சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன். "அது என்னுடைய தாத்தா! மேலே ஏறிப் பார்! ஆனால் என்னைப் பிறப்பித்தவர் காலங்கி நாதர்! பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது பார், இதுவே சரியான வழி! அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்."அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று. குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர். மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் ஹிரண்யகர்பர்’. அதை சூத்திரங்களாக்கிவைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்: வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர். இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்வர். தந்தை: அத்திரி முனிவர். தாய்: கோணிகா. வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால்ஆத்திரேயர்’, கோணிகாவின் பிள்ளையென்பதால் கோணிகாபுத்திரர்’. இவர் எழுதிய மூன்று நூல்கள்: யோகத்தினை விளக்கும் யோக சாஸ்திரம்’, மொழி இலக்கணமானமஹாபாஷ்யம்’, ஆயுர் வேத்மாகிய சரகம்என்ற ஆத்திரேய சம்ஹிதை’. ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார் பதஞ்சலி முனிவரின் தியானச் செய்யுள் ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே பக்தியுடன் வணங்கும் எமக்கு நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே! ஸ்ரீ பதஞ்சலி சித்தரின் பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் பதஞ்சலி சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி இட்டு இரண்டுமுக தீபமெற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பொன்னிற வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும், பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி! 2. ஆதிசேஷனின் அவதாரமே போற்றி! 3. ஒளிமயமானவரே போற்றி! 4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி! 5. கருணாமூர்த்தியே போற்றி! 6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி! 7. பூலோகச் சூரியனே போற்றி! 8. ஞான வழிகாட்டுபவரே போற்றி! 9. பேரும் புகழும் உடையவரே போற்றி! 10. இன்மொழி பேசுபவரே போற்றி! 11. இகபர சுகம் தருபவரே போற்றி! 12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி! 13. அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி! 14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி! 15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி! 16. யோகங்கள் அனைத்தையும் அளிக்கும் பதஞ்சலி சித்த சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான ஓம் க்லம் பதஞ்சலி சித்தரே போற்றி!என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக இளநீர், கடுக்காய், தண்ணீருடன், தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், பழம் போன்றவற்றை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் பூஜா பலன்கள் 1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தி உண்டாகும். 2. குடும்ப ஒற்றுமை உண்டாகும். 3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும். 4. நன்மக்கட் பேறு உண்டாகும். 5. எலும்பு சம்பந்தமான வியாதிகள் குணமடையும். 6. கல்விக் கலைகளில் சிறந்து விளங்கலாம். 7. எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். 8. விஷம், உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். இவரை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள். அருள்மிகு பதஞ்சலி மனோகரர் கோயில், விளமல்- 610 002 . திருவாரூர் மாவட்டம். பதஞ்சலி முனிவர் ஈசனின் நடனக்கோலம் காண தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் தில்லையில் தனது திருநடனத்தை காண்பித்தார். இந்த நடனத்தை வியாக்ர பாதரும் கண்டு மகிழ்ந்தார். அத்துடன் இரு முனிவர்களும் சிவனிடம், ஐயனே! உனது நடனம் கண்டோம். இந்த ஆனந்த நடனத்துடன் தங்களின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். மேலும் உன் பக்தர்களுக்கும் உனது திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும்,என வேண்டினர். அதற்கு ஈசன், நீங்கள் இருவரும் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எனது நடனத்தையும், திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள்,என்றார்.அதன்படி இருவரும் திருவாரூர் வந்தனர். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமே காட்சியளித்தது. எனவே பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் காலை புலிக்காலாகவும் மாற்றி திருவாரூர் கமலாம்பாளை வணங்கினர். அவள் கூறியபடி விளமல் என்ற இடத்தில் விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணில் பதஞ்சலி முனிவர் லிங்கம் பிடித்து வழிபட்டார். இந்த வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி, அஜபாவன நர்த்தனம் ஆடி தன் பாதத்தை காட்டி அருளினார். இந்த சிவன் ப தஞ்சலி மனோகரர் என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் நடன மாடிய போது காட்டிய திருவடி ருத்ரபாதம் எனப்பட்டது. அவர் நட னமாடிய இடம் விளமல் எனப்பட்டது. இதற்கு திருவடிஎனப்பொ ருள். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம், திருவிளமல், சிவபாத ஸ்தலம் என போற்றப்படுகிறது. மூன்று தரிசனம்: மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதி யில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். திருவாரூரில் தியõகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பி றவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். மூலவர் சிவன் மணல் லி ங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது. மதுரபாஷினி: சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மது ரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் ÷க்ஷõடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் பிரச்னை உள்ளவர்களும் இந்த அம்மனை வேண்டினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை. அமாவாசை அன்னாபிஷேகம்: பொதுவாக சிவன் கோயில்களில் ஐ ப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பித் ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இத்தல விநாயகராக சித்திவிநாயகர் காட்சி தருகிறார். இங்குள்ள ராஜதுர்க்கை எட்டு கைகளுடன் வீற்றிருக்கிறாள். வலது கையில் சூலமும், இடது கையில் கிளியும் தாங்கி சிம்ம வாகனத்தில் இருப்பது சிறப்பு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த துர்க்கையை வழிபாடு செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று.சிவனின் பாத தரிசனம் காட்டிய தலமாதலால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. இத்தலத்தில் நந்தி, சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய வடகிழக்கு திசையை நோக்கி தலை திருப்பி இருப்பதை இன்றும் காணலாம். பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது. விநாயகரின் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றினால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இரண்டு பக்கமும் ஐராவதம் நிற்க, மகாலட்சுமி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம். 


No comments:

Post a Comment