Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-7


                             அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. - தமிழின் ஆதிகவி; - அகத்தியம் எனும் இலக்கண நூலின் ஆசிரியர்; - முதல் தமிழ்ச் சங்கத்தின் புலவர்; - தொல்காப்பியரின் ஆசிரியர். புத்தமதக் கடவுள் அவலோகிவர் எனும் போதிசத்துவரிடம் தமிழ் கற்றவர் என்று வீரசோழியமும், சிவனிடமும், முருகனிடமும் தமிழ் கற்றவர் என்று கந்தபுராணமும், அகத்தியருடைய ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. இராமன் தொழுத அகத்தியரை இராமாயணம் குறிப்பிடுகிறது. பாரதம் கூறும் கண்ணபிரானைச் சந்தித்து பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அகத்தியர் அழைத்து வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுகிறார். சமணர்களால் போற்றப்படுபவர்களின் பட்டியலிலும் அகத்தியர் இருக்கிறார். ஜாவா, சுமத்திரா தீவுகளுக்குச் சென்று சைவ சமயத்தைப் போதித்த சிவகுருவாகவும் அகத்தியர் இருக்கிறார். - சிலப்பதிகாரம், - மணிமேகலை, - பரிபாடல்களிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டியன் புரோகிதர் அகத்தியர் என்று குறிப்புள்ளது. சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஒட்டி அகத்தியர் "பக்த விலாசம்" எனும் நூலை வடமொழியில் அகத்தியர் எழுதியதாகவும் கூறப்படுகிறது. அகத்தியம் என்பதோடு "சிற்றகத்தியம்", "பேரகத்தியம்" என்று இரு நூல்கள் இருந்தனவாம். சிறுகாக்கைப் பாடினியார், பெருங்காக்கைப் பாடினியார் போல சிற்றகத்தியார், பேரகத்தியார் என்று குறுமுனிக்குள்ளும் பல அண்டங்கள். சிவபெருமான் திருமணத்தில் வடக்கே இமயம் தாழ, தெற்கு உயர்ந்ததாகவும் வடக்கு, தெற்கை சமநிலைப்படுத்த அனுப்பி வைக்ககப்பட்டவர் அகத்தியர் என்றும் புராணக் கதைகள் உள்ளன. தென்திசை நோக்கி வந்த அகத்தியர் கங்கையிலிருந்து கொண்டுவந்த நீர் காவிரிதானாம். "அகத்தியர் தேவாரத் திரட்டு" என்று ஒரு நூல், 
                                 தேவாரம் ஒரு இலட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை உடையதாம். இப்போது கிடைப்பவை 797 தான். மற்றவை மறைந்து போயின. எஞ்சியவை திருவாரூர் அரசன் அபய குலசேகரன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தவை என்றும் மூவர் பாடிய பதிகங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்த பலனை எளிதில் பெரும் பொருட்டு அகத்தியரால் 25 பதிகங்கள் மட்டும் திரட்டியளிக்கப்பட்டதாகவும் முன்னுரை கூறுகிறது. இதுமட்டுமன்றி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகளும், அகத்தியர் ஆணைபெற்றே நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இப்போதும் அகத்தியர் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் வெய்யில் கடுமையாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அகத்தியரைப் பார்க்க பொதிகைமலை போகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாவநாசத்திற்கு மேல் உள்ளது அகத்தியர் அருவி. அதற்கும் மேல் - கல்யாணதீர்த்தம், - பாணதீர்த்தம், பழங்குடி மக்கள் இப்போதும் வாழும் இஞ்சிக்குழி, தண்பொருநை நதிமூலம்-பொதிகைத் தென்றல் புறப்படும் பூங்குளம், அதற்கும்மேல் அகத்தியர் மொட்டை எனும் பொதிகைமலை உச்சி. மூன்று நான்குநாள் பயணத் தேவைகளோடு மலையேறி அகத்தியரைப் பார்க்கப் போகிறார்கள். பொதிகை மலை, தமிழுக்கும் மருத்துவத்துக்கும் பிறப்பிடம் என்றும் நம்புகின்றார்கள். சித்த மருத்துவத்திலும் அகத்தியருக்கு இடமிருக்கிறது. பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியர் இருக்கிறார். இவ்வாறு அகத்தியர் - இலக்கியம், - இலக்கணம், - பக்தி, - மருத்துவம், - சமயம் என்று பன்முக ஆற்றல் கொண்டவராக மட்டுமின்றி - தமிழ்-வடமொழி; - சைவம்-வைணவம்; - சமணம்-புத்தம்; - இராமாயணம்-மகாபாரதம்; - வடக்கு-தெற்கு; - இமயம்-குமரி, - கங்கை-காவிரி, - வடநாட்டார்-தமிழ்நாட்டார் ஆகியவற்றிற்கிடையேயான நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் திகழ்கிறார். குறிப்பாக தனிப்பட்ட மொழி, இனம், மதம், நாடு கடந்து இந்திய கலாச்சார வரலாற்றின் படிமமாக இந்தியா முழுவதற்குமான ஒட்டுமொத்த ஒரே படிமமாக அகத்தியர் மட்டுமே தென்படுவது வியப்பையும் பெருமிதத்தையும் தருகிறது. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1.
அகத்தியர் வெண்பா
2.
அகத்தியர் வைத்தியக் கொம்மி
3.
அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4.
அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5.
அகத்தியர் வைத்தியம் 1500
6.
அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7.
அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8.
அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9.
அகத்தியர் வைத்தியம் 4600
10.
அகத்தியர் செந்தூரம் 300
11.
அகத்தியர் மணி 4000
12.
அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13.
அகத்தியர் பஸ்மம் 200
14.
அகத்தியர் நாடி சாஸ்திரம்
15.
அகத்தியர் பக்ஷணி
16.
அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17.
சிவசாலம்
18.
சக்தி சாலம்
19.
சண்முக சாலம்
20.
ஆறெழுத்தந்தாதி
21.
காம வியாபகம்
22.
விதி நூண் மூவகை காண்டம்
23.
அகத்தியர் பூசாவிதி
24.
அகத்தியர் சூத்திரம் 30 போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25.
அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26
அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அகத்தியர் பரிபூரணம் ஞான காவியம் வாத காவியம் 1000 வைத்திய காவியம் 1500 என்பன போன்ற பல நூல்கள் இவர் பெயரில் கிடைக்கின்றன.
 அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்: தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1.
தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2.
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3.
தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4.
விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5.
கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6.
சித்த வைத்திய சிகரமே போற்றி!
7.
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8.
இசைஞான ஜோதியே போற்றி!
9.
உலோப முத்திரையின் பதியே போற்றி!
10.
காவேரி தந்த கருணையே போற்றி!
11.
அகத்தியம் தந்த அருளே போற்றி!
12.
இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13.
அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14.
அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15.
இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16.
இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி! நிவேதனம்: பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாகஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:
1.
இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2.
கல்வித்தடை நீங்கும்.
3.
புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4.
முன்வினை பாவங்கள் அகலும்.
5.
பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6.
பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7.
பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8.
சகலவிதமான நோய்களும் தீரும்.
9.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைகு ஏற்ற தத்துவம்! மனிதன் நெறிப்படி நடந்து மற்ற அறங்களையும் கடைப்பிடித்து வந்தால் அவன் அடைய வேண்டிய நற்பயனை அடைந்து விடமுடியும் என்பதே சித்தர் நெறி.உடலைப் பேண வேண்டும்.  பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான். அவனை அறிந்து கொள்ள முற்படவேண்டும்.
தானென்ற வஸ்துவையும் தவிர வேறே
சாதகந்தான் இல்லை யென்று சஞ்சலித்து
பானென்ற சத்தியமாம் வாக்குக் காயம்
பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று
ஆனென்றே இருக்கிறதை ஆத்திக மென்பார்
அன்னாதார சரீரத்தைச் சுலப மாக்க
கோனென்று நிதானித்துப் பின்னை யொன்று கூறாதே சூத்தரம் என்று சொல்லே.  - அகஸ்தியர் வாத சௌமியம் 260.  இந்த உடல் இருக்கிறதே இது அன்னத்தையே ஆதாரமாகக் கொண்டது.  உணவு இல்லையென்றால் உடலும் இல்லை.  அதனால் உண்டு உடலைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளத்தை ஒருமுகப் படுத்தி உடம்பாலும் உரையாலும் உண்மை நெறி தவறாமல் சுத்தமாய்ப் பதிவாய் நிற்பதே ஆத்திகம் என்று கூறுகிறார் அகத்திய மாமுனிவர்.
ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி ஓம் அகதீஸ்வராய விதமஹே பொதிகை சஞ்சராய தீமஹி தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்

 அகத்தியரும் அகத்தியமும்.

                            அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன. முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை. இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படிஅகத்தியம்என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
                             வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் வாதாபே ஜீர்ணோ பவஎன்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான். சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர்காக உருகொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ளஉழவர் கரையில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி அகத்தீஸ்வரம்என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
                                  தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர் என்பது. இவர் பற்றித் தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக் கதைகள் பல. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும்,     சோதிட சாத்திரங்களும்     வழங்குகின்றன.     இவர் முத்தமிழுக்கும் இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர்.
தமிழ் தந்த முனிவர்     இவர் தமிழுக்குச் செய்த பெருந்தொண்டினைப் பாராட்டும் வகையில்,
கம்பர் பெருமான், ‘தமிழ் என்னும் அளப்பரும் சலதி (கடல்) தந்தவன்
தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்என்று பாராட்டினார்.
 யாப்பருங்கலக் காரிகை,தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக் கானார் மலையத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்என்று புகழ்கிறது.
வீரசோழிய ஆசிரியர், ‘அகத்தியன் புவனிக்கு இயம்பிய தண்டமிழ்என்று புகழ்ந்தார்.
                           அகத்தியரின் வருகை அகத்தியர் சிவபெருமான் கட்டளைப்படி தமிழகம் வந்து பொதிகை மலையில் தங்கினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. அகத்தியர் கடல் கொண்ட குமரி நாட்டில் தோன்றியவர் என்பது ஓர் பழஞ்செய்தி. சிவபெருமான் பார்வதியை     மணந்த நாளில்     தேவரெல்லாம்     ஒன்று கூடியமையால்     வடமலை     தாழ்ந்து தென்திசை உயர்ந்தது என்றும், நாவலந்தீவினைச் சமன் செய்வதன் பொருட்டே அகத்தியரைச் சிவபெருமான் இங்கு அனுப்பினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. அகத்தியர் பற்றிய கதைகள்     அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்தியவர் சிவன் என்றும் முருகன் என்றும் கதைகள் உண்டு. இவர் மகேந்திர மலையில் தங்கி ஆகமம் கேட்டார் என்றும் கூறுவர். இவர் பற்றி வழங்கும் கதைகள் மிகப்பல. இவர் விந்திய மலையின் ஆணவத்தை அடக்கினார்; வில்வலன், வாதாபி என்னும் அரக்கர்களை அழித்தார்; விதர்ப்ப மன்னன் மகள் உலோபா முத்திரையை மணந்து சித்தன் என்னும் மகனைப் பெற்றார்; இவர் கமண்டலத்து நீரே காவிரி ஆயிற்று. இப்படிப் பல கதைகள் உள்ளன. சங்கப்புலவர்     இவர் முதற் சங்கத்திலும் இடைச் சங்கத்திலும் வீற்றிருந்தவர் என்றும், அவ்விரு சங்கத்திற்கும் அகத்தியமே இலக்கணம் என்றும் கூறுவர். இவர் பொதிகையில் தமிழ் வளர்த்தமை பற்றி வால்மீகியும் கம்பரும் பாராட்டுகின்றனர். 
                              அகத்தியச் சூத்திரங்கள்     அகத்தியச் சூத்திரங்கள் என உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப் பட்டன பல உள்ளன. ஆனால், அவற்றின் நடையும், பொருளும் ஐயத்திற்கு இடமானவையாகும். இவை பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் சூத்திரங்களைக் காணுங்கள். ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும் சாலும் மூன்றாம் வேற்றுமைக்கு.... அகத்தியரின் மாணாக்கராகக் கருதப்படும் தொல்காப்பியர் ஒடு உருபை மட்டுமே மூன்றாவதன் உருபாகக் கூறினார். ஓடு என்ற வடிவத்தையோ ஆல் உருபையோ அவர் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில் ஆல் உருபு இல்லை. இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள் இன்றாகில் எண்ணெயும் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம் இதில் உள்ள இலக்கியம் என்பது பிற்காலச் சொல்.எள் என்ற வடிவம் சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் இல்லை. மாறாக எண் என்றே உள்ளது. இச்சான்றுகள் அகத்தியர் பெயரால் வழங்கும் சூத்திரங்கள் பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதனைக் காட்டும்.

அகத்தியம்.

                 அகத்தியம்  அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன.இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.
அகத்தியரின் மாணவர்கள்.
1.
செம்பூண்சேய்
2.
வையாபிகன்
3. அதங்கோட்டாசான்
4.
அபிநயனன்
5.
காக்கை பாடினி
6. தொல்காப்பியர்
7.
வையாபிகன்
8.
பனம்பாரனார்
9.
கழாகரம்பர்
10.
நத்தத்தன்
11.
வாமனன்
12.
துராலிங்கன்

                   அதங்கோட்டாசான் - முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில்,புலி,மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார். தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது. அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள்.கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட "அகத்தியர்" தலைமைதாங்கி நடத்தி வந்தார்.அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர். தொல்காப்பியர் அதங்கோட்டாசான் துராளிங்கன் செம்புத்செய் வையாபிகன் வாய்ப்பியன் பணம்பாரன் கலாரம்பன் அவினயன் காக்கை பாடினியன் நட்டதன் வாமணன் இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைக்கிறோம்.'கபாடபுரத்தில் ',"அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்."அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் அகத்தியர்.
                              இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து,சொல்,பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.
பணம்பாரரின் கருத்து
தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து
இதன் விளக்கம் யாதெனில் மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம,அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.
 இளம்பூரணரின் கருத்துதொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார். அடைமொழி இன்றி தனிமொழியாக "அதங்கோடு" என்கிற ஊர் திகழ்கிறது.அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் "அதங்கோடு" என உறுதி செய்யப்பட்டுள்ளது.
 கொ.கோவிந்தநாதன் கருத்துபுலவர் கொ.கோவிந்தநாதன் அவர்கள் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அதன்கோட்டை சார்ந்தவர் என்பதை தனது இளமை பருவம் முதல் அதாவது 1972-இம் ஆண்டு முதல் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து தமிழ் கூறு நல்லுலக வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் செய்து வருகிறார்.
அதங்கோட்டாசான் தமிழ் மன்றம் தமிழறிஞர் அதங்கோட்டாசானை நினைவு கூரும் வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் மன்றம் அவர் பெயரில் சீரிய முறையில் இயங்கி வருகிறது. 
                              
                                    தொல்காப்பியர் தொன்மைக்(முந்தைய) காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது பழமொழி ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்தத காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன். எனவே, தொல்காப்பியன் எனப்பட்டான். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப் படுகிறார்.தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார். தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஜயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார். வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார். "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும் கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. இப் பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு,  சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்புகொண்டது. இன்றைய அகழாய்வுகளும், கல்வெட்டு ஆய்வுகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் நூல்கள் கிறித்தவ ஊழிக்கு முற்பட்டனவே என நிறுவுமாறு சான்றுகள் மிகப்பல கிடைத்து வருகின்றன. இதனால், இம் முடிவில் தொடர் ஆய்விலேயே இருந்த பேரறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன், தினமலர் கிருஷ்ணமூர்த்தி, ஆர். நாகசாமி போன்றவர்களும் தமிழ் மொழியியல் மரபுவழி அறிஞர்களும் இன்று கிறித்தவ ஊழிக்கு முற்பட்ட காலம் என்பதை ஏற்கின்றனர். இந்நிலையில், தொல்காப்பியர் காலம் கிறித்துவுக்குப் பிற்பட்டது என்பார் கூற்று, சான்றற்றது என விட்டுவிடத்தக்கதாகிறது. கிறித்துவுக்கு முற்பட்டது என்ற முடிவிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
க.வெள்ளை வாரணர் கி.மு. 5320
மறைமலையடிகள் கி.மு. 3500
கா.சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000
ச.சோ.பாரதியார் கி.மு. 1000
க.நெடுஞ்செழியன் கி.மு. 1400
மா.கந்தசாமி கி.மு.1400
கே.கே.பிள்ளை கி.மு. 400
மு.வரதராசனார் கி.மு. 500
ஞா.தேவநேயப் பாவாணர் கி.மு.700
சி.இலக்குவனார் கி.மு.700
இரா.இளங்குமரன் கி.மு.700
தொல்காப்பியர் காலத்தின் ஆய்வில் கீழ் எல்லையாக கி.மு.7-ஆம் நூற்றாண்டைக் கொள்ளுதல் தகும். தொல்காப்பியம் என்ற இலக்கிய வரலாற்று "உரைநடைத் தொல்காப்பிய' நூலில் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), க.வெள்ளை வாரணர், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது. சங்கப் பாடல்களுக்கு முற்பட்டது என்பதைப் பல சான்றுகளால் நிறுவியுள்ளார். சி.இலக்குவனார், தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் முற்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார். இவையும் இவை போன்ற செய்திகள் எளிதில் மறுக்கக்கூடியதே. பாணர், பொருநர் போன்றவர்களின் ஆற்றுப்படைப் பாடல்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஆனால், அவர்களின் பாடலுக்கு இலக்கிய வடிவம் தந்து, புலவர்கள் அவர்கள் பாடலைப்போல பாடியவையே பத்துப்பாட்டில் உள்ளன. தொல்காப்பியர் செய்யுள் வடிவமான பாவகைகளைக் கூறும் விளக்கம் அனைத்தும், அவர் தமக்கு முந்தியவற்றைக் கண்டு கூற முற்படுவதை உணர்த்துகின்றன. பிற்கால யாப்பிலக்கண நூல்களைப்போல வரையறைப்படுத்திக் கூறவில்லை. இலக்கணம் கூறும் முறை தொடக்க காலத்தைக் காட்டுகிறது. இதனால் முதற்கண் சங்கப் பாடல்களின் காலத்தை ஒரு முடிவு செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் கி.மு. 5, 4-ஆம் நூற்றாண்டுகள் என்பதை, நடுநிலையாளர் அனைவரும் ஒப்புவர் என்பது இயற்கையே.
                             தொல்காப்பியர் காலம்: சங்கப் பாடல்களின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பதை அதன் மேல் எல்லையாகக் கருதலாம். தொல்காப்பியம் அச் சங்கப் பாடல்களுக்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டிருக்க வேண்டும் என்பதும் முன்பே குறிக்கப்பட்டது. இங்கு காட்டப்பட்டுள்ள சான்றுகளின் படியும் சான்றோர் பலரது ஆய்வுகளின் படியும் உற்று நோக்கினால், தொல்காப்பியர் காலம் கி.மு.7-ஆம் நூற்றாண்டுக்கும்  8-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது எனல் பொருந்துவதாகும். அதனால் கி.மு. 31, திருவள்ளுவர் காலம் என முடிவு செய்யப்பட்டதுபோல கி.மு. 711 தொல்காப்பியர் காலம் என முடிவு செய்யலாம். தொல்காப்பியர் காலம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. எனினும் திருவள்ளுவர் காலம் பற்றி ஒரு முடிவு செய்ததும் திருவள்ளுவர் திருவுருவம் பற்றிய கருத்துப் போலவும் தொல்காப்பியர் திருவுருவம் பற்றி (கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் போன்ற வடிவம்) ஒரு கருத்துடன் முடிவுசெய்தலும் திருவள்ளுவர் நாள் போல, தொல்காப்பியர் நாள் ஒன்றைக் குறிப்பது அச்சான்றோரை-தமிழ்ப் புலவோரில் முதற்குடி மகனெனப் போற்றத் தகுந்த பெருமையுடையவரை ஆண்டுதோறும் நினைந்து கொண்டாட வாய்ப்பாகும்.
                              தொல்காப்பியர் நாள்: தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தில், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் முன்னிலையில், தொல்காப்பியர் தம் நூலை அரங்கேற்றினார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, அரச அவையத்தில் (சங்கத்தில்) புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்ட மரபு மிகத் தொன்மைமிக்க காலத்திலிருந்து வழக்கிலிருந்தமை அறியப்படுகிறது. பாண்டிய நாட்டு மதுரையில் இம்மரபு தொடர்ந்து நடந்ததைக் கலித்தொகையால் அறிகிறோம். கலித்தொகையில், பாலைக்கலியில், பாலை பாடிய பெருங்கடுங்கோ இதைக் குறிப்பிடுகிறார். தலைவன் பிரிந்து சென்ற போது திரும்பி வருவதாகக் கூறிச் சென்றது இளவேனிற் காலமாகும். ஆனால், தலைவன் இளவேனிற் பருவம் வந்தும், கூறியபடி வந்திலன்; சிறிது காலம் தாழ்த்தது. "அப்பருவம் வந்ததும், தலைவரும் வருகிறார் பார் வருந்தாதே' எனத் தோழி கூறுவதாக இப்பாடல் உளது. தரவு என்ற முதற்பகுதியில் இளவேனில் வருணனை, பிறகு மூன்று தாழிசைகளில் இவ் இளவேனிற் பருவமல்லவா அவர் வருவதாகச் சொன்னது; அவரும் மறவாது வந்தனர் எனக் கூறும் ஆறுதலுரை எனப் பாட்டுப் பொருளமைப்பு உள்ளது. இதில் வரும் மூன்று தாழிசைகளும் கால (சித்திரை, வைகாசி) வருணனைகளாக உள்ளன. முதல் தாழிசை, வையையாறு பூத்துக்குலுங்கும் காலம்; இரண்டாம் தாழிசை, காதலர் காமன் விழாக் கொண்டாடும் காலம்; மூன்றாம் தாழிசை, புலவர்கள் புதிய நூல்களை அரங்கேற்றும் காலம். இங்கு மூன்றாம் தாழிசைதான் உற்று நோக்கத்தக்கது.
""
நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ?
பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்
கடரிழாய் நமக்கவர் வருதுமென்று உரைத்ததை
(
கலி:35)
நிலன் நாவில் திரிதரூஉம் - உலகோர் நாவிலெல்லாம் பலவாறு புகழ்பாடும், நீண்ட மாட மாளிகைகளையுடைய இக் கூடல் மாநகரிலுள்ளார் புலவர்களின் நாவில் பிறந்த புதிய சொற்களை - நூல்களைக் கேட்டு இன்பம் நுகர்ந்து மகிழும் இளவேனிற் காலமல்லவா? புலன் நாவில் பிறந்த புதிய சொல் - புதிய புதிய நூல்களைப் புலவர்கள் புதிதாக இயற்றி வந்து, அவர்களே அவற்றை எடுத்துக் கூறி அரங்கேற்றுதல், புதிதுண்ணல் - அரசனும் மக்களும் அப்புதிய பனுவல்களைக் கேட்டு, நுகர்ந்து இன்புறுதல், இவ்வாறு அரங்கேற்றம் இளவேனிலில் நடந்ததென்றால், இது நீண்ட நாள் மரபாக இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியர், பாண்டியன் அவையில் அரங்கேற்றிய நாளும் இதுவாகவே இருக்கும் எனக் கொள்ளலாம்.
எனவே, கி.மு. 711, சித்திரை மாதம், முழுமதிநாள் (சித்ரா பெüர்ணமி) தொல்காப்பியர் தம் ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய நாளாக மட்டுமன்றி, அவரது பிறந்த நாளாகவும் கொண்டு, கொண்டாடுதல் பொருத்தமுடையதாகும்.

திருமூலர் .

                        திருமூலர்  இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் இவரே முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது திருவாவடுதுறையில் பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சதுரகிரி மலை பல சித்தர்கள் தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால்தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும்.
                     திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவர் நெடுங்காலம்     தவத்தில் இருந்து ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினார் என்பர். இவர் காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு. இவர் சீடர்களில் காலாங்கியும், கஞ்சமலைச் சித்தரும் இன்றியமையாதவர்கள். இவரது சமாதி சிதம்பரத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், போகர் என்னும் சித்தர். திருமூலர் இயற்றியவை:
திருமந்திரம்,
வைத்தியம் ஆயிரம்,
கருக்கிடை வைத்தியம் 600,
பெருங்காவியம் 1600 என்பனவாகும்.
திருமந்திரம்,யோகத்தின் படிநிலைகளையும்,சித்தாந்த வேதாந்தக் கருத்துகள்,மந்திர,தந்திர முறைகளையும் விளக்கியமைக்கிறது.
திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றி,திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் திருவந்தாதி,சதுரகிரித் தலபுராணம் போன்ற நூல்கள் குறிப்பிடும். சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர்.
                                  இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார். பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் திருமந்திரம்எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.
 அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.
1.
திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2.
திருமூலர் சிற்ப நூல் – 1000
3.
திருமூலர் சோதிடம் – 300
4.
திருமூலர் மாந்திரிகம் – 600
5.
திருமூலர் சல்லியம் – 1000
6.
திருமூலர் வைத்திய காவியம் – 1000
7.
திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8.
திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9.
திருமூலர் சூக்கும ஞானம் – 100
10.
திருமூலர் பெருங்காவியம் – 1500
11.
திருமூலர் தீட்சை விதி – 100
12.
திருமூலர் கோர்வை விதி – 16
13.
திருமூலர் தீட்சை விதி – 8
14.
திருமூலர் தீட்சை விதி – 18
15.
திருமூலர் யோக ஞானம் – 16
16.
திருமூலர் விதி நூல் – 24
17.
திருமூலர் ஆறாதாரம் – 64
18.
திருமூலர் பச்சை நூல் – 24
19.
திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் நடுவணை ஞானம் 30
திருமூலர் ஞானக் குறி 30
திருமூலர் சோடச ஞானம் 16
திருமூலர் ஞானம் 11
திருமூலர் குளிகை 11
திருமூலர் பூஜாவிதி 41
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100... என்ற நூல்களும் இயற்றியதாக சொல்லப் படுகிறது.போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.யோக மார்க்கமும், ஞானத் தேடலும் உள்ளவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றி பல கதைகள் வழக்கத்திலுள்ளன. அதில் எதை நம்புவது என்பதில் ஐயம் எழுவது இயற்கையே. ஆகவே அது பற்றிய தேடல்களை விட்டு விடலாம்.
                        திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மை, அது போதும்.. இவர் நந்தீசரின் சீடராவார். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை "மந்திர மாலை" என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர். திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார். தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.
 "யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப்
பற்றத் தலைப்படும் தானே" - திருமந்திரம்.
இவர் மேலை சிதம்பரம் என்னும் இடத்தில் சமாதி அடைந்ததாக சொல்லப் படுகிறது.
                        ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி
ஓம் ககன சித்தராய வித்மஹே பிரகாம் சொரூபினே தீமஹி தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்
1)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
2)
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
3)
அன்பே சிவம் ஆகியவைகளே ஆகும்.
திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொண்டங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றபடுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டுவந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயற்று பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கு சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கலாந்தில் இன்று அருங்காட்சியத்திலும் ஒன்றாக சாட்சி கூறுகிறது. இவரது திரு நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், பின்னர் அந்த நூல் "திருமூலர் திருமந்திரம்" என்று வழங்கப்பட்டது. இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது பின்னர் வந்த பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருமூலரின்  திருமந்திரம்.

                     திருமூலரின்  திருமந்திரம் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும், திருவள்ளுவரின் குருவாகவும் அறியப்படும் திருமூலரால் இயற்றப்பட்டது திருமந்திரம் ஆகும். இந்நூல் சைவ திருமுறைகளுள் பத்தாம் சைவ திருமுறையாக போற்றப்படுகிறது. திருவாவடுதுறையிலிருந்தவாரே இந்நூல் இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில்(இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும். நூல் பெருமை: இந்நூ்ல பண்டைய இந்திய சித்தர்களின் அறிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. இந்நூ் இறைவனை துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம். தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். யோகியாகவும் எல்லாம் வல்ல சித்தராகவும், பலகலை அறிந்த ஞானியாகவும், அருள் நிறைந்த நாயன்மாராகவும் விளங்கினார்! இறைவன் பெரிய கருணையினால், உலகுக்கு அளித்த ஆகமப் பொருளை அருந்தமிழ் மறையாய் மூவாயிரம் மந்திரங்களில் நமக்குத் தந்துள்ளார்.
                               திருமந்திரம் 10ஆம் திருமுறை. தோத்திரமாகவும், சாத்திரமாகவும், யோகநூலாகவும், ஞானநூலாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், சமய, சமூக, ஒருமைப்பாட்டு நல்லிணக்க நூலாகவும் திகழ்ந்து உலகுக்கு உயிராக விளங்குகிறது திருமந்திரம். "இறைவனே தமிழொடு - வடமொழியிலும், ஆரியத்தொடு தமிழிலும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே" என்கிறார் முத்தமிழ் வேதம் தத்துவம் சதாசிவம். திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் இயற்பெயர் சுந்தரர். தமிழகத்தில் பொதிகை மலையில் - அகத்தியர் - தமிழ்ச் சங்கத்தில் உலக நூல்களைக் கற்றார். பின், கயிலைக் குருகுலம் சென்று, ஞான நூல்களான அருமறைகள், ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்றார். நந்தி அருளால் 'நாதன்' என்ற பட்டம் பெற்று, சுந்தர நாதர் ஆகித் தவம் செய்தார்.
                கயிலையில் இவருடன் பாடங்கேட்டவர்கள்: சனகர் - சனந்தனர்- சானாதனர் - சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய ஏழுபேருடன், தானும் உடனிருந்து கற்றதாக அகச்சான்று கூறுகிறார். பதஞ்சலி - வியாக்கிர பாதருடன் இவர் தில்லைக்கு வந்து திருக்கூத்து தரிசனம் செய்தார். மீண்டும் கயிலை சென்றார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலே ஆசிரமங்கள் அமைத்துக் தங்கிவிட்டனர். தில்லைக் கோபுரத்தில் - திருமூலர்சிலையை காணலாம். இரண்டாவது முறையாக அகத்தியரைக் காண பொதிகை நோக்கி வருகிறார். 'குறு முனிபால் உற்றதொரு கேண்மையினால் உடன் சில நாள் உறைதற்கு, நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார்' என்கிறார் சேக்கிழார். பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும், விளங்குபவர் இறைவன் இதனை மாணிக்கவாசகர், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! என்கிறார் மாணிக்கவாசகர் உடம்பார் அழியின் உயிரால் அழிவர்  திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள திருமந்திரம் என்ற ஒப்பற்ற தத்துவ நூலை இயற்றியவர்தான் திருமூலர். காயமே இது பொய்யடா...  வெறும் காற்றடைத்த பையடாஎன்ற மாயாவாதத்துக்கு எதிராக, அறிவு பூர்வமான யதார்த்த வாதத்தை முன்வைத்த சிந்தனைச் சித்தர்தான் திருமூலர். சங்கன்னர் என்ற சித்தரின் அவதாரமாக கருதப்படும் திருமூலர், சிதம்பரம் தில்லை நடராஜரின் சன்னதியில், நீண்ட காலம் நிட்டையில் அமர்ந்துதான், உலகுக்கு மிகச் சிறந்த தத்துவ நூல்களை வழங்கியுள்ளார். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர், பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூடியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும்,
திருமூலர் அறுநூற் றொன்று,
திருமூலர் வைத்தியம்,
திருமூலர் ஞானம்,
திருமூலர் வழலைச் சூத்திரம்,
திருமூலர் பல திரட்டு,
திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தமாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே உடலும், அதில் திரண்டுள்ள ஊனும் எம்பெருமான் கோயில் என்று சொல்லும் திருமூலர், வாயைக் கோபுரம் என்றும், உயிரை சிவனென்றும் சித்தரிக்கிறார். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் அவற்றை கள்ளப் புலன்கள் என்கிறார். இயல்பான மனித வாழ்வின் மூலமாக மேன்மையை அடைய முடியும் என்பதே திருமூலரின் சாரமான கருத்து என்று சொல்லலாம். இயற்கைக்கு மாறான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும் மனிதனுக்கு சிறுமைப் பண்புகளைத்தான் அதிகரிக்குமே தவிர, பேரியல்புகளை வளர்க்காது. திருமூலரின் ஞான மார்க்கம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.
 பொதுவாக சித்தர்களின் தத்துவமே, மனித வாழ்விலிருந்து இறைமையை நாடுவதுதான். இறை வாழ்வு என்பதே இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதே சித்தர்களின் சிந்தனை. திருமூலர், அதைக்கொஞ்சம் அழுத்தமாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கிறார். அவர் இயற்றியுள்ள திருமந்திரம், நல்வாழ்விற்கு ஒருமந்திரம். என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது.  முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.   மொழி இல்லாமல் எது நிலைக்கும்?  தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள்.  ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும்.  மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது.  முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்! தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்... முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதியது விரும்பாரன்றே” (திருமந்திரம்) அதனால்தான் அருமலர் மொழியுஞான அமுதர்த செந்தமிழைச் சொல்வாம்என்கின்றார் ஞானவெட்டியான். ஆம்... தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை.  ஞானாமிர்தமாகப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது, “பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து  தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரேஎன்றும் பாராட்டுகின்றார்.  தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார். பொதிகை மேவு மகத்தீர ராலெனது போதத் தமிழ் வாக்கியம்என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார். அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்? “சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு  வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே - செந்தமிழ் நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும் தேவியென்னும் பூரணியே சீர்” (அகத்தியர் ஞானம் 100) என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.
                                     பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார். முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்  இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச் சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ  நாம் பூமி வாழ்ந்த நலம்இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


1 comment: