Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-5

சித்தர்களை பற்றிய தொகுப்புகள் (தொடர்ச்சியும்……முடிவும்.)
        சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர்.சித்தர்கள் யார் யார் என பல்வேறு கருத்துகள் நிகழ்கின்றன?    
  1. திருமூலர்,   2. இராமதேவர்,  3. கும்பமுனி,  4. இடைக்காடர்,  5.தன்வந்திரி,  
6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர், 10. மச்சமுனி,
  
11. கொங்கணர், 12, பதஞ்சலி,
 13. நந்திதேவர், 14. போதகுரு,15. பாம்பாட்டிச் சித்தர்.  
16. சட்டைமுனி,
  17. சுந்தரானந்த தேவர்,   18. கோரக்கர்.இது ஒரு அனைவரும் அறிந்த பட்டியல்.   
 1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 4. சதோகநாதர்,  5. இடைக்காட்டுச் சித்தர், 
 6. குதம்பைச் சித்தர், 7.புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9. மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச் சித்தர்,
11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14.விளையாட்டுச் சித்தர்,
  15. பிரமானந்த சித்தர்,  
16. கடுவெளிச் சித்தர், 17. சங்கிலிச் சித்தர், 18. திரிகோணச்சித்தர்.இது மற்றொரு பட்டியல்.
  
இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.
      
1. வான்மீகர், 2. பதஞ்சலியார்,
 3. துர்வாசர், 4. ஊர்வசி,  5. சூதமுனி, 6. வரரிஷி,  7. வேதமுனி,  8. கஞ்சமுனி,  
9. வியாசர், 10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.
 பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.
1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6.போகர்,
  
7. சட்டைநாதர்,
 8. பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி, 12, அழுகணி,
13. பாம்பாட்டி,
 14. இடைக்காட்டுச் சித்தர்,  15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர்,
19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர்,22. நந்தீசர்,
 23, அகப்பேய்,  24. கொங்கணவர்,
25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி,
31.காகபுசுண்டர்,
 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர்.   (அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர், 
 எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.
இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.
 ஆயினும் பதினெட்டுப் புராணங்கள்,  பதினெட்டுப் படிகள், பதினெண் குடிமை,  பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள்  செய்த நூல்கள் பத்துப்பாட்டு,   எட்டுத்தொகை,  பதினெண்கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.

                       இந்தப் பதினெண் சித்தர் பாடல் தொகுதியினுள் அகப்பேய், அழுகணி,கடுவெளி,  குதம்பை, பாம்பாட்டி, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், காகபுசுண்டர்,  ஞானசித்தர்,  கந்துளிச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர்,  புண்ணாக்குச் சித்தர்,  குதம்பைச் சித்தர், விளையாட்டுச் சித்தர், ஆகிய பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன.ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் அந்த பதினென் சித்தர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சித்தர்கள் ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல்
1. திருமூலர் 2. இராமதேவர் 3. கும்பமுனி 4. இடைக்காடர் 5. தன்வந்திரி 6. வால்மீகி
7.கமலமுனி 8. போக நாதர் 9. மச்ச முனி 10. கொய்கணர் 11. பதஞ்சலி 12. நந்தி தேவர்
13. போதகுரு 14.பாம்பாட்டி 15. சட்டைமுனி 16. சுந்தரானந்த தேவர் 17. குதம்பைச் சித்தர் 18. கோரக்கர்
அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் – 1. கௌதமர் 2. அகத்தியர் 3. சங்கரர் 4. வைரவர் 5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,7.உரோமர் 8. புசண்டர் 9. சட்டைமுனி 10. நந்தீசர் 11. திருமூலர்
12. பாலாங்கிநாதர் 13. மச்சமுனி 14. புலத்தியர் 15. கருவூரார் 16.கொங்கணர் 17. போகர் 18. புலிப்பாணி .
  
                        சித்தர்கள் வேறுபாடுகள் அற்றவர்கள் இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக  ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார். அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ்,   வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள்.மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். 108 சித்தர்களின் பெயர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில்வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்தமாமுனிகளின் பெயர்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு தெரிந்த பழக்கமான பலசித்தர்கள் இருப்பார்கள்.

 1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6.மச்சமுனி.7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.8. சட்டைமுனி சித்தர்.9. அகத்தியர்.10. தேரையர்.11. கோரக்கர்.12. பாம்பாட்டி சித்தர்.13. சிவவாக்கியர்.14.உரோமரிசி.15. காகபுசுண்டர்.16. இடைக்காட்டுச் சித்தர்.17. குதம்ப்பைச் சித்தர்.18.பதஞ்சலி சித்தர். 19. புலத்தியர்.20. திருமூலம் நோக்க சித்தர். 21. அழகண்ண சித்தர். 22. நாரதர். 23. இராமதேவ சித்தர். 24. மார்க்கண்டேயர்.25. புண்ணாக்கீசர்.26. காசிபர். 27. வரதர். 28. கன்னிச் சித்தர்.29. தன்வந்தரி.30. நந்தி சித்தர் 31. காடுவெளி சித்தர்.32. விசுவாமித்திரர் .33. கௌதமர் 34. கமல முனி 35. சந்திரானந்தர் 36. சுந்தரர்.37. காளங்கி நாதர் 38. வான்மீகி 39. அகப்பேய் சித்தர் 40. பட்டினத்தார் 41. வள்ளலார் 42. சென்னிமலை சித்தர் 43. சதாசிவப் பிரம்மேந்திரர் 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் 45. ராகவேந்திரர் 46. ரமண மகரிஷி.47. குமரகுருபரர் 48. நடன கோபால நாயகி சுவாமிகள் 49. ஞானானந்த சுவாமிகள் 50. ஷீரடி சாயிபாபா  51. சேக்கிழார் பெருமான் 52. ராமானுஜர் 53. பரமஹம்ச யோகானந்தர் 54. யுக்தேஸ்வரர் 55. ஜட்ஜ் சுவாமிகள் 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. 57. கண்ணப்ப நாயனார்.58. சிவப்பிரகாச அடிகள்.59. குரு பாபா ராம்தேவ் 60. ராணி சென்னம்மாள். 61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி 62. குழந்தையானந்த சுவாமிகள்.63. முத்து வடுகநாதர். 64. இராமதேவர்  65. அருணகிரிநாதர். 66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் 67. மௌன சாமி சித்தர் 68. சிறுதொண்டை நாயனார்.69. ஒடுக்கத்தூர் சுவாமிகள். 70. வல்லநாட்டு மகாசித்தர்.71. சுப்பிரமணிய சித்தர்.72. சிவஞான பாலசித்தர். 73. கம்பர்.74. நாகலிங்க சுவாமிகள்.75. அழகர் சுவாமிகள்.76. சிவஞான பாலைய சுவாமிகள் 77. சித்தானந்த சுவாமிகள். 78. சக்திவேல் பரமானந்த குரு79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் 80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள் 82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் 83. பகவந்த சுவாமிகள்.84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள் 86. தயானந்த சுவாமிகள் 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
  90. லஷ்மண சுவாமிகள். 91. மண்ணுருட்டி சுவாமிகள்.92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள். 93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).94. கோட்டூர் சுவாமிகள்.95. தகப்பன் மகன் சமாதி
 96. நாராயண சாமி அய்யா சமாதி 97. போதேந்திர சுவாமிகள் 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர் 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் 102. குகை நாச்சியார் மகான். 103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.106. பெரியாழ்வார் சுவாமிகள்
  .107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.இந்தப்பட்டியல் படித்து தொகுக்கப்பட்ட்து என்பதால் ஏதேனும் சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு சித்தர்களைப் பற்றி செய்திகள் தெரிந்தாலோ எனது மின்னஞ்சலுக்கு தெரிவிக்க மிகவும் தாழ்மையுடன் அழைக்கிறேன்.
சித்தர்களின் சித்துவிளையாட்டுகள்.
                  சித்தர்களின் சித்துவிளையாட்டுகள் சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த சித்திகளில் எட்டு பெரும் சித்திகள் உள்ளன. இதை அட்டமா சித்திகள் என கூறுகின்றார்கள். அவைகளை அறிந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள்.

அட்டாங்க யோகங்கள்
 
இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை (பிறர் பொருள் விரும்பாமை) புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - தவம், மனத்தூய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.
ஆதனம் - பத்திரம், கோமுகம், பங்கயம் , கேசரி, சுவத்திகம் (மங்கலம்), சுகாதானம் (சுகமும்,திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறிருத்தல்), வீரம், மயூரம் முதலிய இருப்பினுள் ஒன்றாயிருத்தல்.
பிராணாயாமம் - பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல், இரேசக,பூரக கும்பங்களால் தடுத்தல் (இரேசகம் என்பது மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்பது வாயுவை உட்செலுத்துதல்). இதுவும் இரண்டு வகைப்படும்.1- அகற்பம் - மந்திரமில்லாது நிறுத்தல். 2- சகற்பம் - பிரணவத்துடன் காயத்திரி மந்திரத்தை, உச்சரித்து நிறுத்தல்.
பிராத்தியாகாரம் - மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.
தாரணை - உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்; இதற்கு 'முழங்கால்,குதம், இதயம்,கண்டம்,கபாலம்' என்னும் ஜந்து இடங்களிலும் ஜம்பூதங்களை (நிலம், நீர், தீ, காற்று, வானம்) ஆகியவைகளையும் ஒடுக்கி அவ்விடங்களில் முறையே பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் பஞ்ச மூர்த்திகளையும் இருத்திப்பாவித்தல் எனவும் கூறுவர்.
 தியானம் - ம்புலத்தையும், அந்தக்கரணத்தையும் அடக்கி, ஒரு கரத்து மழுவும் ஒருகரத்துமானும் ஏந்தியதாய், அபயவரத அத்தங்களையுடையனவாய் சதுர்ப்புயம்,காளகண்டம்,திரிநேத்திரம் உடையனவாய் விளங்கும் சிவமூர்த்தியைத் தியானித்தலாம். சமாதி - ஓரிடத்தேனும் மந்திரத்தோடு நோக்காமல் எங்கணும் சிவவியாபகமாய், நோக்கி, அவ்வஸ்துவையும், தன்னையும் பிரிவறப் பொருத்துதல். இத்தகு அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.

 அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

1. அணிமா – அணுவைக் காட்டிலும் சிறியதாக வடிவெடுத்தல்.
2. மகிமா – மலையை விட பெரிய வடிவெடுத்தல்.
3. கரிமா – மெல்லிய வடிவாக இருத்தலும்
, கைகளால் தூக்க இயலாத அளவிற்கு கனமாக இருத்தலும், நுகர்ச்சியின் தொடக்குகள் பற்றாமல் இருப்பதுவுமான ஆற்றல்.
 4. இலகிமா – காற்றை விட மெல்லிய வடிவெடுதல்.
5. பிராப்தி – நினைத்த பொருளை
, நினைத்த நேரத்திலே பெரும் ஆற்றல்.
6. பிராகாமியம் – பல பல வடிவங்களை எடுத்தலுக்கும்
, அளவுக்கதிகமான வலிமை அல்லது ஆற்றல் உள்ளமைக்கும் இப்படி பெயர்.
7. ஈசாத்துவம் – தேவர்கள் முதல் சிறு உயிர்கள் வரை தன்னை வணங்கி வழிபடும் நிலை.
8. வசித்துவம் – தன்னை கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதும்
, கோள்களையும், மீன்களையும் தன் வசம் செய்வதுமான ஆற்றல். வசியம் என அனைவராலும் அறியப்பட்டுள்ளது. இதைவிட சிறந்த பல்வேறான சித்திகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கூடுவிட்டு கூடுபாயும் நிலை. சித்தர்கள் இந்த அட்டமா சித்திகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் சித்தர்களின் தனிப்பட்ட வாழ்கைகளைகளை விவரிக்கும் போது உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சித்தர்களின் மதம் –எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்ற மதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள் தெரிந்திருக்கின்றன.சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள். அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள். இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும் உண்டு.இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும் வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லுகின்றன.
 குறிப்பாக நான்கு வழிகள்.
 1. சாலோகம் – இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை.
2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.
3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு.
4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை. அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார். பாம்பாட்டி சித்தர்
, அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர். இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே.சித்தர்களினால் ஏற்பட்ட பலன் –சித்தர்களின் அறிவு திறத்தால் ரசவாதம், நாடிசோதிடம், பட்சி சாத்திரம், சித்த வைத்தியம், யோகா, தியானம் போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் போல சிலவற்றை அமைத்து சித்தர்கள் தங்களது துறையில் வல்லுனர்கள் ஆனார்கள் என்கின்றனர்.அது மட்டுமல்லாது உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள்,பட்டை வகைகள்,பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க காட்டிலும் குகையிலும் ஆராட்சி செய்ததால் மக்களுக்கு தெரியாத பல அரிய மூலிகைகளையும், முறைகளையும் சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

                         சதுரகிரி மலையில் வாழ்ந்த சித்தர் கூட்டம் பற்றி அகத்தியர் ஆயிரத்து இருநூறு என்ற நூல் கூறும் வரலாறு இங்கே எண்ணற்பாலது.
1.
 எக்கிய மா முனி என்பவர் அகத்தியருக்கு சிங்கி வித்தை கற்றுக்கொடுத்தார். அதனால் அகத்தியர் சிங்கி வித்தையில் குருமுடித்தார்.
2.
 சிங்கி வித்தை கருவூரார்க்கு உணர்த்தப்பட்டு அவர் சிங்கி வேதைமுடித்து போகத்தில் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார். 3. கொங்கணர் வீரம் என்கிற பாடாணத்தால் வேதை முடித்து சிவயோக நிட்டையில்பலகாலம் இருந்து மேருகிரியில் பூரணத்தில் நின்று ஒடுங்கினார்.
4.
 போகர் ஏமரசம் கண்டு அதனை உண்டு ஒரு கோடி காலம் சிவயோகம் இருந்துபூரணத்தில் தங்கினார்.
5.
 கயிலாசச் சட்டைமுனி சவுக்காரச் சுண்ணம் கண்டு வேதை பார்த்து கோடிகற்பகாலம் இருந்து சிவயோகியாய் சாலோக பதிவியை அடைந்தார்.
6.
 கமல முனி அண்டச்சத்து கண்டு மெழுகுபண்ணி வேதை பார்த்து மதியமிர்தமுண்டு மேருவில் தவம் பண்ணி சதகோடி யுகாந்தம் இருந்து கமலமலரில் சென்று பரவெளியில் கலந்தார்.
7.
 மச்ச முனி கெந்தியில் சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து சடம் அழியாமல் சிவயோகத்தில் இருந்து சிவமயமானார்.
8.
 திருமுலர் கௌரி சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து கோடான கோடி காலம் பூரணமாய் நிட்டை கூடி மணி மகுட முடியில் சென்று பூரணத்தில் அடங்கினார்.
9.
 நந்தீசர் அயக்காந்த சத்து எடுத்து வேதைபார்த்து செந்தூரித்து பூரணத்தில் நின்று வெகு கோடி யுகாந்த காலம் இருந்து சோதியில் கலந்தார்.
10.
 சுந்தரானந்தர் களி உப்பு வாங்கி நீற்றி சுண்ணாம்பாக்கி நவலோக வேதை பார்த்து தன்னிலை அறிந்து பொற்கமலம் மீதேறி அனந்தகாலம் தவம் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.
11.
 கோரக்கர் நவக்கிரக பூசை பண்ணி பூரணத்தில் சொக்கி கோடியுகம் நிட்டை கூடி கைலாயம் சென்று பூரணத்தில் இருந்து பரமபதம் அடைந்தார்.
12.
 காலாங்கி
13.
 புண்ணாக்கீசர்
14.
 வியாக்ரபாதர்
15.
 கூனக் கண்ணர்
16.
 சிவவாக்கியர்
17.
 இடைக்காடர்
18.
 சண்டிகேசர் ஆகியோர் வாசியோகம் செய்து மௌனமாகி சோதியில் ஏழு பேரும் சிவபூசை செய்து மௌனமாகி சோதியில் கலந்தார்.  இதனால் பதினெண்சித்தர்கள் யாவர் என்பதும் அவர்கள் நவபாடாணங்களை வேதை செய்து குரு முடித்து காயகல்பம் உண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்து சோதியில் கலந்தார்.


No comments:

Post a Comment